fbpx

கணியம் அறக்கட்டளை நவம்பர் 2018 மாத அறிக்கை

தொலை நோக்கு – Vision

தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்

பணி இலக்கு – Mission

அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.

நிகழ்ச்சிகள்

FreeTamikEbooks.com வெளியீடுகள்

  • இந்த மாதம் – 11
  • மொத்தம் – 472

பங்களித்தோர்

  • ச. இராஜேஸ்வரி
  • லெனின் குருசாமி

கணியம் கட்டுரைகள்

  • இந்த மாதம் – 18
  • மொத்தம் – 671

பங்களித்தோர்

  • நித்யா
  • கலாராணி
  • ச. குப்பன்

கணியம் காணொளிகள்

இந்த மாதம் – 12

பங்களித்தோர்

  • நித்யா
  • பாலாஜி

ஒலியோடை

  • இந்த மாதம் – 1
  • மொத்தம் – 2

விக்கிமூலம்

சென்ற மாதம் 7 தமிழ் மாணவர்களுக்கு விக்கி மூலத்தில் மின்னூல்களை மெய்ப்புப் பார்க்க பயிற்சி அளித்திருந்தோம். அவர்களுள் ஒருவர் (திவ்யா) சிறப்பான முறையில் ஒரு மின்னூலை மெய்ப்பு பார்த்து முடித்துள்ளார். அவர்களுக்கு தொடர் பயிற்சி அளித்து வரும் பாலாஜி அவர்களுக்கு நன்றி.

விக்கி மூலம் காணொளிகள்

விக்கி மூலத்தில் பங்களிக்க விரும்பும் அனைவரும் எளிதில் கற்றுக் கொள்ளும் வகையில் சிறு காணொளிகளை, பாலாஜி உருவாக்கி வெளியிட்டு வருகிறார். அவை இங்கே wp.me/p26fdA-1Md

மென்பொருட்கள்

  1. FreeTamilEbooks.com ல் இருந்து நேரடியாக கிண்டிலுக்கு மின்னூல்களை அனுப்ப உதவும் Send2Kindle மென்பொருளில் இருந்த ஒரு பாதுகாப்புப் பிழை சரிசெய்யப்பட்டது. எவரும் XSS எனும் முறை வழியே சர்வரின் பயனர் அணுக்கம் பெறும் வாய்ப்பு இருந்தது. அதற்கான தீர்வுகள் காணப்பட்டு, அவை நிறுவப்பட்டன.. இச்சிக்கலை கண்டறிந்த அபுதாகிர் அவர்களுக்கு நன்றி.
  2. DNS சர்வரின் ஒரு சிக்கல் காரணமாக, FreeTamilEbooks.com சிலருக்கு கிடைக்காமல், வேறு தளங்களுக்கு மாற்றப்பட்டு வந்தது. இரவி சர்வர் குழுவிடன் செயல்பட்டு சரி செய்தார். லோகேஷ், விக்னேஷ், தனசேகர் ஆகியோருக்கு நன்றி.
  3. இணைய வழி உரை ஒலி மாற்றி ( TTS on Web ) மென்பொருள் தயாராகி வருகிறது. தற்போது, சோதனைப் பதிப்பு நிலையில் உள்ளது. ஓரிரு வாரங்களில் வெளியிடுவோம்.
  4. எழுத்துணரியின் விண்டோசு வடிவம் உருவாகி வருகிறது. அவ்வப்போது கிடைக்கும் விண்டோசு கணினிகளில் சோதித்து வருகிறோம். ஓரிரு வாரங்களில் வெளியிடுவோம்.
  5. பஞ்சாபி விக்கியினர் OCR பணிகளுக்காக ஒரு சர்வர் தரக் கேட்டனர். நூலகம் அறக்கட்டளை சார்பில் ஒரு சர்வர் வழங்கப்பட்டது.

இம்மாத நன்கொடையாளர்கள்

  • பெயரிலி – 1000
  • மகாதேவன் – 5500
  • விஜயகுமார் – 5500
  • த. சீனிவாசன் – 2500 ( open-tamil பயிற்சியில் பெற்ற நன்கொடை)
  • த.சீனிவாசன் – 15,000
  • நூலகம் அறக்கட்டளை – சர்வர் (ரூ 350/மாதம்)

சென்ற மாத இருப்பு – 10,000

மொத்தம் கையிருப்பு – 39,500

செலவுகள்

இன்னும் விக்கிமூலம் பங்களிப்பாளருக்கான ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. டிசம்பர் மாதம் முதல் தொடங்குவோம்.

வங்கிக் கணக்கு விவரங்கள்

Kaniyam Foundation
Account Number : 606 1010 100 502 79
Union Bank Of India
West Tambaram, Chennai
IFSC - UBIN0560618
  • உங்கள் நன்கொடைகளை இந்தக் கணக்குக்கு அனுப்பி, கணியம் அறக்கட்டளை செயல்களை ஆதரிக்க வேண்டுகிறோம்.
  • நன்கொடைகளை அனுப்பியபின், உங்கள் பெயர்,நன்கொடை விவரங்களை [email protected] க்கு அனுப்ப வேண்டுகிறோம்.

மேலும் விவரங்களுக்கு எழுதுக – [email protected]

இந்த அறிக்கையின் ஆங்கில வடிவம் – github.com/KaniyamFoundation/Organization/wiki/Kaniyam-Foundation-November-2018-Report-in-English

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.