fbpx

கணியம் அறக்கட்டளை மார்ச்சு, ஏப்ரல் 2019 மாத அறிக்கை

Report in Tamil

Report in English

கணியம் அறக்கட்டளை மார்ச்சு, ஏப்ரல் 2019 மாத அறிக்கை

தொலை நோக்கு – Vision

தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்

பணி இலக்கு – Mission

அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.

நிகழ்ச்சிகள்

1000 மின்னூல்கள்

1000 மின்னூல்களை ஒருங்குறி வடிவில் வாங்குவதற்கான நன்கொடை வேண்டுகோள் இங்கே – http://www.kaniyam.com/call-for-donation-to-buy-1000-books-in-unicode-format/ இத்திட்டத்திற்கு தொடர்ந்து நன்கொடை அளித்து வரும் அனைவருக்கும் நன்றிகள்.

செயல்கள்

எண் செயல்கள் இந்த மாதம் மொத்தம் இம்மாதம் பங்களித்தோர்
1 FreeTamikEbooks.com வெளியீடுகள் 4 512 லெனின் குருசாமி, அன்வர், சீ. இராஜேஸ்வரி
2 கணியம் கட்டுரைகள் 56 778 து.நித்யா, இரா. அசோகன் – கலாராணி – ச.குப்பன் – கேந்திரன்
3 கணியம் காணொளிகள் 12 32 து.நித்யா
4 கணியம் மின்னூல்கள் 1 15 து.நித்யா

விக்கிமூலம்

விக்கிமூலத்தில் கணியம் திட்டத்துக்கென ஒரு பக்கம் உருவாக்கப்பட்டது. அதில் திட்டத்தின் குறிக்கோள்கள், பங்களிப்போருக்கான வழிகாட்டுதல்கள் எழுதப்பட்டன. இது வரை 9 பேர் இணைந்துள்ளனர். ஒரு மின்னூல் முழுமையாக மெய்ப்பு பார்க்கப்பட்டு, சரி பார்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 5 மின்னூல்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளன. விரைவில் அவை சரி பார்க்கப்படும். மின்னூல்களின் பட்டியல் இங்கே எழுதப்படுகிறது.

காண்க https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:கணியம்_திட்டம்

கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியீடுகள்

கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் பலரும் தமது படைப்புகளை வெளியிடக் கோரி, உதவி வரும் அன்வர், கலீல் ஜாகீர் இருவருக்கும் நன்றி

மென்பொருட்கள்

  1. சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு குறுஞ்செயலி வெளியீடு
  2. விக்கிசனரியில் உள்ள வார்த்தைகளை ஒலியாகப் பதிவு செய்ய ஆன்டிராய்டு செயலிஉருவாக்கப்பட்டு வருகிறது. இதன் சில பிழைகள் களையப்பட்டன. தொடர்ந்து மேம்படுத்தப் பட்டு வருகிறது.

புதிய திட்டங்கள்

பல்வேறு புதிய திட்டங்களுக்கான உரையாடல்களை இங்கே பதிந்து வருகிறோம்.

இம்மாத நன்கொடையாளர்கள்

எண் பெயர் தொகை
1 இளந்தமிழ் 10000
2 மோகன் 3000
3 வெங்கட் 101
4 தோ.வேளாங்கண்ணி 1250
5 பனகுடி சங்கர குமார் 1000
6 சக்திவேல் 100
7 இரா. இராமசாமி 2000
8 பெயரிலி 2000
9 பெயரிலி 250
10 கலாராணி இலட்சுமணன் 5000
11 இளவரசன் வரதராஜன் 5001
12 பெயரிலி 1000
13 பெயரிலி 500
14 ரேவதி கண்ணன் 150
15 தனசேகர் 500
16 அப்துல் காதர் 1000
17 தனசேகர் 200
18 பெயரிலி 1000
19 வசந்த் 3000
20 பெயரிலி 200
21 பெயரிலி 1500

மொத்தம் – ரூ 29,752

இணைய வளங்கள் நன்கொடைகள்

  • நூலகம் அறக்கட்டளை – சர்வர் (ரூ 350/மாதம்)
  • E2E Networks – சர்வர் ( ரூ 730/மாதம்)

சென்ற மாத இருப்பு – ரூ 1,24,698

செலவுகள்

  1. மாணவர் பதிப்பகம் – ரூ 50,000 – முதல் 100 மின்னூல்களுக்காக.
  2. திவ்யா – ரூ 400 – விக்கி மூலம் மெய்ப்பு ஊக்கத் தொகை

மொத்த செலவுகள் – ரூ 50,4000

மொத்தம் கையிருப்பு – ரூ 1,24,698 + ரூ 29,752 – ரூ 50,400 = ரூ 1,04,050

இந்த இணைப்பில் அனைத்து வரவு, செலவு விவரங்கள் பகிரப்படுகின்றன.https://docs.google.com/spreadsheets/d/1zBXZzjYP_WKfm4y3EpTYw5yOTOeA-sSp8mcNjjNAUe0/edit?usp=sharing

வங்கிக் கணக்கு விவரங்கள்

Kaniyam Foundation
Account Number : 606 1010 100 502 79
Union Bank Of India
West Tambaram, Chennai
IFSC - UBIN0560618
  • உங்கள் நன்கொடைகளை இந்தக் கணக்குக்கு அனுப்பி, கணியம் அறக்கட்டளை செயல்களை ஆதரிக்க வேண்டுகிறோம்.
  • நன்கொடைகளை அனுப்பியபின், உங்கள் பெயர்,நன்கொடை விவரங்களை [email protected] க்கு அனுப்ப வேண்டுகிறோம்.

மேலும் விவரங்களுக்கு எழுதுக – [email protected]

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.