கணியம் அறக்கட்டளை மார்ச்சு, ஏப்ரல் 2019 மாத அறிக்கை
தொலை நோக்கு – Vision
தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்
பணி இலக்கு – Mission
அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.
நிகழ்ச்சிகள்
- புத்தகங்கள் அனுமதி பெற கோவை பயணம்
- கோவை ஞானி புத்தகங்கள் – கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிடுதல்
- பைதான் நிரலாக்கப் பயிற்சி
- சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு குறுஞ்செயலி வெளியீடு
1000 மின்னூல்கள்
1000 மின்னூல்களை ஒருங்குறி வடிவில் வாங்குவதற்கான நன்கொடை வேண்டுகோள் இங்கே – http://www.kaniyam.com/call-for-donation-to-buy-1000-books-in-unicode-format/ இத்திட்டத்திற்கு தொடர்ந்து நன்கொடை அளித்து வரும் அனைவருக்கும் நன்றிகள்.
செயல்கள்
எண் | செயல்கள் | இந்த மாதம் | மொத்தம் | இம்மாதம் பங்களித்தோர் |
---|---|---|---|---|
1 | FreeTamikEbooks.com வெளியீடுகள் | 4 | 512 | லெனின் குருசாமி, அன்வர், சீ. இராஜேஸ்வரி |
2 | கணியம் கட்டுரைகள் | 56 | 778 | து.நித்யா, இரா. அசோகன் – கலாராணி – ச.குப்பன் – கேந்திரன் |
3 | கணியம் காணொளிகள் | 12 | 32 | து.நித்யா |
4 | கணியம் மின்னூல்கள் | 1 | 15 | து.நித்யா |
விக்கிமூலம்
விக்கிமூலத்தில் கணியம் திட்டத்துக்கென ஒரு பக்கம் உருவாக்கப்பட்டது. அதில் திட்டத்தின் குறிக்கோள்கள், பங்களிப்போருக்கான வழிகாட்டுதல்கள் எழுதப்பட்டன. இது வரை 9 பேர் இணைந்துள்ளனர். ஒரு மின்னூல் முழுமையாக மெய்ப்பு பார்க்கப்பட்டு, சரி பார்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 5 மின்னூல்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளன. விரைவில் அவை சரி பார்க்கப்படும். மின்னூல்களின் பட்டியல் இங்கே எழுதப்படுகிறது.
காண்க https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:கணியம்_திட்டம்
கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியீடுகள்
- தமிழர் வேளாண்மை திரு ஞான பிரகாசம் அவர்களின் உரைகள் – https://github.com/KaniyamFoundation/CreativeCommonsAnnouncements/issues/6
கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் பலரும் தமது படைப்புகளை வெளியிடக் கோரி, உதவி வரும் அன்வர், கலீல் ஜாகீர் இருவருக்கும் நன்றி
மென்பொருட்கள்
- சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு குறுஞ்செயலி வெளியீடு
- விக்கிசனரியில் உள்ள வார்த்தைகளை ஒலியாகப் பதிவு செய்ய ஆன்டிராய்டு செயலிஉருவாக்கப்பட்டு வருகிறது. இதன் சில பிழைகள் களையப்பட்டன. தொடர்ந்து மேம்படுத்தப் பட்டு வருகிறது.
புதிய திட்டங்கள்
பல்வேறு புதிய திட்டங்களுக்கான உரையாடல்களை இங்கே பதிந்து வருகிறோம்.
- 1000 மின்னூல்களை ஒருங்குறி வடிவில் வாங்குதல்
- பழைய நூல் – scan செய்தல்
- Machine Learning வழியே தமிழ் OCR உருவாக்கம்
- தானியக்கமாக 1000 மின்னூல்களுக்கு அட்டைப்படம் உருவாக்கம்
- சங்க இலக்கியம் நூல்களுக்கான வலைத்தளம்
- விக்கித்தரவு : சொற்பொருளன் – இடைமுக மொழிபெயர்ப்புத்திட்டம்
- தமிழ் கையெழுத்து உணரி
- The History of Everything செயலி – தமிழில்
- பெயர்ச்சொற்கள் தொகுப்பு திட்டம்
இம்மாத நன்கொடையாளர்கள்
எண் | பெயர் | தொகை |
---|---|---|
1 | இளந்தமிழ் | 10000 |
2 | மோகன் | 3000 |
3 | வெங்கட் | 101 |
4 | தோ.வேளாங்கண்ணி | 1250 |
5 | பனகுடி சங்கர குமார் | 1000 |
6 | சக்திவேல் | 100 |
7 | இரா. இராமசாமி | 2000 |
8 | பெயரிலி | 2000 |
9 | பெயரிலி | 250 |
10 | கலாராணி இலட்சுமணன் | 5000 |
11 | இளவரசன் வரதராஜன் | 5001 |
12 | பெயரிலி | 1000 |
13 | பெயரிலி | 500 |
14 | ரேவதி கண்ணன் | 150 |
15 | தனசேகர் | 500 |
16 | அப்துல் காதர் | 1000 |
17 | தனசேகர் | 200 |
18 | பெயரிலி | 1000 |
19 | வசந்த் | 3000 |
20 | பெயரிலி | 200 |
21 | பெயரிலி | 1500 |
மொத்தம் – ரூ 29,752
இணைய வளங்கள் நன்கொடைகள்
- நூலகம் அறக்கட்டளை – சர்வர் (ரூ 350/மாதம்)
- E2E Networks – சர்வர் ( ரூ 730/மாதம்)
சென்ற மாத இருப்பு – ரூ 1,24,698
செலவுகள்
- மாணவர் பதிப்பகம் – ரூ 50,000 – முதல் 100 மின்னூல்களுக்காக.
- திவ்யா – ரூ 400 – விக்கி மூலம் மெய்ப்பு ஊக்கத் தொகை
மொத்த செலவுகள் – ரூ 50,4000
மொத்தம் கையிருப்பு – ரூ 1,24,698 + ரூ 29,752 – ரூ 50,400 = ரூ 1,04,050
இந்த இணைப்பில் அனைத்து வரவு, செலவு விவரங்கள் பகிரப்படுகின்றன.https://docs.google.com/spreadsheets/d/1zBXZzjYP_WKfm4y3EpTYw5yOTOeA-sSp8mcNjjNAUe0/edit?usp=sharing
வங்கிக் கணக்கு விவரங்கள்
Kaniyam Foundation
Account Number : 606 1010 100 502 79
Union Bank Of India
West Tambaram, Chennai
IFSC - UBIN0560618
- உங்கள் நன்கொடைகளை இந்தக் கணக்குக்கு அனுப்பி, கணியம் அறக்கட்டளை செயல்களை ஆதரிக்க வேண்டுகிறோம்.
- நன்கொடைகளை அனுப்பியபின், உங்கள் பெயர்,நன்கொடை விவரங்களை [email protected] க்கு அனுப்ப வேண்டுகிறோம்.
மேலும் விவரங்களுக்கு எழுதுக – [email protected]