கணியம் அறக்கட்டளை பதிவு – மின் உரிமை மேலாண்மை இல்லா உலகம் படைப்போம்

File:Digital Restriction Management-2018.svg

 

மூலம் – https://commons.wikimedia.org/wiki/File:Digital_Restriction_Management-2018.svg

உலகெங்கும் இன்று “மின் உரிமை மேலாண்மை (DRM) க்கு எதிரான ஒரு நாள்” என்று கொண்டாடப்படுகிறது.
மின்னணு கோப்புகளைப் பகிர்வதை தடுக்கும் வகையில் பல்வேறு கருவிகளும் மென்பொருட்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அவை அறிவுப் பகிர்தலை தடுப்பதுடன், சமூக வளர்ச்சியையும் பாதிக்கின்றன.

இதற்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் நிறுவனங்களும் உலகெங்கும் குரல் கொடுத்து வருகின்றன. மேலும் அறிய https://www.defectivebydesign.org/dayagainstdrm

DRM பற்றிய கட்டுரைகள் தமிழில் இங்கே –

மின் உரிமை மேலாண்மை / எண்முறை உரிமைகள் முகாமைத்துவம்

மின் உரிமை மேலாண்மை / எண்முறை உரிமைகள் முகாமைத்துவம்

எழுத்தாளர் என்.சொக்கன் அவர்களுடன் DRM பற்றி ஒரு உரையாடல்

எழுத்தாளர் என்.சொக்கன் அவர்களுடன் DRM பற்றி ஒரு உரையாடல்

DRM – விளக்கக் காணொளிகள்

DRM – விளக்கக் காணொளிகள்

ஜனவரி 1, 2012 ல் இணைய இதழாகத் தொடங்கப்பட்ட, Kaniyam.com வலைதளத்தில், படைப்புகள் யாவற்றையும் DRM சிக்கல் ஏதுமின்றி, யாவரும் எங்கும் பகிரும் வகையில் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட்டு வருகிறோம். அதைத் தொடர்ந்து FreeTamilEbooks.com மூலம் 440க்கும் க்கும் மேலான மின்னூல்களை கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட்டுள்ளோம். கணியம் குழுவினர் உருவாக்கிய மென்பொருட்கள் யாவும் GNU GPL எனும் உரிமையில் மூலநிரலுடன், கட்டற்ற மென்பொருட்களாகவே வழங்கப் படுகின்றன.

இவ்வாறு DRM இல்லாத உலகைப் படைக்க உழைத்துவரும் அனைத்து எழுத்தாளர்கள், வரைகலைஞர்கள், இசைக்கலைஞர்கள், ஒளிக் கலைசர்கள், அனைத்துப் படைப்பாளிகள், மென்பொருளார்கள் அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.

இந்த இனிய நாளில், கணியம் குழுவினரின் செயல்களை இன்னும் அதிகரிக்க, “கணியம் அறக்கட்டளை” இன்று முறையாகப் பதிவு செய்யப்பட்டதை, மகிழ்வோடு அறிவிக்கிறோம்.

இணைய தளங்களில் மட்டுமே அதிகமாக இருந்த நமது செயல்பாடுகள், இனி வரும் நாட்களில், பொதுமக்கள், மாணவர், நிரலாளர்கள், கலைஞர்கள் என பல்வேறு களங்களில் நேரடி செயல்பாடுகளாக இருக்க, கணியம் அறக்கட்டளை உறுதுணையாக இருக்கும்.

தொடர்ந்து பேராதரவு தரும் உங்கள் அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.


Posted

in

by

ஆசிரியர்கள்: