அமேசான் கிண்டிலில் தமிழ்ப் புத்தகங்கள் வாசிக்கும் சாத்தியம் உருவான பிறகு, நிறுவனமானது தனது கருவிக்குச் சில software updates வழங்கியுள்ளது. இலவச இணைப்பாக ஒரு தமிழ் எழுத்துருவும் சேர்ந்து வருகிறது.
இந்த சாஃப்ட்வேர் அப்டேட் செய்யாமல் கிண்டிலில் தமிழ் நூல்களை வாங்கி வாசிப்பது அநேகமாக சாத்தியமில்லை என்று நினைக்கிறேன். நான் சில மாதிரிப் புத்தகங்களைத் தரவிறக்கிப் பார்த்தபோது கருவி, காறித் துப்பிவிட்டது.
எனவே சாஃப்ட்வேர் அப்டேட் அவசியம்.
ஆனால் நண்பர்கள் சிலர் ‘அப்டேட் சாஃப்ட்வேர்’ ஆப்ஷனே சாம்பல் படிந்திருப்பதாகவும் எப்படி அப்டேட் செய்வதென்று தெரிவதில்லை என்றும் சொன்னார்கள். ஒரு சிலர் ஃபேஸ்புக்கிலும் இது பற்றி எழுதினார்கள்.
ஒரு மாற்று வழி உள்ளது.
உங்கள் கிண்டில் என்ன வர்ஷன் (அவர்கள் பாஷையில் என்ன ஜெனரேஷன்) என்று உங்களுக்கு நன்றாகத் தெரியுமென்றால் பிரச்னை இல்லை. கணினி மூலம் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கிண்டிலுக்கு மாற்றிவிடலாம்.
ஒருவேளை உங்கள் சரக்கு என்ன இனம் என்ற குழப்பம் இருக்குமானால் முதலில் http://wiki.mobileread.com/wiki/Kindle_Serial_Numbers இங்கே சென்று அதை அறிந்துகொள்ளுங்கள்.
அல்லது இங்கே சென்று லாகின் செய்து, Your recent devices பகுதியில் அறியலாம்.
https://www.amazon.com/gp/help/customer/display.html?nodeId=200127470
குறிப்பிட்ட மாடலுக்கான சாஃப்ட்வேர் அப்டேட்டை https://www.amazon.com/gp/help/customer/display.html?nodeId=200529680 என்ற லிங்க்கில் தேர்ந்தெடுங்கள்.
ஒரு ஜிப் ஃபைலானது உங்கள் கம்ப்யூட்டரில் வந்து உட்காரும்.
பிறகு உங்கள் கிண்டிலை உங்கள் கம்ப்யூட்டரோடு இணைக்கவும் (யுஎஸ்பி மூலம்)
அதன்பின் டவுன்லோடான மென்பொருள் அப்டேட் கோப்பை உங்கள் கிண்டிலுக்குக் கடத்தவும்
தனி ஃபோல்டரெல்லாம் போடாதீர்கள். அப்படியே தூக்கி வைக்கவும்
இப்போது கம்ப்யூட்டரில் இருந்து கிண்டிலைப் பிடுங்கிவிடவும்
கிண்டிலின் ஹோம் பட்டனை அழுத்தி அங்கிருந்து செட்டிங்ஸுக்குச் செல்லவும்
அங்கே இப்போது update software ஆப்ஷனின் சாம்பல் படிமானம் தீர்ந்து பளிச்சென்று தெரியும்
அதை அமுக்கவும்
ஒரு வட்டப்பெட்டி எழுந்து சாஃப்ட்வேரை அப்டேட் செய்யவா என்று அநாவசியமாகக் கேட்கும். ஓகே சொல்லுங்கள்
அப்டேட் ஆனதும் அதுவே ரீஸ்டார்ட் ஆகும்
ஓரிரு நிமிடங்கள் கழித்து அதுவே மீண்டும் தமிழ் ஃபாண்ட் அப்டேட் வேணுமா என்று கேட்கும்
அதற்கும் ஓகே சொல்லுங்கள்
மீண்டும் ரீஸ்டார்ட் ஆகும்
முடிந்தது கதை. இதன்பின் நீங்கள் தமிழ் நூல்களைத் தரவிறக்கி வாசிப்பதில் எச்சிக்கலும் இல்லை.
— பா. ராகவன்
மூலம் – https://m.facebook.com/story.php?story_fbid=1747689328892008&id=100009528732084
Comments
One response to “அமேசான் கிண்டிலில் சாஃப்ட்வேர் அப்டேட் செய்வது எப்படி?”
ரொம்ப நன்றி, அருமையா வலை இடுகை…