கிண்டிலில் தமிழ் மின்னூல்கள் படிப்பது எப்படி?

டிவிட்டரில் நான் பின் தொடரும் திரு SKP கருணா @skpkaruna அவர்கள் சமீபத்தில் கிண்டில் கருவி வாங்கியதை அறிந்து வாழ்த்தினேன். அதில் தமிழ் படிக்க இரு ஆண்டுகளுக்கு முன் தான் தேடியது போலவே அவரும் தேடினார். பலரும் இதேபோல தேடிக்கொண்டிருக்கலாம்.
ஒருவழியாக கிண்டிலில் தமிழ் படிக்கும் வழிகளை அறிந்து மகிழ்ந்தேன்.
கிண்டிலில் யாம் படிக்கும் இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்காக Freetamilebooks.com திட்டத்தை நண்பர்கள் உதவியோடு தொடங்கினேன்.

இதுவரை கண்டுள்ள சில வழிகளைப் பார்பபோமா?

===================

மின்னூல்கள் படிக்க 6 அங்குல கிண்டில், நூக், கோபோ போன்ற ஒரு கருவி வாங்கியுள்ளீர்களா?

வாழ்த்துக்கள்.

E-ink திரை கொண்ட இந்தக் கருவிகளில் படிப்பதே ஒரு அலாதி சுகம்தான்.
உங்கள் கண்கள் உங்களுக்கு பல்லாயிரம் நன்றிகள் சொல்லும்.

கோப்பு வகைகள்

Pdf தவிர இந்தக் கருவிகளில் படிப்பதற்கென epub, mobi என்ற கோப்பு வகைகள் உள்ளன. படிக்கும் கருவியின் திரை அளவிற்கேற்ப பக்க அளவை தாமாகவே மாற்றிக்கொள்ளும் திறம் கொண்டவை இவை. எழுத்துரு அளவையும் கூட்டலாம். குறைக்கலாம்.

Epub என்பதுஒரு கட்டற்ற மின்னூல் வடிவம். பல்வேறு html கோப்புகளை zip செய்த ஒரு வடிவமே. அதை unzip செய்து மின்னூலை தனித்தனியாக பிரித்து விடலாம்.

நூக், கோபோ, சோனி மின்னூல் படிப்பான் கருவிகள் epub வடிவை ஆதரிக்கின்றன.
ஆன்டிராய்டு போனில் fbreader, ஆப்பிள் கருவிகளில் iBooks மென்பொருள் கொண்டும் epub கோப்புகளைப் படிக்கலாம்.

Mobi என்பது அமேசான் நிறுவனம் அதன் கிண்டில் கருவிகளுக்கென உருவாக்கிய ஒரு கோப்பு வகை. கிண்டில் கருவிகள் epub கோப்புகளை திறப்பதில்லை. Mobi, azw வகைக் கோப்புகளை மட்டுமே திறக்கின்றன.

ஆன்டிராய்டு, ஆப்பிள் கருவிகளில் கிடைக்கும் கிண்டில் என்ற மென்பொருள் கொண்டும் இவற்றைப் படிக்கலாம்.

Epub வகையில் உள்ள ஒரு கோப்பை mobi வடிவில் மாற்ற calibre என்ற கட்டற்ற, திறமூல மென்பொருளானது பயன்படுகிறது. Word, pdf வகைக் கோப்புகளைத் கூட epub, mobi ஆக மாற்றலாம்.

மின்னூல் கருவிகளில் தமிழ்

கிண்டில், நூக், கோபோ, சோனி என எந்தக். கருவியும் தமிழ் உட்பட பிற ஒருங்குறியில் அமைந்த மின்னூல்களை ஆதரிப்பதில்லை .

Mobi வகையில் ஒரு மின்னூல் உருவாக்கி, கிண்டில் கருவியில் படித்தால், பின்வருமாறு தெரிகிறது.

 

தீர்வு

இந்தக் கருவிகளில் படிக்கும் வகையில் 6 அங்குல pdf கோப்புகளை உருவாக்குவதே ஒரே தீர்வு.

பொதுவாக நாம் கணிணிகளில் படிக்கும் pdf கோப்புகள் A4 அளவிலானவை. அவற்றை ஏறக்குறைய A6 அளவிலான கருவிகளில் படிக்க இயலாது. அளவைப் பெரிதாக்கி, நகர்த்தி, நகர்த்தி படிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.

 

6 அங்குல pdf உருவாக்கும் வகைகள்

1. Libreoffice writer/ MS Word வழி

நமது கருவிகளின் திரை அளவு 9 cm x 12 cm
Libreoffice writer அல்லது MS Word ல் format->page->size -> custom சென்று
அகலம் 9 cm, உயரம் 12 cm, margin 4 பக்கமும் 0.5 cm வைக்க வேண்டும்.

பின், நாம் படிக்க விரும்பும் இணையப் பக்கத்தையோ, word ஆவணத்தையோ, இங்கு நகல் எடுத்து ஒட்ட வேண்டும்.

எல்லாவற்றையும் தேர்வு செய்து, எழுத்துரு அளவு 9 அல்லது 10 வைக்க வேண்டும்.

பின் இந்தக் கோப்பை pdf ஆக ஏற்றுமதி செய்ய வேண்டும். Libreoffice ல் இந்த வசதி இயல்பாகவே உள்ளது. MS Word க்கு doPDF போன்ற மென்பொருளைப் பயன்படுத்தலாம்.

இது பற்றிய ஆங்கிலப் பதிவு.
https://onroads.wordpress.com/2012/11/23/how-to-read-tamil-books-in-kindle-ebook-reader/

 

2. Firefox ல் இருந்து அச்சிடுதல்

நீண்ட html பக்கங்களை அப்படியே Firefox மூலம் 6 அங்குல pdf கோப்பாக அச்சிடலாம். பெரிய word ஆவணங்களையும் html ஆகச் சேமித்து பின் அச்சிடலாம்.

இதற்கு Firefox ன் margin களை 0 ஆக்க வேண்டும்.

Firefox ன் முகவரிப்பட்டையில் about:config எனத் தந்து margin என்று தேடி, எல்லா மதிப்புகளையும் 0 ஆக்க வேண்டும்.

உதாரணம்

print.print_extra_margin 0

printer_Print_to_File.print_margin_bottom 0
printer_Print_to_File.print_margin_left 0
printer_Print_to_File.print_margin_right 0
printer_Print_to_File.print_margin_top 0

இவை தவிர வேறு margin மதிப்புகள் இருந்தாலும் 0 ஆக்குக.

பின், file->print->page setting ல் போய் custom size என்பதில் அகலம் 9 cm, உயரம் 12 cm, margin 4 பக்கமும் 0.5 cm வைக்க வேண்டும். இதற்கு kindle என்று பெயரிடலாம்.

பின் இணையப்பக்கங்களை pdf ஆக அச்சிடலாம். Paper size என்பதில் kindle என்பதை தெரிவு செய்தால் போதும்.

இந்த முறையிலேயே freetamilebooks.com க்கு 6 அங்குல pdf கோப்புகள் உருவாக்குகிறோம்.
Pressbooks.com ல் கட்டுரைகளை ஒட்டிவிட்டால் epub, mobi, xhtml ஆக export செய்யலாம். பின், xhtml கோப்பை A4 pdf, 6 inch pdf என அச்சிடுகிறோம்.

இது பற்றிய காணொளி தமிழில்
https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs
20.00 – 27.00 வரை.

ஆங்கிலப் பதிவு
https://goinggnu.wordpress.com/2014/02/01/how-to-create-an-ebook-for-free-tamil-ebooks-com/
8. Firefox Hack முதல்.

 

3. K2optpdf

இதுவரை பார்த்த முறைகளுக்கு text உரை வடிவில் மூல ஆவணங்கள் தேவை. ஆனால் ஏற்கெனவே நம்மிடம் உள்ள A4 Pdf கோப்புகளை கிண்டில் போன்ற கருவிகளில் படிப்பதற்கேற்ப மாற்றலாம். இதற்கு k2optpdf என்ற கட்டற்ற, திறமூல மென்பொருள் பயன்படுகிறது.

இங்கிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
http://www.willus.com/k2pdfopt/

ஆங்கிலப் பதிவு
http://techlogon.com/2012/01/04/how-to-convert-a-pdf-file-for-better-kindle-or-smartphone-viewing/
இது பக்கங்களின் margin ஐ நீக்கி, 6 அங்குல pdf ஆக மாற்றி விடுகிறது. ஆனாலும் சில குறைகள் இருக்கலாம். சில இடங்களில் வரிகள் மாறுதல், படங்கள் அருகே சீரற்ற எழுத்துரு போன்ற சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் pdf ஆக மட்டுமே கிடைக்கும் கோப்புகளை, கிண்டில் போன்ற கருவிகளுக்கு ஏற்றவாறு மாற்றிப் படிக்க, இதுவே சிறந்த வழி.

லினக்ஸில்
k2pdfopt a4book.pdf
என்று command prompt ல் தந்தால், a4book_k2opt.pdf என்று 6 அங்குல pdf ஆக மாற்றி விடுகிறது.

இதன் மூலம் iPadMini ல் படிக்கும் வகையில் கூட மாற்றலாம்.
iPadMini ன் அளவு – உயரம் 20cm அகலம் 13cm

இதற்கு

k2pdfopt -h 20cm -w 13cm -o %s_ipadmini a4book.pdf
என்று தந்தால் a4book_ipadmini.pdf என்ற கோப்பு கிடைக்கும்.

இவை தவிர calibre மூலம் தமிழ் font ஐ embed செய்து epub, mobi உருவாக்குதல், கிண்டிலில் இயல்பான font ஐ மாற்றுதல் போன்ற செயல்களிலும் தமிழை எளிதில் படிக்கலாம் என்று கேள்விப்பட்டேன். ஆனால் என் கிண்டில் கருவியில் இவை செயல்படவில்லை. இது பற்றி தெரிந்தவர்கள் விவரித்து எழுத வேண்டுகிறேன்.

https://onroads.wordpress.com/2012/11/23/how-to-read-tamil-books-in-kindle-ebook-reader/#comment-309
https://onroads.wordpress.com/2012/11/23/how-to-read-tamil-books-in-kindle-ebook-reader/#comment-296
https://twitter.com/ssurenr/status/602863026304221185

மின்னூல்களின் உலகில் உங்கள் கருவிகளுடன் சென்று, படித்து இன்புறுக.

 

FreeTamilEbooks.com தளத்தில் யாவரும் பகிரும் வகையில், கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில்  epub, mobi, A4 PDF, 6 inch PDF வடிவில் மின்னூல்களை இலவசமாக வெளியிடுகிறோம்.

1. எங்கள் திட்டம் பற்றி – https://freetamilebooks.com/about-the-project/

தமிழில் காணொளி  – http://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I

2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி –

கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமை – ஒரு அறிமுகம்
http://www.kaniyam.com/introduction-to-creative-commons-licenses/

 

நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்.

மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  –

தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs

இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook

எங்கள் மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம்.
https://groups.google.com/forum/#!forum/freetamilebooks


Posted

in

by

ஆசிரியர்கள்: