FreeTamilEbooks.com – மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை – நிகழ்வுக் குறிப்புகள்

FreeTamilEbooks.com -ன் இரண்டாவது மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை, பிப்ரவரி 4, 2017 அன்று நடைபெற்றது.

நாள் – பிப்ரவரி 4, 2017 சனி காலை 10.00 முதல் மாலை 4.00 வரைஇடம் – ஆர்கானிக் சந்தை, குறிஞ்சி புத்தக நிலையம்
27/49, சிட்லபாக்கம் 2வது பிரதான சாலை, தாம்பரம் சானிடோரியம், சென்னை 47

(விவேகானந்தா கல்வி நிலையம் கட்டிடம்)
சானிடோரியம் ரயில் நிலையத்தில் இருந்து, வரதராஜா திரையரங்கு செல்லும் வழி

வரைபடம் https://goo.gl/maps/YCwbFGbJT1E2

நிகழ்ச்சிக்கான அழைப்பை கூகுள் குழுமங்கள், முகநூல் வழியே அனுப்பியிருந்தோம்.

11 பேர் பதிவு செய்திருந்தனர். இலட்சுமி, இன்னம்பூரணார், துரை. மணிகண்டன், நந்தகோபால், தனசேகர் ஆகிய 5 பேர் நிகழ்வுக்கு வந்தனர்.

காலை அமர்வில்
  • FreeTamilEbooks.com – அறிமுகம்
  • Creative Commons License – அறிமுகம்
  • மின்னூல் படிக்க உதவும் கருவிகள், செயலிகள்
  • Epub, mobi, PDF, 6 inch PDF கோப்பு வகைகள்
  • Pressbooks.com மூலம் மின்னூல்கள் உருவாக்குதல்
  • LibreOffice, Calibre, Sigil மூலம் மின்னூல்கள் உருவாக்குதல்
  • அட்டைப்படம் உருவாக்குதல்
  • மின்னூல்களை வெளியிடுதல்

ஆகியன பற்றி உரையாடினோம். பதிப்பாளர் நந்தகோபால் தமது பதிப்பக அனுபவங்களைப் பகிர்ந்தார்.

மதிய அமர்வில் செய்முறைப் பயிற்சியாக LibreOffice, Calibre, Sigil மூலம் மின்னூல்கள் உருவாக்கினோம்.

நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. இடம், மதிய உணவு, தேனீர் தந்து உதவிய சரவணன் தியாகராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி.

சில படங்கள் –
https://goo.gl/photos/hYmN2jwFX4Y5RXFE8
LibreOffice, Calibre, Sigil மூலம் மின்னூல்கள் உருவாக்குதல் – காணொளி
https://www.youtube.com/watch?v=0CGGtgoiH-0

மின்னூலாக்கத் திட்டத்தில் பங்கு பெற உங்களையும் அழைக்கிறோம்.

ஆர்வமுளளோர் தொடர்பு கொள்ள –


Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

2 responses to “FreeTamilEbooks.com – மின்னூலாக்கப் பயிற்சிப் பட்டறை – நிகழ்வுக் குறிப்புகள்”

  1. innamburan Avatar

    எனக்கு மகிழ்ச்சியும் மன நிறைவும், மின்னூல் ஆக்கும் திறனும், நண்பர்களும் அளித்த நிகழ்வு. பட்டறை நண்பர்களை விருந்துக்கு அழைக்கிறேன்,
    நன்றி சீனிவாசன்.
    இன்னம்பூரான்

  2. M.Arumugam Avatar
    M.Arumugam

    vazhthukkal nanriyudan kavimugam ([email protected])