பதிவிறக்கப் பிழைகள் சரிசெய்யப்பட்டன

வணக்கம்.

கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்ட மின்னூல்களை பதிவிறக்க இயலவில்லை என்று பலரும் மின்னஞ்சல் வழியிலும், நேரிலும், மின்னூல் பக்கங்களின் கருத்துப் பெட்டியில் பதிலுரையிலும் கூறினர். சுட்டிக்காட்டிய நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

ஏற்பட்ட பிழைகளுக்கு வருத்துகிறேன். நீண்ட தேடலுக்குப் பின், பிழையைக் கண்டறிந்து சரி செய்துவிட்டேன். மின்னூல்களின் பதிவிறக்க இணைப்புகளையும் சரி செய்து, என்னால் இயன்ற வரை சோதித்து விட்டேன். நீங்கள் விரும்பும் மின்னூல்களை மீண்டும் ஒருமுறை பதிவிறக்கம் செய்ய வேண்டுகிறேன்.

இன்னும் பிழைகள் இருப்பின், அருள்கூர்ந்து [email protected] க்கு மின்னஞ்சல் எழுதுக. அல்லது கூகுள், முகநூல் குழுக்கள், கருத்துப் பெட்டி என ஏதேனும் ஒரு இடத்தில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

மின்னூல் உருவாக்கம் மற்றும் வெளியிடலை தானியக்கமாக செய்துள்ளோம். இதனால் பங்களிப்பாளர்களின் பணி பெரிதும் குறைகிறது.

சுமார் 50 நிமிடங்கள் எடுக்கும் பணி, இப்போது 20 நிமிடங்களில் பெரும்பாலும் தானியக்கமாகவே நடைபெறுகிறது.

அதற்கான நிரல்கள் இங்கே உள்ளன – https://github.com/KaniyamFoundation/create_ebooks

தானியக்க மின்னூல் உருவாக்கி வெளியிடும் முறையின் காணொளி-

சமீபத்தில் நிரலை மேம்படுத்தியபோது – என்பதை _ என்று மாற்றத் தவறியதால், மின்னூல்களில் பதிவிறக்க இணைப்பு மாறியது. அது பதிவிறக்கப் பிழைகளுக்கு இட்டுச் சென்றது. இப்போது பிழைகள் களையப்பட்டன.

https://github.com/KaniyamFoundation/create_ebooks/commit/cabe035a7a03992af6d6857df1350fe214ca31bd?diff=split

மின்னூலாக்கம், நிரல்கள், பிழைகள் கண்டறிதல் ஆகியவற்றில் பங்களிக்க உங்களையும் அழைக்கிறேன். ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்க.

தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசகர்கள், நூலாசிரியர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.

த.சீனிவாசன்

[email protected]


Posted

in

by

ஆசிரியர்கள்: