அன்பர்களே ஆன்மீகவாதிகளே ஆலயம் என்பது நாம் வணங்கும் தெய்வங்கள் குடியிருக்கும் கோயிலாகும். தெய்வங்கள் குடியிருக்கும் ஒவ்வொரு ஆலயத்துக்குள்ளும் நற்சக்திகள் சுழன்றுகொண்டே இருக்கின்றன. நம்மைக் காக்க நமக்கும் மேற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது என்கிற ஆன்மீக நம்பிக்கையோடு நாம் தூய்மையோடு அந்த ஆலயத்தை அடைந்து அங்கிருக்கும் தெய்வங்களை மனதார வேண்டிக்கொண்டு நம் குறைகளை அந்தத் தெய்வங்களிடம் சொல்லிவிட்டு இனி அந்த தெய்வம் நம் குறைகளைப் போக்கும் என்கிற மனத் திருப்தியோடு நம் கடமைகளைக் கவனிக்கலாம். அதற்காகத்தான் ஆலயங்கள் வடிவமைக்கப்பட்டு அங்கே தெய்வங்களைப் ப்ரதிஷ்டை செய்து வைக்கிறார்கள், நடுக்கடலிலே திசை தெரியாது நாம் மாட்டிக்கொள்ளும் போது ஒரு சிறிய மரத்துண்டு கிடைத்தால் அந்த மரத்துண்டு நம்மைக் காக்கும் தெய்வமாக மாறிப் போகிறது.
ஆகவே நட்ட கல்லும் தெய்வமே நாதன் உள்ளிருக்கையில் என்று ஆன்றோர் சொல்லிவிட்டுச் சென்ற கருத்தை உணர்ந்தால் நம்முள்ளே தெய்வம் நிறைந்திருக்குமானால் அந்த தெய்வம் நாம் நட்டு வைக்கும் கல்லிலும் தோன்றும் நம்மைக் காக்கும் தெய்வமாக கல்லும் அமிர்தக்கனியாகும். நம்பிக்கைதானே ஒவ்வொரு ஜீவராசிக்கும் தேவையான ஜீவரசம், ஆகவே நம்பிக்கையோடு நாம் தொழுவோம், ஆலயங்களைப் பராமரிப்போம்.
எல்லா சக்திகளுக்கும் மூலமான பராசக்தியின் இச்சா சக்தி திருவுடை அம்மன், க்ரியா சக்தி- (மேலூர்): ஞான சக்திஸ்ரீவடிவுடை அம்மன் (திருவொற்றியூர்): க்ரியா சக்தி (வட திருமுல்லைவாயில்) .என்று மூன்று சக்திகளும் முக்கோண வடிவத்தில் அமைந்துள்ளன.
இந்த ” வட திருமுல்லைவாயில் ” என்னும் தலபுராணத்தை இந்த இ புத்தகத்தை கையடக்க இணையக் கருவிகளில் படிக்க எளிதாக வெளியிடுகிறேன் . ஆலயங்களைப் பற்றி அறிவதும் நம் பழங்கலைகளைப் போற்றி நம் மரபுகளைக் காப்பதும் நம் கடமை அல்லவா ? வடதிருமுல்லை வாயில் என்னும் தலத்தைப் பற்றியும் , “மாசிலாமணீஸ்வரர் கொடியிடைநாயகி” ஆலயத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள இந்த புத்தகத்தைப் படிக்குமாறு வேண்டுகிறேன். அம்பத்தூரிலுள்ள வட திருமுல்லை வாயில் பகுதியில் சக்தி கொடியிடைநாயகி என்று எழுந்தருளி இருக்கிறாள். அந்த ஆலயத்தைப் பற்றித் தெரிந்துகொள்வோமா ?
தமிழ்த்தேனீ
ஆசிரியர் : தமிழ்த்தேனீ – [email protected]
https://www.flickr.com/photos/110178158@N08/13449602005/
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
வெளியீடு : FreeTamilEbooks.com
மின்னூலாக்கம் – தமிழ்த்தேனீ – [email protected]
Download free ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “வடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி ஆலயம் epub” vadathirumullaivayil-kodiyidai-nayagi-alayam.epub – Downloaded 5615 times – 3.40 MB
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “வடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி ஆலயம் mobi” vadathirumullaivayil-kodiyidai-nayagi-alayam.mobi – Downloaded 1880 times – 6.71 MB
கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “வடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி ஆலயம் A4 PDF” vadathirumullaivayil-kodiyidai-nayagi-alayam-A4.pdf – Downloaded 6920 times – 2.00 MB
செல்பேசிகளில் படிக்க
Download “வடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி ஆலயம் 6 Inch PDF” vadathirumullaivayil-kodiyidai-nayagi-alayam-6-Inch.pdf – Downloaded 2296 times – 1.93 MB
புத்தக எண் – 51
சென்னை
ஏப்ரல் 1 2014
Leave a Reply