தமிழ் எழுத்தாளர்களின் நன்மைக்காக, எழுத்தாளர்களின் சொந்த முயற்சியால், எழுத்தாளர்களே நடத்தி வருவது தமிழ் எழுத்தாளர்கள் கூட்டுறவுச் சங்கம். தமிழ் நாடு முழுவதும் பரவியிருக்கும் பல எழுத்தாளர் இதில் உறுப்பினராய் இருக்கின்றனர். இச்சங்கம் இதுவரை தமிழ் உறவு என்னும் வெளியீட்டு முத்திரையின் கீழ் 90 தமிழ் நால்களைப் பல துறைகளிலும் வெளியிட்டிருக்கிறது!.
இது 66வது நூலின் மூன்றாவது பதிப்பு.
பாரிசில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டுக்குத் தமிழக அரசின் பிரதிநிதியாகச் சென்று வந்த சென்னை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் திரு. நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள், தமது பயண அனுபவங்களையும் மாநாட்டு நிகழ்ச்சிகளையும் தமது எண்ணவோட்டங்களுடன் கலந்து சுவையாக அளித்துள்ளார்கள், நம் கருத்துகளிலும் எதிரொலிக்க வல்லவை. இவை; பதிக்கத்தக்கவை கூட.
இதனைச் சங்கத்தின் வாயிலாக வெளிக் கொணர இசைந்தமைக்குத் திரு. நெ. து. சுந்திரவடிவேலு அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ் எழுத்தாளா தன்னம்பிக்கையுடன் தமது இலக்கிய முயற்சிகளை மேற்கொள்வதற்கு, தமிழ் உறவு நூல்களை வாங்கித் தமிழ் மக்களும் கல்வி நிறுவனங்களும் நூலகங்களும் பேராதரவு தரவேண்டுகிருேம்.
‘தமிழுறவாளர்’
2/96. பெரிய தெரு,
சென்னை-5
20 – 7 – 1977
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “உலகத்தமிழ் epub” ulagathamizh.epub – Downloaded 1882 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “உலகத்தமிழ் A4 PDF” ulagathamizhA4.pdf – Downloaded 2100 times –செல்பேசிகளில் படிக்க
Download “உலகத்தமிழ் 6 inch PDF” ulagathamizh6inch.pdf – Downloaded 1531 times –நூல் : உலகத்தமிழ்
ஆசிரியர் : நெ. து. சுந்தரவடிவேலு
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
மின்னூலாக்கம் : த. தனசேகர்
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை:
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0).
பதிப்புரிமை அற்றது.
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு எனப் பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 355
பிப்ரவரி 28 2018
Leave a Reply