தமிழ் இலவச மின்னிதழ்
| இதழ் : 4 | இளவேனில் – 2017 |
ஆசிரியர்
சி. சரவணகார்த்திகேயன்
அட்டை ஓவியம்
ராஜேஷ்வர் நியாலபள்ளி
அட்டை வடிவமைப்பு
மீனம்மா கயல்
ஆக்கம் – உதவி
சௌம்யா
ஆலோசனை
இரா. இராஜராஜன்
ந. பார்வதி யமுனா
தொடர்புக்கு
மின்னஞ்சல் – c.saravanakarthikeyan@gmail.com
வலைதளம் – http://tamizmagazine.blogspot.in/
அலைபேசி – +91 98803 71123
மின்நூலாக்கம்
சேலம் மணிகண்டன்
மின்னஞ்சல் – manikandansalem@outlook.com
மின்நூல் வெளியீடு
FreeTamilEbooks.com
உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
மீட்சியின் துயரம்
நீள்தூக்கத்திலிருந்து விழித்தது போல் கிட்டத்தட்ட ஈராண்டு இடைவெளிக்குப் பின் இதழ் வெளியாகிறது.
தமிழ் இதழை ஏன் தொடங்கினேன்? சிற்றிதழோ வெகுஜன இதழோ படைப்புகளை வெளியிட நிறையச் சிரமப்பட்டிருக்கிறேன். இப்போதும் அப்படியே. என் போலானவர்களுக்கான ஓர் ஆரம்பக் களமாக இது அமைய வேண்டும் என விரும்பினேன். நன்றாக எழுதுபவன் ஏன் வாய்ப்புக்கு அலைய வேண்டும் என நினைத்தேன். கடந்த மூன்று இதழ்களில் அந்த எதிர்பார்ப்பு மிகச் சிறிய அளவிலேயே நிறைவேறியது. எழுத்து வன்மை கொண்டவர்களே இல்லையா அல்லது அவர்கள் என்னிடம் எழுத விரும்பவில்லையா தெரியவில்லை. இதழுக்குத் தானாய்ப் படைப்பு அனுப்பியவர்கள் பெரும்பாலும் என் வட்டம் சேர்ந்தவர்கள். அல்லது நிராகரிக்கப்படும் தரத்திலான எழுத்துக்கள். மற்றபடி, வெளியானவற்றில் கணிசம் தொங்கிப் பெற்றவை. அது இந்த இதழுக்கான நடைமுறைத் தேவை என்ன என்ற கேள்வியை எனக்குள் எழுப்பியது.
வாசகப் பரப்பு குறைவு, அதிலும் நல்ல வாசகர்கள் குறைவு எனும் போது எழுதுபவர்கள் வரத்து குறையும். இலவச இதழ் என்பதால் படைப்புகளுக்குச் சன்மானம் அளிப்பதில்லை. இதுவும் ஒரு விலக்கப் புள்ளி. ஆர்வமுடன் எழுதுபவர்களுக்கு இன்று இணையத்திலேயே ஏராளமான பிரபல வாயில்கள் உண்டு. ஆக, புதியவர்களுக்கான தளம் இவ்விதழ் என்று எண்ணியது பிழை என்பதை உணர்ந்தேன். எழுத்தாளர்களின் நேர்காணல் ஒன்று தான் தமிழ் வெளியாவதற்கான ஒரே தேவையாக இருக்கிறது என நினைக்கிறேன். ஜெயமோகனிடம் இதைப் பற்றி எழுதிய போது “சோர்வுற வேண்டாம். எந்த எழுத்தாளருக்கும் எழுத்தின் தொடக்க காலத்தில் ஓர் இதழ் நடத்துவது ஒரு நல்ல அனுபவம். நல்ல கல்வி அது.” என்று சொன்னார்.
கடந்த ஆண்டு மாதொருபாகன் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்த போது இரண்டாம் முறையாக பெருமாள்முருகன் அவர்களை நேர்காணலுக்கு அணுகினேன். அவரிடம் அப்போது சொன்னது ஒன்று தான் – “ஓராண்டாக இதழ் வெளியாகவில்லை. உங்கள் நேர்காணலைச் சாக்கிட்டுக் கொண்டு வருவேன்”. ஆனால் அவர் அப்போது பேட்டி தரும் மனநிலையில் இல்லை. பிறகு இந்த ஆண்டு எல்லாம் கைகூடி வர இதழ் மீண்டிருக்கிறது. இப்போது இதழ் வெளியாக அவரது நேர்காணல் மட்டுமே காரணம். அவருக்கு நன்றி. உயர்நீதிமன்றத் தீர்ப்பின் ஓராண்டுக் கொண்டாட்டமாகவும் இவ்விதழைப் பார்க்கலாம்.
தொடர்ந்து ஆதரவளித்து வரும் நண்பர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் என் அன்பு.
*
கடந்த மூன்றாண்டுகளாக நாக்கைக் குறி வைத்த ஃபாசிஸ ஆட்சி நம் தேசத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தனி மனிதன் என்ன மொழி பேச வேண்டும் என்றும், என்ன உணவு உண்ண வேண்டும் என்றும் சர்க்கார் தீர்மானிக்கிறது. இஸ்லாமியர்களும், தலித்களும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒடுக்கப்படுகின்றனர்.
ஒரு நூற்றாண்டாய்த் தயங்கி ஒலித்த இந்துத்துவக் குரல்கள் இன்று எக்காளமிடுகின்றன. உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூட தம் மதச்சார்பை, முட்டாள்தனத்தைப் பொதுவெளியில் வெளிப்படுத்தத் தயங்குவதில்லை. ஆதரிப்பவன் தேச பக்தன், எதிர்ப்பவன் தேசத் துரோகி என்ற இருமத்துள் அடைக்க முனைகிறார்கள்.
சிதறியுள்ள மதச் சார்பற்ற மற்றும் முற்போக்கு அரசியல் சக்திகள் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது.
– சி. சரவணகார்த்திகேயன்
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “தமிழ் – மின்னிதழ் – 4 – epub” TamizMagazine_Issue04.epub – Downloaded 2636 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “தமிழ் – மின்னிதழ் – 4 – A4 PDF” TamizMagazine_Issue04.pdf – Downloaded 2911 times –செல்பேசிகளில் படிக்க
Download “தமிழ் – மின்னிதழ் – 4 – 6 inch pdf” TamizMagazine_Issue04-6-inch.pdf – Downloaded 1792 times –பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 306
ஆகஸ்ட் 4 2017





Leave a Reply