ஏற்காடு இளங்கோ
வெளியீடு : FreeTamilEbooks.com
உருவாக்கம்: ஏற்காடு இளங்கோ
யுனுகோட் மாற்றம் – மு.சிவலிங்கம்
மேலட்டை உருவாக்கம்: ஜெகதீஸ்வரன் நடராஜன்
மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
என்னுரை
மனித குல வரலாற்றில் மனிதன் பல்வேறு சாதனைகளைப் படைத்துக் கொண்டே இருக்கிறான். தான் வாழும் பூமியில் மட்டுமே சாதனைகளைப் படைத்து வந்த பின்னர் பூமியைக் கடந்து விண்வெளிக்குச் சென்றது அவனுடைய சாதனைகளில் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. விரைவாக வளர்ந்து வந்த அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் மனிதன் விண்வெளிக்குச் சென்று சாதனை படைத்தான். இதன் மூலம் ஒரு விண்வெளி சகாப்தம் உருவானது. இதனைத் தொடர்ந்து மனிதன் நிலவில் இறங்கி ஆய்வுகளைச் செய்தான். இத்துடன் முடிந்து விடாமல் செவ்வாய் உள்பட மற்ற கிரகங்களுக்கும், கிரகங்களின் சந்திரன்களுக்கும், ஆளில்லாத விண்கலங்களை அனுப்பி ஆய்வை மேற்கொண்டு வருகிறான். சூரியனின் சுற்றுப் பாதைக்கு விண்கலத்தை அனுப்பி சூரியனையும் ஆய்வு செய்துள்ளான்.
விண்வெளி என்பது மனிதன் வாழ்வதற்குத் தகுதியற்ற இடம். அங்கு வாழ்வதற்கான சூழலைக் கொண்ட விண்கலங்களைத் தயாரித்து, பூமியைச் சுற்றிக் கொண்டே ஆய்வுகளைச் செய்தான். பின்னர் நிரந்தரமாக விண்வெளியில் தங்கி ஆய்வு செய்வதற்காக விண்வெளி நிலையத்தை விண்வெளியில் கட்டினான். விண்வெளியில் ஒரு நிலையத்தைக் கட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல. விண்வெளியில் ஒரு விண்வெளி நிலையத்தை மனிதன் 12 ஆண்டுகளாக கட்டி வருகிறான். இந்த நிலையத்தில் ஆயிரக்கணக்கான ஆய்வுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆய்வுகள் தொடர்ந்து நடக்கப் போகின்றன.
பிரபஞ்சம் பயங்கர வேகத்துடன் விரிவடைந்து கொண்டே செல்கிறது. விண் பொருட்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்கின்றன. பொருட்களுக்கு இடையே உள்ள ஈர்ப்பு விசையையும் தாண்டி இவ்வாறு பொருட்கள் விலகிச் செல்வதற்கு ஒரு வேளை கண்ணுக்குத் தெரியாத இருள் ஆற்றலாக இருக்கலாம் என வானிவியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.கண்ணுக்குத் தெரியாத இருள் பொருள் மற்றும் இருள் ஆற்றல் பற்றிய ஆய்வு சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடந்து வருகிறது.
இந்தப் புத்தகத்தில் விண்வெளிப் பயணம் எப்படித் தொடங்கியது, விண்வெளியில் வீரர்கள் புரிந்த சாதனைகள், விண்வெளி நிலையங்கள், அவற்றின் பங்களிப்புகள், விண்வெளியில் வாழ்தல் போன்ற விபரங்களைப் பற்றி எழுதியுள்ளேன். இப்புத்தகத்தில் மூலம் விஞ்ஞானத்தின் வளர்ச்சி எப்படி இதனைச் சாதித்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்; விண்வெளி சகாப்தத்தின் மூலம் மனித குலம் புரிந்த சாதனைகளைத் தெரிந்து கொள்ளலாம். அறிவியல் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும், விண்வெளியைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கும் இந்த புத்தகம் ஆர்வத்தை உண்டாக்கும் என நம்புகிறேன்.
இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு உதவிகள் புரிந்த எனது மனைவி திருமிகு. இ. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றி. இப்புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த திருமிகு. சரவணமணியன் அவர்களுக்கும், புத்தகத்தைச் தட்டச்சுச் செய்து கொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் நன்றி. மேலும் இந்தப் புத்தகத்தை மின்னூலாக வெளியிட்டுள்ள FreeTamilEbooks.com குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன்
ஏற்காடு இளங்கோ
Download free ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “விண்வெளியில் ஆய்வு நிலையம் epub” space-research-center.epub – Downloaded 10429 times – 2.16 MB
கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “விண்வெளியில் ஆய்வு நிலையம் A4 PDF” space-research-center-A4.pdf – Downloaded 12079 times – 5.49 MB
செல்பேசிகளில் படிக்க
Download “விண்வெளியில் ஆய்வு நிலையம் 6 Inch PDF” space-research-center-6-inch.pdf – Downloaded 4354 times – 5.80 MB
புத்தக எண் – 108
ஆகஸ்ட் 29 2014
Leave a Reply