பழங்காலத்தில் தோன்றிய பல தத்துவங்கள் மன்னர்களைப் பாதுகாப்பதாகவும், ஆளும் வர்க்கத்தைப் பாதுகாப்பதாக உள்ளன.சிலருடைய தத்துவங்கள் மக்களை எழுச்சி அடையும்படி செய்தன.அக்காலப் பழக்கத்தில் இருந்த மூடநம்பிக்கைக்கு எதிராக இளைஞர்களை சிந்திக்கத் தூண்டிய சாக்ரடீஸிற்கு விஷம் கொடுத்து கொலை செய்தனர். மாற்ற வேண்டும், மக்கள் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக பல தலைவர்கள் தங்கள் வாழ்நாளை மக்களுக்காக வாழ்ந்தனர்.தங்கள் நாட்டின் சுதந்திரத்திற்காகவும், தொழிலாளி வர்கத்திற்காகவும் பாடுபட்டவர்கள் ஏராளம்.அதுதவிர உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் உரிமைகளைப் பெற்று நலமாக வாழ வேண்டும் எனப் போராடிய , புரட்சி செய்த தலைவர்களும் உள்ளனர்.சமூகத்தை மாற்ற போராடிய தலைவர்களை சமூக விஞ்ஞானிகள் என்று அழைக்கலாம். இப்படி சமூக மாற்றத்திற்காக பாடுபட்ட பல தலைவர்களின் வாழ்க்கையோடு அவர்கள் சமூகத்திற்கு விட்டுச் சென்ற பிரபலமான வாசகங்களை அடிப்படையாகக் கொண்டு இப்புத்தகத்தை எழுதியுள்ளேன்.மாணவர்கள் மத்தியில் இப்புத்தகம் நல்ல சிந்தனைகளை வளர்க்கும் என்று நம்புகிறேன்.
உருவாக்கம்: ஏற்காடு இளங்கோ
ஒருங்குறி மாற்றம்: மு.சிவலிங்கம்
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
மின்னூலாக்கம் : த.சீனிவாசன்
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “சமூக அறிஞர்களின் வாசகங்கள்” SocialExperts.epub – Downloaded 19104 times – 14.28 MBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “சமூக அறிஞர்களின் வாசகங்கள்” SocialExperts_A4.pdf – Downloaded 17963 times – 4.51 MBசெல்பேசிகளில் படிக்க
Download “சமூக அறிஞர்களின் வாசகங்கள்” SocialExperts_6inch.pdf – Downloaded 9323 times – 4.65 MBபுத்தக எண் – 154
ஏப்ரல் 3 2015
Leave a Reply