சில ரகசியங்கள் – சிறுகதைகள் – மெலட்டூர் இரா.நடராஜன்

நூல் : சில ரகசியங்கள்
ஆசிரியர் : மெலட்டூர். இரா.நடராஜன்

மின்னூலாக்கம் : த . தனசேகர்

வெளியீடு : FreeTamilEbooks.com

உரிமை:
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

அணிந்துரை

நான் வியந்த பல எழுத்தாளர்களில் மெலட்டூர் நடராஜனும் ஒருவர். இப்பவும் காலேஜ் படித்துக்கொண்டிக்கும் ஜாலி மாணவன் போன்ற தோற்றம் கொண்டவர். ஆனால் அவரது நட்பு வட்டம், இலக்கிய வட்டம், தத்துவ வட்டம் ரொம்ப பெரியது. அவர் எங்கள் ‘அக்கறை’ கூட்டத்தின் முக்கிய புள்ளிகளில் ஒருவர். சென்னைவாசியாக இருந்தவரையில் தவறாது ‘அக்கறை’ கூட்டத்தில் கலந்து கொள்வார். தூத்துக்குடியில் தற்போது வேலை நிமித்தமாக வசித்து வந்தாலும் அவ்வப்போது திடீர் தீடீரென ‘அக்கறையுடன்’ தலை காட்டுவார். தகவல் களஞ்சியமாக, அனுபவப் பெட்டகமாகப் பல நாட்டு நடப்பு விஷயங்களைக் கூறுவார். அந்தச் செய்திகளைப் பத்திரிகையில் படித்துவிட முடியாது. பின்னணிகளும் inside information களும் சுவையான திகைப்புகளாக மலரும்.

அஸ்ஸாமில் போலிங் பூத் ஆபீசராக இருந்த போது, நடந்த திகில் அனுபவங்களை சொல்லி, எப்படி நம் மின்னனு வாக்கு இயந்திரம் மிக சிறப்பானது என்று விளக்கி சொல்வார். படித்தது, பார்த்தது, கேட்டது என்று அவரின் பேச்சு ஒரு பத்திரிக்கையாளனின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருக்கும்

இந்தத் தொகுதியிலுள்ள கதைகள் அத்தனையையுமே தமது அனுபவங்களால் பின்னியிருக்கிறார். எல்லாக் கதைகளிலுமே அவரது சொடுக்கு நடையைக் காணலாம். விறுவிறுப்பும் சிறுகதைக் களத்துக்கான கச்சிதமும் சகல கதைகளிலும் இருப்பதால் தனியன்கள் சாத்தியமில்லை. ஆழ்ந்த தத்துவங்களை அனாயாசமாக மனத்தில் பதிய வைக்கிறார்.

சுஜாதாவை வழிபட்டு வழிபட்டு அரை சுஜாதாவாக ஆகிவிட்டார். பத்திரிகாசிரியர்கள் வழி வகுத்துத் தந்தால் குறைந்த பட்சம் ‘முக்கால் சுஜாதாவாக முற்றுவதற்கு’ வாய்ப்பு உண்டு.

என்றைக்கும் உங்கள் பிரியத்துக்கு உரிய

பாக்கியம் ராமசாமி

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “சில ரகசியங்கள் epub” sila_ragasiyangal.epub – Downloaded 2214 times –

களில் படிக்க, அச்சடிக்க

Download “சில ரகசியங்கள் A4 PDF” sila_ragasiyangalA4.pdf – Downloaded 2448 times –

செல்பேசிகளில் படிக்க

Download “சில ரகசியங்கள் 6 inch PDF” sila_ragasiyangal6inch.pdf – Downloaded 1134 times –

பிற வடிவங்களில் படிக்க –  Archive.org

புத்தக எண் – 368

மார்ச் 20 2018

மேலும் சில சிறுகதைகள்

  • மீராவும் மொஹம்மது ஆரிஃபும் – சிறுகதைகள்
  • சாத்தானின் பாதச் சுவடுகள் – சிறுகதை – சு.சோமு
  • பாஸ்கோம் பள்ளத்தாக்கு மர்மம்
  • ஏட்டில் இல்லாத மகாபாரதக் கதைகள் – சிறுகதைகள் – புலவர் த. கோவேந்தன்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.