சாலை வளைவில்
கா.பாலபாரதி
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
பதிப்புரிமை © இவரால் / இதனால் கா.பாலபாரதி
Creative Commons Attribution-NonCommercial-NoDerivs
குறிப்பிடுதல் – இலாபநோக்கமற்ற , வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND)
மின்னூலாக்கம் – மேலட்டை உருவாக்கம் – லெனின் குருசாமி –
உங்களுடன் சில நிமிடங்கள்…
மின்னூல் வாசக நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த வணக்கங்கள். எனது நான்காவது கவிதை மின்னூலின் மூலம், உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி!இதற்கு முந்தய நூல்களில், பல்வேறு தலைப்புகளில் கவிதைகளை எழுதி வந்த நான், அதிலிருந்து சிறு மாறுதலாக “சாலை வளைவில்” என்னும் இந்த கவிதை நூல் முழுவதும் இனிக்க இனிக்க, காதல் கவிதைகளால் அலங்கரித்துள்ளேன். ’என்னடா காதல். அதலாம் எனக்கு பிடிக்கவே பிடிக்காது’ என்று சொல்பவர்களானாலும் சரி, ‘காதலா, அது இல்லாம என் வாழ்க்கையே இல்ல’ என்று சொல்பவர்களானாலும் சரி, இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் நம் வாழ்வில் ஏதோ ஒரு காலகட்டத்தில் சுவாரசியமான இடத்தைப் பிடித்திருக்கும் என்பதில், எந்த ஒரு ஐயமும் இல்லை. உருகி உருகி உங்கள் உள் நெஞ்சில் காதல் ஊற்றாய்ப் பெருகக் காத்திருக்கும் இந்த கவிதைகள், காதலின் உண்மைத் தோற்றத்தையும், பரிசத்தையும், சாந்தத்தையும், அழகையும் அள்ளி ஊட்டப் போகிறது. கவிதைகளோடு நீங்கள் கரைந்து போக வேண்டிய நேரத்தில், நான் பேசி தங்கள் நேரத்தை வீணடிப்பதைவிட, என் கவிதைகளைத் தங்கள் கையடக்கக் கருவிகளுக்குள் அனுப்பி வைக்கிறேன். உள்ளம் திறந்து ஏற்று, காதல் கவிதைகளால் நெஞ்சம் நிறைத்துக்கொள்ளுங்கள். கவிதைகள் மீதான தங்கள் மேலான கருத்துக்களை, கீழ் குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் வாட்சாப் எண்ணில் தெரிவிக்கவும். நன்றி!
இப்படிக்கு
கா.பாலபாரதி
மின்னஞ்சல்: gandhiyameenal@gmail.com
வாட்சாப் எண்: 9003644672
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “சாலை வளைவில் epub” salai-valaivil.epub – Downloaded 5206 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “சாலை வளைவில் A4” salai-valaivil-a4.pdf – Downloaded 6419 times –செல்பேசிகளில் படிக்க
Download “சாலை வளைவில் 6inch” salai-valaivil-6in.pdf – Downloaded 2048 times –புத்தக எண் – 245
பிப்ரவரி 29 2016
Leave a Reply