அரிய இயல் தாவரங்கள்
(சேர்வராயன் மலை)
மின்னூல் வெளியீடு : http://www.FreeTamilEbooks.com
உரிமை :
Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
ஆசிரியர் – ஏற்காடு இளங்கோ [email protected]
அட்டைப்படம் – மின்னூலாக்கம் – த. சீனிவாசன் [email protected]
என்னுரை
சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலையானது பல்வேறு தாவரங்களைக் கொண்ட ஒரு இயற்கை வளம் நிறைந்த பகுதியாக விளங்கி வருகிறது. மலைப்பகுதியில் வளர்ச்சி என்ற பெயரால் தாவரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதனால் பல்வேறு தாவரங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இம்மலையில் அழிந்து வரும் தாவரங்களும், அரிதான தாவரங்களும் குறிப்பிடும்படியான அளவில் இருக்கின்றன. இம்மலையில் இயற்கையாக வளரும் இயல் தாவரங்கள் மற்றும் வேறு பல பகுதிகளில் இருந்து கொண்டு வந்து பாதுகாக்கப்படும் அரிய தாவரங்களும் உள்ளன. தாவரவியல் பயிலும் மாணவர்களுக்கும் மற்றும் தாவரங்களின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கும் இது பயனுள்ளதாக அமையும். மேலும் இது போன்ற அரிதான தாவரங்களைப் பாதுகாத்து, பராமரிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன்.
இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு எனக்குப் பெரும் உதவியாக விளங்கியது பொட்டானிக்கல் சர்வே ஆப் இந்தியா என்னும் தாவரங்கள் மதிப்பாய்வுத் துறையாகும். இங்கு பணிபுரியும் அனுபவத்தைக் கொண்டே இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன். இதனை எழுதுவதற்கு உதவி புரிந்த எனது மனைவி திருமிகு இ.தில்லைக்கரசி அவர்களுக்கும், பிழைத் திருத்தம் செய்து கொடுத்த ஆசிரியர் திருமிகு சி.சீனிவாசன் அவர்களுக்கும் நன்றி. மேலும் இப்புத்தகத்தை தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு ந.மு.கார்த்திகா அவர்களுக்கும், இதனை வெளியிட்ட Freetamilebooks.com எனது மனமார்ந்த நன்றி.
வாழ்த்துகளுடன்
ஏற்காடு இளங்கோ
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “அரிய இயல் தாவரங்கள் (சேர்வராயன் மலை) epub” rare-plants-servarayan-hill.epub – Downloaded 6168 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “அரிய இயல் தாவரங்கள் (சேர்வராயன் மலை) mobi” rare-plants-servarayan-hill.mobi – Downloaded 1052 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “அரிய இயல் தாவரங்கள் (சேர்வராயன் மலை) A4 PDF” rare-plants-servarayan-hill-A4.pdf – Downloaded 5699 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “அரிய இயல் தாவரங்கள் (சேர்வராயன் மலை) 6 inch PDF” rare-plants-servarayan-hill-6-inch.pdf – Downloaded 1832 times –பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/rare-plants-servarayan
புத்தக எண் – 279
ஜனவரி 3 2017
Leave a Reply