ஏற்காடு இளங்கோ
வெளியீடு : FreeTamilEbooks.com
சென்னை
முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License..
உருவாக்கம்: ஏற்காடு இளங்கோ
யுனுகோட் மாற்றம் – மு.சிவலிங்கம்
மேலட்டை உருவாக்கம்: ஜெகதீஸ்வரன் நடராஜன்
மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
என்னுரை
ஒரு திரைப்படத்தின் பெயரைச் சொல்லி, அந்தப் படத்தின் கதாநாயகன் யார் எனக் கேட்டால், பதில் சரியாகச் சொல்கிறார்கள். ஆனால் முதன் முதலில் விண்வெளிக்குச் சென்ற இந்திய வீரர் யார் எனக் கேட்டால் பலரும் பதில் தெரியாமல் தடுமாறுகின்றனர். ஒரு நடிகருக்கு இருக்கும் புகழை விட விண்வெளிக்குச் சென்று வந்த வீரரின் புகழ் குறைவாகவே உள்ளது. ஒரு நடிகரை நாட்டு மக்கள் எந்தளவிற்குத் தெரிந்து வைத்திருக்கிறார்களோ அந்த அளவிற்கு ராகேஷ் சர்மா தெரிந்தவராக இல்லை. இவர் தான் முதன் முதலில் இந்தியாவின் சார்பாக விண்வெளிக்குச் சென்று வந்தவர் எனச் சொல்ல வேண்டிய நிலை இன்று உள்ளது.
சினிமாக் கதாநாயகர்களின் புகைப்படங்கள் கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரின் புகைப்படம் எங்கும் கிடைப்பதில்லை. மனிதன் முதன் முதலில் விண்வெளிக்குச் சென்று வந்த 50வது ஆண்டு விழா ஏப்ரல் 2011இல் உலகம் முழுவதும் நடக்க உள்ளது. அதே போல் ராகேஷ் சர்மா விண்வெளிக்குச் சென்று வந்த 27வது ஆண்டு விழாவும் ஏப்ரல் 3, 2011 இல் நடக்க உள்ளது.இந்தச் சமயத்தில் மாணவர்கள் ராகேஷ் சர்மாவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன்.
இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு உதவிகள் புரிந்த எனது மனைவி திருமிகு. இ. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றி. இப்புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த திருமிகு. சரவணமணியன் அவர்களுக்கும், புத்தகத்தைச் தட்டச்சுச் செய்து கொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் நன்றி. இந்தப் புத்தகத்தை வெளியிட்ட அறிவியல் வெளியீடுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த புத்தகத்தை மின்னூலாக வெளியிட்டுள்ள FreeTamilEbooks.com குழுவினருக்கு நன்றி.
வாழ்த்துக்களுடன்
– ஏற்காடு இளங்கோ
Download free ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா epub” rakesh-sharma.epub – Downloaded 4915 times – 959.93 KB
கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா A4 PDF” rakesh-sharma-A4.pdf – Downloaded 27244 times – 2.51 MB
செல்பேசிகளில் படிக்க
Download “முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா 6 Inch PDF” rakesh-sharma-6-inch.pdf – Downloaded 2784 times – 2.55 MB
புத்தக எண் – 104
ஆகஸ்ட் 18 2014
Leave a Reply