மாணிக்கவாசகப் பெருமான் அருளிய ‘பிடித்த பத்து’

Pedetha_10-copy

மாணிக்கவாசகப் பெருமான் அருளிய ‘பிடித்த பத்து’

பொருளுரை: பார்வதி இராமச்சந்திரன்

மாணிக்கவாசகப் பெருமான், ‘பிடித்த பத்து’ பதிகங்களை திருத்தோணிபுரத்தில்(சீர்காழி) அருளினார்..இறைவனைத் தாம் விடாது பற்றிப் பிடித்த பான்மையைக் கூறும் பதிகங்களாதலால் இவை ‘பிடித்த பத்து’ எனப் பெயர் பெற்றன. இறைவனோடு தாம் முக்தியில் கலந்த அனுபவத்தைக் கூறும் பதிகங்களாதலால் ‘முத்திக் கலப்புரைத்தல்’ எனப்பட்டது…

இறையருளால், மாணிக்கவாசகப் பெருமான் அருளிய ‘பிடித்த பத்து’ பதிகங்களுக்கு, நான் புரிந்து கொண்ட வரையில் உரை எழுதியிருக்கிறேன்!…இதற்கான என் தகுதி பற்றி நான் அறியேன்!..ஆயினும் ஈசனருளை முன்னிறுத்தி, இதனைச் செய்திருக்கிறேன்..

இது என் முதல் மின்னூல்.. இந்த நூலை, திருப்பரங்குன்றத்தில் கோயில் கொண்டருளும், அருள்மிகு கோவர்த்தனாம்பிகை உடனுறை ஸ்ரீ சத்தியகிரீஸ்வர சுவாமி திருவடிகளிலும், அருள்மிகு தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருவடிகளிலும், பக்தியுடன் சமர்ப்பிக்கிறேன்… இந்த நூலைப் படிப்போர் அனைவருக்கும், இறைவன் வேண்டுவன வழங்கி அருளப் பிரார்த்திக்கிறேன்!!..

இந்த நூலில் பிழை திருத்தங்கள் செய்து கொடுத்ததோடு, ஆக்கபூர்வமான ஆலோசனைகள் தந்து ஊக்கிய திருமதி.மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகின்றேன்..

இந்த நூலை மின்னூலாக்கம் செய்து உதவிய திரு. ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றியும் வணக்கமும்.

அன்பர்கள் நூலினைப் படித்து, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.. உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!!!!!….

– பார்வதி இராமச்சந்திரன்
[email protected]

அட்டைப் படம்  – ஜெகதீஸ்வரன் நடராஜன் – [email protected]

மின்னூலாக்கம் – அருண் பிரகாஷ் – [email protected]

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

மேலும் சில இலக்கிய நூல்கள்

  • தமிழ் – மின்னிதழ் 2
  • தமிழர் நாட்டுப்பாடல்கள்
  • எழு பெரு வள்ளல்கள் – சங்க இலக்கியம் – கி.வா.ஜகந்நாதன்
  • கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.