நூல் : பல்லவப் பேரரசர்
ஆசிரியர் : மா.இராசமாணிக்கனார்
மின்னூலாக்கம் : த . தனசேகர்
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை:
உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
நூல் மூலம் – https://ta.wikisource.org/s/8vl8
நன்றி – விக்கி மூலம் குழு – https://ta.wikisource.org
முன்னுரை
“பல்லவர் வரலாறு” என்ற எனது பெரு நூலைப் பார்வையிட்ட அறிஞர் பலர், இளைஞர்களுக்குதவும் முறையில் பல்லவரைப் பற்றிச் சில நூல்களை எழுதுமாறு வற்புறுத்தினர். அதன் பயனாகப் பல்லவப் பேரரசர் என்னும் வரிசையின் முதல் நூலாக வெளிவரும் இச்சிறு நூல் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதனில், பல்லவப் பேரரசை ஏற்படுத்திய சிம்ம விஷ்ணுவின் மகனான மஹேந்திரவர்மன், பெயரனான நரசிம்மவர்மன் வரலாறுகள் குறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் காலத்திற்றான் பல்லவர்-சாளுக்கியர் போர்கள் வன்மையாகத் தொடங்கப் பெற்றன. சமணம் ஒடுக்கப்பட்டுச் சைவமும் வைணவமும் பரவின காலமும் இதுவேயாகும். தமிழ் நாட்டிற்கே புதியவையான. குடைவரைக் கோவில்களும் ஒற்றைக்கற் கோவில்களும் தோற்றம் எடுத்தமை இப்பேரரசர் காலத்திற்றான் என்பதை அனைவரும் அறிவர். நாகரிகக் கலைகளான இசை-நடனம்-நாடகம் சிற்பம்-ஒவியம் என்பன பல்லவ மன்னரால் போற்றி வளர்க்கப்பட்ட காலமும் இதுவென்னலாம். இப்பல துறைகளில் இப்பேரரசர் காட்டிய வழிவகைகளைப் பின்பற்றியே இவர் மரபினர் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் பேரரசராக இருந்து பல்லவப் பெருநாட்டை ஆண்டனர் என்னல் மிகையாகாது. இங்ஙனம் எல்லாத் துறைகளிலும் பண்பட்டு விளங்கிய இப்பெரு வேந்தர் வரலாறுகளைப் படிப்பதால், கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தமிழ் நாட்டு வரலாற்றை ஒருவாறு அறிந்தின்புறலாம்.
இராசமாணிக்கனார்.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “பல்லவப் பேரரசர் epub” pallava_perarasargal.epub – Downloaded 2475 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “பல்லவப் பேரரசர் A4 PDF” pallava_perarasargalA4.pdf – Downloaded 4164 times –செல்பேசிகளில் படிக்க
Download “பல்லவப் பேரரசர் 6 inch PDF” pallava_perarasargal6inch.pdf – Downloaded 1389 times –பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 348
பிப்ரவரி 15 2018
Leave a Reply