பாண்டியன் ரமேஷ்
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
சென்னை
பகுத்தறிவின் முரண்பாடுகள் பகுத்தறியப்படுகிறது – பாகம்-1 Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
உருவாக்கம்: பாண்டியன் ரமேஷ்
மின்னஞ்சல்: ooossai@gmail.com
மேலட்டை உருவாக்கம்: ப்ரியமுடன் வசந்த்
மின்னஞ்சல்: vasanth1717@gmail.com
மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
இந்த மின்னூல் தேவையா என்கிற கேள்வி சிலரிடமாவது எழக்கூடும் – காரணம் பகுத்தறிவாளர்களையும் பகுத்தறிய முனைவதால்…உலகிலேயே பகுத்தறிவாளர்களுக்கென்று இயக்கம், அமைப்பு – அதன் தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தையே கைப்பற்றல் என்கிற பெருமைக்குரிய அம்சங்கள் தமிழகத்தில் நடந்திருந்தாலும் – அவை முழுப்பெருமை அடைவது, அதன் நூறு சதவித செயல்பாட்டில் தான். ஆனால் திராவிட பகுத்தறிவாளர்களின் நடவடிக்கைகள் பெருமைக்குரியதாக இல்லை என்பது வருத்தமான உண்மை.
மதவாதிகளிடம் இருக்கிற மூட நம்பிக்கைகள், முரண்பாடுகள், பித்தலாட்டங்கள் – இவை அனைத்துமே கொஞ்சமும் குறையாமல் அல்லது இன்னும் அதிகமாகவோ பகுத்தறிவாதிகளிடமும் காண நேர்ந்தது. அதை, “நமக்கேன் வம்பு” என்று பலர் கண்டுணர்ந்தும் கடந்து சென்றிருக்கலாம். சக பகுத்தறிவாளரான எம்மால் அப்படி கண்டு கொள்ளாமல் செல்ல இயலவில்லை. அதே நேரம், அவர்களின் முரண்பாடுகளை விமர்சிக்கும்போது, “சுயமரியாதைக்காரர்களை விமர்சிக்கலாமா” என்றொரு கேள்வியும் வந்தது.
குப்பையை யார் போட்டாலும், தெரு அசுத்தமாக தானே செய்யும். பகுத்தறிவாதி போட்ட குப்பை என்பதற்காக, அவற்றை கூட்டி பெருக்காமல் இருக்க முடியுமா? ஒரு சிறு குற்ற செயலில் இருந்து தேச விரோத நடவடிக்கைவரை, அதை விமர்சிக்க அல்லது கண்டும் காணாமல் போக பகுத்தறிவாதிகள் காட்டுகிற அணுகுமுறை உள்ளதே… மதவாதிகள் தோற்றார்கள். சாதியவாதிகள் தோற்றார்கள். இந்த கட்டுரைகளில் சுட்டிக் காட்டப்படும் முரண்பாடுகள் யாவும் – சில மாத விடுதலை பத்திரிகையை வாசித்ததன் விளைவுகள்.. மொத்த பத்திரிகையையும் வாசித்தால் தான் தெரியும் – அவர்கள் சுமந்து கொண்டிருக்கும் மொத்த முரண்பாடுகளும்..பகுத்தறிவாதிகள் போட்ட குப்பையை கூட்டி பெருக்கியதன் விளைவே – இந்த மின்னூலில் உள்ள கட்டுரைகள்.
மேலும் பெரியார் காலம் தொட்டு காணப்படும் முரண்பாடுகளையும் பதிவு செய்திருக்கிறோம். அப்போது தான் இப்போது காண கிடைக்கும் முரண்பாடுகளுக்கு காரணமும், ஆரம்பமும் எங்கே என்று புரியும். சின்ன சின்ன வரலாற்று நிகழ்வினையும் பதிவு செய்ய முடியும். இந்த கட்டுரைகள் இன்றைய காலத்தின் கண்ணாடி… மேலும் அவசிய தேவை எனலாம். ஒரு சாராரின் கட்டுரைகளை மட்டும் வாசித்தால் – நாம் வாழும் காலத்திலேயே பல்வேறு உண்மைகளை அறியாதவர்களாகவே வாழ்ந்து மடிந்தவர்களாவோம். சர்வரோக நிவாரணியாக – அவர்கள் தங்களின் பகுத்தறிவை, பெரியார் சிந்தனைகளை கருதும்போது, அதில் எந்தளவு உண்மை உள்ளது என்று அலசி ஆராய்ந்ததன் பலனே இந்த கட்டுரைகள். திராவிட நாத்திக பகுத்தறிவாளரின் முரண்பாடுகளை, மோசமான அணுகுமுறைகளை சரியான முறையில் ஆய்வு செய்து எழுதியதாகவே நூறு சதம் நம்புகிறேன். வாசியுங்கள். உண்மை இருக்கிறதென ஒப்புக்கொள்வீர்கள்.
ஒரு சிறுகதை எழுத்தாளனாக துவங்கிய என் எழுத்து பயணம் வார இதழ்களில் வெற்றிகரமாகவே தொடர்ந்தது. சில இலக்கிய அமைப்புகளின் விருதுகள் என்று தொடர்ந்த அந்த பயணம் தடையும் பட்டது. சிறுகதை எழுத்தாளர்களின் கனவு தொடர் எழுதுவது. தொடர்கதைகளை வெளியிடுவதற்கான சூழலை தற்கால பத்திரிகைகள் கொண்டிருக்கவில்லை என்பதால் எழுதுவதை நிறுத்தினேன். வார பத்திரிகை ஆசிரியர்களிடம் தொடர் எழுத வாய்ப்பு கேட்டபோது, “இணையத்தில் எழுத சொன்னார்கள்”.
அதற்கு பிறகு தான் கணினியை பயன்படுத்தவே கற்றுகொண்டேன். பதிவுலகில் எழுதுபவர்கள் தந்த பிளாக்கர் டிப்ஸ்களை வாசித்து, வலைத்தளம் துவங்கினேன். வலையுலகிற்கு (http://oosssai.blogspot.com) வந்தும் நிறைய எழுதிவிட்டேன். நிறைய வாசிக்கிற வாய்ப்பையும் பெற்றேன். இன்றைக்கு இந்த மின்னூலையும் வெளியிட்டுள்ளேன். பள்ளி இறுதியாண்டை கூட தாண்டாத நான், இந்த மின்னூலை நானே உருவாக்குகிற அளவு கணினி அறிவு பெற்றதற்கு, இணையத்தில் தமிழில் கொட்டிகிடக்கிற கணினி சார் எழுத்துகளே காரணம். வாழ்க தமிழ்.
இந்த நேரத்தில் – இணையத்தில் எழுதும் யோசனை தந்தவர்களை நினைத்து பார்க்கிறேன். நன்றி கூறுகிறேன். எனது கட்டுரைகள் கடுமையான விமர்சனங்களை சந்தித்தபோதும், உண்மைகளை எழுதுகிறோம் என்கிற பெருமிதம் கொள்கிறேன். உண்மையை எழுதுவதும், உண்மையை பேசுவதும் சமூகத்திற்கு ஆற்றும் பணியாகவே கருதுகிறேன். இந்த சேவை தொடரும் – வாசிப்பாளர்களின் பங்களிப்போடு…
நன்றி.
அன்புடன்,
பாண்டியன் ரமேஷ்.
Download free ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “பகுத்தறிவின் முரண்பாடுகள் பகுத்தறியப்படுகிறது – பாகம்-1 epub” pagutharivu.epub – Downloaded 11014 times – 498.82 KB
கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “பகுத்தறிவின் முரண்பாடுகள் பகுத்தறியப்படுகிறது – பாகம்-1 A4 PDF” pagutharivu-A4.pdf – Downloaded 18562 times – 1.30 MB
செல்பேசிகளில் படிக்க
Download “பகுத்தறிவின் முரண்பாடுகள் பகுத்தறியப்படுகிறது – பாகம்-1 6 inch PDF” pagutharivu-6-Inch.pdf – Downloaded 8863 times – 1.37 MB
புத்தக எண் – 85
சென்னை
ஜூன் 25 2014






Leave a Reply