
நெட்வொர்க் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்களை அல்லது கருவிகளையோ ஒன்றோடு மற்றொன்று தகவல் தொடர்புப் பாதை வழியாக அமைவதேயாகும். நெட்வொர்க் மூலம் பயனாளர்கள் ஒருவரோடு ஒருவர் தகவல் பரிமாற்றம் செய்திட முடியும்.
ஒரு மென்பொருளைப் பற்றி நம் படிக்கும்பொழுது அதை எவ்வாறு நமது கணினியில் நிறுவ வேண்டும் என்ற குறிப்பு மிகவும் அவசியம். அந்த மென்பொருள் சார்ந்த தொழில்நுட்ப கருத்தும் வாசகர்கள் எதிர்பார்க்கும் ஒன்று. “Packet Tracer மூலம்நெட்வொர்க்” என்ற இந்தப் புத்தகம் மேற்குறிப்பிட்ட வாசகர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்து உள்ளது. சில தகவல் மற்றும் தொழில்நுட்ப சொற்களை அப்படியே பயன்படுத்தி இருப்பது இந்தப் புத்தகதின் மற்றும் ஒரு சிறப்பாகும். “packet tracer” மென் பொருளின் அனைத்து பயன்பாட்டையும், இரத்தின சுருக்கமாகத் தந்திருப்பது பாராட்டுக்குரியது. ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் “என்ன பார்த்தோம்” பகுதி அனைவருக்கும் பயன் உள்ளதாக அமையும்.
இந்தப் புத்தகம் தகவல் தொழில்நுட்ப மாணவர்களுக்கும், பயிர்ச்சி வல்லுநர்களுக்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
முனைவர். ராம்குமார் லக்ஷ்மி நாராயணன்,
திரு. மகேந்திர குமார்.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “Packet Tracer” packettracer.epub – Downloaded 14044 times – 3.72 MBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “Packet Tracer” Packettracer_CustomA4.pdf – Downloaded 21151 times – 2.44 MBசெல்பேசிகளில் படிக்க
Download “Packet Tracer” Packettracer_6inch.pdf – Downloaded 6825 times – 2.52 MBபுத்தகம் குறித்த கூடுதல் தகவல்
வெளியீடு: FreeTamilEbooks.com
எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே.
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
மின்னூலாக்கம், வெளியீடு : சிவமுருகன் பெருமாள்
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
புத்தக எண் – 124
டிசம்பர் 18 2014





Leave a Reply