லா.ச. ராமாமிருதம்
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : Public Domain
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை
மின்னூலாக்கம் – லெனின் குருசாமி –
பதிப்புரை
தன் இளமைக்கால வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை இலக்கிய அனுபவங்களாக வடித்துக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர் கலைமாமணி லா.ச. ராமாமிருதம் அவர்கள். இது எப்படி சாத்தியமாகிறது என்று கேட்டால், “கையில் உள்ளதை விட்டுவிட்டு, காற்றில் பறப்பதை வைத்துக்கொண்டு இலக்கியம் பண்ணச் சக்தி எனக்குக் கிடையாது. நிகழ்ச்சி சரித்திரமாகி, சரித்திரம் நினைவாகி, நினைவு கதையாகி, கதையைச் சொல்லிச் சொல்லி, அல்ல நினைவின் ஊறலில், சொல்லின் பிசிர் விட்டு, பாஷை மெருகேறி, விஷயம் துல்லியமாகி, பிறகு நம் ரத்தத்தில் தோய்ந்து, நம் மனத்தையும், மாண்பையும் ஊட்டி வளர்க்கும் காவியம் இலக்கியத்தின் ரசாயனம் இதுதான்” என்கிறார் ஆசிரியர்.
தனது முன்னோர்கள், அவர்கள் வாழ்வின் ஆதாரங்கள், நம்பிக்கைகள், லட்சியங்கள், ஆசா பாசங்கள், வாழ்க்கை முறை எப்படி இருந்தது? இப்போது எந்த அளவுக்கு இருக்கிறது? எந்தெந்தக் கோணங்களில் முன்னேறியிருக்கிறோம் – தனக்கு நேர்ந்த சம்பவங்கள் தன் நோக்கை’ எந்த அளவுக்கு பாதித்தன என்பதை எல்லாம் சொல்லி, அதனால் நேரும், நேரக்கூடிய இலக்கிய அனுபவத்தை ‘அமுதசுரபி’ பத்திரிகை மூலம் வாசகர்களிடம் பகிர்ந்துகொண்டதை வானதி பதிப்பகம் மூலம் நூல் வடிவாக உங்கள் முன் படைக்கிறேன். இந்தப் பாற்கடலில் நிறைந்திருக்கும் அமுதத் துளிகளைப் பருக வாருங்கள் என்று வாசகர்களை அன்போடு அழைக்கிறேன்.
ஏ. திருநாவுக்கரசு வானதி பதிப்பகம்
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “பாற்கடல் epub” paarkadal.epub – Downloaded 2025 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “பாற்கடல் A4 PDF” parkadal-a4.pdf – Downloaded 2360 times –செல்பேசிகளில் படிக்க
Download “பாற்கடல் 6 inch PDF” paarkadal_6in.pdf – Downloaded 1270 times –பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 321
நவம்பர் 1 2017
Leave a Reply