Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
மின்னூலாக்கம் – லெனின் குருசாமி –
அட்டைபடம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com
என்னுரை
பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் எப்படி நடந்தன, அதன் அறிவியல் பின்னணி என்ன என்பதைப் பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்துகொண்டே இருக்கின்றனர். ஆராய்ச்சி என்பது அனைத்துத் துறைகளிலும் நடந்துகொண்டே இருக்கிறது. பூமி உள்பட பிரபஞ்சம் எப்படி இயங்கிக்கொண்டே இருக்கிறதோ, அதுபோலவே அறிவியல் அறிஞர்களும் இயங்கிக்கொண்டே இருக்கின்றனர். இயக்கம் இல்லாமல் எதுவும் இல்லை. விஞ்ஞானிகளின் தொடர் ஆய்வின் காரணமாக புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. எது ஒன்றாக இருந்தாலும் அதில் புதைந்து கிடக்கும் அறிவியலை கண்டுபிடிப்பது என்பதே அறிவியலின் நோக்கமாகும். புதிய கண்டுபிடிப்புகள் சமூக வளர்ச்சிக்கும், அறிவியல் முன்னேற்றத்திற்கும், அறிவியல் பார்வையை வளர்ப்பதற்கும் கொண்டு செல்கிறது! இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அறிவியல் கட்டுரைகள் நமக்கு பல்வேறு புதிய தகவல்களை தரக்கூடியது. இதுபோன்ற புதிய தகவல்களை ஒவ்வொருவரும் தேடி, கண்டுபிடித்து படிப்பது மிகவும் அவசியம் என்கிற நோக்கிலேயே இக்கட்டுரைகளின் தொகுப்பினை புத்தகமாக உருவாக்கியுள்ளேன். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்த என் மனைவி திருமிகு இ.தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திருமிகு செ.நமசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு நா.மு.கார்த்திகா அவர்களுக்கும் எனது நன்றி. எனது கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வரும் ஜெயம் முரசு இதழுக்கும் எனது நன்றி. இந்தப்புத்தகத்தை உங்கள் கரங்களில் தவழவிட்ட freetamilebooks.com குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துகளுடன்
ஏற்காடு இளங்கோ
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “மூன்றாம் கண் – அறிவியல் கட்டுரைகள் – ஏற்காடு இளங்கோ epub” moondram-kann.epub – Downloaded 3129 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “மூன்றாம் கண் – அறிவியல் கட்டுரைகள் – ஏற்காடு இளங்கோ A4 PDF” moondram-kann-a4.pdf – Downloaded 8617 times –செல்பேசிகளில் படிக்க
Download “மூன்றாம் கண் – அறிவியல் கட்டுரைகள் – ஏற்காடு இளங்கோ 6 inch PDF” moondram-kann-6inch.pdf – Downloaded 3172 times –பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 261
ஜூலை 28 2016





Leave a Reply