காணாமல் போன நண்பர்கள்
அதீதம் இணைய இதழில் வெளிவந்த தொடர்.
ஆசிரியர் – தருமி
மின்னஞ்சல்: [email protected]
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
மின்னூலாக்கம் : சிவமுருகன்
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
உறவுகள் நம் தலை மேல் சுமத்தப்பட்டவை. அவை பாரங்களாகவும் இருக்கலாம்; அல்லது சுகமான சுமைகளாகவும் இருக்கலாம்.
ஆனால் நம் நட்புகள் நாம் தேடித் தேடி பொறுக்கி எடுத்த பொக்கிஷங்கள். அவைகள் எப்போதும் சுமையாக இருப்பதில்லை. இனிமை மட்டுமே விஞ்சி நிற்கும் உறவுகள் அவை. நண்பன் சாகலாம்; ஆனால் நட்பு சாகக்கூடாது என்பார்கள். என் அனுபவத்தில் இறந்து போன நண்பனும் கூட இன்னும் ‘தொடர்பில்’ இருப்பது போல் உணர்கிறேன். அதுவே நட்பின் சிறப்பாக இருக்கலாம்.
வாழ்நாளில் ஆரம்ப காலங்களில் இருந்து எனக்கு எனக்கு ஏற்பட்ட சில நட்புகளை நினைத்துப் பார்க்க ஆரம்பத்தேன். எல்லா
வயதானவர்களுக்கும் வரும் வியாதிதான் இது! பட்டியலிட ஆரம்பிக்கும் போது தான், கடந்து போன காலத்தைப் புரட்டி போட்டது
போல் ஒவ்வொருவராக மனத்திரையில் வலம் வர ஆரம்பித்தார்கள். நானிதுவரை நினைத்தும் பார்க்காத சிலரும் தலை காட்டினார்கள். அவர்களின் நினைவு ஆழ்மனத்தில் புதைந்து கிடந்திருக்கும் போலும். நினைக்க ஆரம்பித்ததும் மணற்கேணி ஊற்றென அவர்களது நினைவும் மேலெழுந்தது. நண்பர்களாக இருந்தவர்கள் என்பதால் மிஞ்சி நின்றது இனிய நினைவுகள் மட்டுமே.”டூ” போட்டு பிரிந்து போன நண்பர்களும் இப்போது இனிமையாக மனதில் நின்றார்கள். வாழ்ந்த வாழ்க்கையின் பெரும்பகுதியை திரும்பிப் பார்த்தது போல் இருந்தது. ஒவ்வொரு நண்பனையும் நினைக்கும் போது அவனோடு கழித்த நேரங்கள், அந்த நேரத்துக் குறும்புகள், சூழல்கள், அச்சூழலில் அன்றிருந்தவர்கள் என்று ஒவ்வொன்றும் தொடர்பாய் மனத்திரையில் காட்சிகளாக விரைந்தோடி வந்தார்கள். அன்று நண்பனோடு விளையாடியது நினைவுக்கு வரும் போது, அவனோடு விளையாடிய இடம், உடனிருந்த பலர், அன்றைய கால நிலை … எல்லாம் நிஜங்களாக கண் முன்னே வருகின்றன. வயதும் திரும்புகிறது. கிணற்றில் விழுந்து நீச்சல் பழகிய நினைவு என்றால் இப்போதும் நீச்சல் தெரியாமல் தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்த உணர்வும் திரும்புகிறதே … மூச்சும் தடுமாறுகிறதே!
வாழ்கையை மறுபடியும் ரீ-வைண்ட் செய்யும் இந்த முயற்சியில் ஒவ்வொரு நண்பனையும் மீண்டும் சந்தித்தேன்… அவர்களோடு
விளையாடினேன் … சண்டையிட்டேன் … விவாதித்தேன். அவை எல்லாவற்றையும் உங்கள் முன்னால் படைக்கிறேன் …
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “காணாமல் போன நண்பர் – epub” missingfriends.epub – Downloaded 21061 times – 1.10 MBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “காணாமல் போன நண்பர் – A4” Missingfriend-A4.pdf – Downloaded 10765 times – 1.34 MBசெல்பேசிகளில் படிக்க
Download “காணாமல் போன நண்பர் – 6inch” Missingfriend-6inch.pdf – Downloaded 6413 times – 1.52 MBபுத்தக எண் – 207
ஆகஸ்டு 27 2015
Leave a Reply