ஆசிரியர் : செங்கோவி
sengoviblog@gmail.com
வலைத்தளம் : http://sengovi.blogspot.com
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License
பெண்கள் மற்றும் காதல் விசயத்தில் ,இலவு காத்த கிளிகள் என தங்களை அடிக்கடி ஆண் சமுதாயம் அழைத்துக் கொண்டாலும், உண்மையில் கிடைத்தப் பழங்களை எல்லாம் கொறித்துப் பார்க்கலாம் என்ற அணில் வகையறாவை சேர்ந்தவர்கள் ஆண்கள்.
காதலிலும் கன்னிகளை கவர்வதிலும் சோகமே லாபத்தைத் தரக்கூடிய முதலீடு. நட்டத்தைத் தந்தாலும் அடுத்த இலக்கிற்கான முதலீடு. அப்படியான முதலீட்டைக் கொண்டு தொடர்ந்து பெண்களைக் கவரும் ஓர் ஆணை மையமாக வைத்து, உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு, எழுத்தாளார் செங்கோவி எழுதி இருக்கும் ஆட்டோ பிச்கன் வகையிலான கதை தான் இந்த நாவல். கட்டுப்பாடற்ற சுதந்திரம், பழைய வலிகளின் மீதான வஞ்சம் இவை எப்படி ஒரு சராசரியான பாசத்திற்கு ஏங்கும் ஆணை மாற்றுகின்றது என்பதை கதையின் ஊடாக பாத்திரமாகவே இருந்து , தன் கதையுடன் சேர்த்து சொல்லுகின்றார் ஆசிரியர் செங்கோவி. படிக்க ஆரம்பித்தால் ஒரே மூச்சில் படித்து முடித்து விடுவீர்கள். நாயகன் அல்லது வில்லன், எதுவாகினும் மதனுக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் உங்களுக்கும் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்ற யோசனையை கண்டிப்பாக இந்தப்புனைவு தரும்.
தாள் எழுத்தாளர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல , இந்த இணைய எழுத்தாளர்கள் என்பதை மற்றும் ஒருமுறை உறுதிப்படுத்தும் எழுத்து இந்தப் புதினம். செங்கோவிக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கின்றது.
— கிளிமூக்கு அரக்கன்
Download free ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..) epub” manmathan-leelaigal.epub – Downloaded 48352 times – 521.36 KB
கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..) A4 PDF” manmathan-leelaigal-A4.pdf – Downloaded 47254 times – 568.04 KB
செல்பேசிகளில் படிக்க
Download “மன்மதன் லீலைகள் (என் கிழிந்த டைரியிலிருந்து..) 6 Inch PDF” manmathan-leelaigal-6-Inch.pdf – Downloaded 14777 times – 888.63 KB
புத்தக எண் – 19
சென்னை
ஜனவரி 22 2014






Leave a Reply