அறிஞர் அண்ணாவின் “மாஜி கடவுள்கள்” நூல், பழந்தமிழர் நெறியான ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதை வலியுறுத்தும் பகுத்தறிவுப் படைப்பாகும்.
இந்நூல், இந்து மதத்தில் உள்ள எண்ணற்ற தெய்வங்கள் மற்றும் புராணக் கதைகளின் ஆபாசங்களையும், அபத்தங்களையும் கேள்விக்குள்ளாக்குகிறது. மேலும், கண்ணன், கந்தன் போன்ற தெய்வங்களை ஒப்பிட்டு, கிரேக்க, ரோமானிய, எகிப்திய தெய்வங்கள் மற்றும் புராணக் கதைகளுடன் ஒப்பிட்டு, அந்தந்த நாடுகளில், ஒரு காலத்தில் போற்றப்பட்ட கடவுள்கள், இன்று எவ்வாறு மாஜிகளாக்கப்பட்டு அருங்காட்சியகங்களில் காட்சிப் பொருள்களாக இருக்கின்றன என்பதை விளக்குகிறது.
அறியாமையும் அச்சமும் மேலோங்கியிருந்த காலத்தில், பூசாரிகளும், புராணிகர்களும் தங்களின் சுயநலத்திற்காகப் புனைந்த கதைகள் தான் தெய்வங்கள் என்பதை எடுத்துரைக்கிறது.
சாக்ரட்டீஸ் போன்ற அறிஞர்கள், கடவுளர்கள் என்ற பெயரில் பரப்பப்பட்ட கதைகளின் பொய்மையை எடுத்துக் காட்டியதையும், அதனால் அவர்கள் அனுபவித்த இன்னல்களையும் விளக்குகிறது.
திராவிட நாடு இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பாகவும், அண்ணா புதிதாக எழுதிச் சேர்த்த கட்டுரைகளின் தொகுப்பாகவும் இந்நூல் விளங்குகிறது. மக்களின் சிந்தனைச் செல்வத்தைப் பெருக்க வேண்டும் என்ற அண்ணாவின் கொள்கைக்கு வலு சேர்க்கும் வண்ணம், மாஜி கடவுள்கள் என்ற இந்த நூல், கடவுள் தன்மை பற்றிச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவும், “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்ற தமிழரின் செந்நெறியை உணரவும் வழிவகுக்கிறது.
Download ebooks
ஆன்ட்ராய்டு (FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “மாஜி கடவுள்கள் epub” maaji_gods.epub – Downloaded 1463 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “மாஜி கடவுள்கள் mobi” maaji_gods.mobi – Downloaded 1057 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “மாஜி கடவுள்கள் A4 PDF” maaji_gods_a4.pdf – Downloaded 2131 times –பழைய கிண்டில், நூக் கருவிகளில் படிக்க
Download “மாஜி கடவுள்கள் 6 inch PDF” maaji_gods_6_inch.pdf – Downloaded 1129 times –நூல் : மாஜி கடவுள்கள்
ஆசிரியர் : அறிஞர் அண்ணா
புத்தகம் குறித்த கூடுதல் விவரங்கள்
அட்டைப்படம் : லெனின் குருசாமி
மின்னூலாக்கம் : லெனின் குருசாமி
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : CC0. கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம். பகிரலாம். மேம்படுத்தலாம். விற்கலாம்.
பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 680
Leave a Reply