குற்றியலுலகம்
ஆசிரியர் : பா. ராகவன்
வெளியீடு : FreeTamilEbooks.com
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
—
ட்விட்டராகப்பட்டது , கிபி 2006 ம் வருடம் மார்ச் மாதம் கண்டுபிடிக்கப்பட்டு , 2008 ம் வருடம் மே மாதம் 25 ம் நாள் முதலாக என்னால் பயன்படுத்தப்பட்டு வருகிற ஒரு சமூக இணையத்தளம் . என்ன வேண்டுமானாலும் எழுதலாம் ; ஆனால் 140 கேரக்டர்களுக்குள் முடியவேண்டுமென்கிற இதன் கொள்ளளவு சார்ந்த சவால் என்னை இதன்பால் ஈர்த்தது . ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை இந்தப் பக்கம் நான் போகாமலிருந்த தினமென்று ஒன்றில்லை .
செய்திகள் , தகவல்கள் , வெண்பா ( ம் ) கள் , சிந்தனைகள் , நகைச்சுவை , உரையாடல் , விவாதம் , விதண்டாவாதம் , இலக்கியம் , சினிமா , வெட்டிப்பேச்சு என்று என்னவும் செய்யலாம் . கடும் பணிகளுக்கு இடையே வெகு நிச்சயமாக ஒரு நல்ல ஓய்வையும் புத்துணர்ச்சியையும் ட்விட்டர் எனக்குத் தந்து வந்திருக்கிறது .
அதைவிட முக்கியம் , ரசனை ஒருமித்த ஏராளமான நட்புகள் சித்திக்கும் பேட்டையாக இது இருப்பது . இவ்வகையில் FaceBook ஐக் காட்டிலும் நான் ட்விட்டரை மிகவும் விரும்புகிறேன் . ஃபேஸ்புக்கில் நட்பெனப்படுவது பெரும்பாலும் எண்ணிக்கை சார்ந்ததாக மட்டுமே இருக்கிறது . ட்விட்டரில் அது ஆத்மார்த்தமானது . இந்தச் சந்து இல்லாது போனால் இன்றளவும் நண்பர்கள் என நினைத்ததும் மனத்தில் தோன்றும் பலபேர் எனக்குக் கிடைத்திருக்க மாட்டார்கள் . ட்விட்டர் எனக்கு எம்பெருமானின் தனிக்கருணை.
ட்விட்டரில் எழுதுவதை ஒரு கடமையாகவோ , கட்டாயமாகவோ நான் எப்போதும் நினைத்ததில்லை . பொதுவில் , இணையத்தில் எழுதும் எதையுமே பொழுதுபோக்குக்காக மட்டும் என்று தெளிவாகப் பிரித்து வைத்திருக்கிறேன் . ஆனால் , பொழுதுபோக்கையும் ரசனையுடன் மேற்கொள்ள என்னைத் தூண்டியது ட்விட்டர் . எனவே அதற்கு நன்றி சொல்லிவிட வேண்டும் .
ட்விட்டரில் உள்ள எனது சுமார் இரண்டாயிரம் நண்பர்களுள் சில நூறு பேருடன் மட்டுமே நான் விவாதித்திருக்கிறேன் என்பதை இதனைத் தொகுக்கும்போது கவனித்தேன் . அதிலும் சுமார் 20-30 பேருடன்தான் தொடர்ந்து பேசி , விவாதித்து வந்திருக்கிறேன் . நான் ட்விட்டரில் உலவும் நேரமும் இதற்கு ஒரு முக்கியக் காரணம் .
கடந்த நான்காண்டுகளில் சுமார் எட்டாயிரம் ட்விட்டுகளை எழுதியிருக்கிறேன் . அவற்றில் பெரும்பாலானவற்றை என்னால் சேகரிக்க இயலாது போய்விட்டது . கிடைத்த கொஞ்சத்தில் எனக்குப் பிடித்த சிலவற்றை மட்டுமே இதில் தொகுத்திருக்கிறேன் . இன்னும் கொஞ்சம் நேரம் செலவழித்திருக்க முடியுமானால் மேலும் சில நூறு ட்வீட்களைப் பிடித்திருக்க முடியும் .
ஆயினும் என்ன? பதம் பார்க்க இது போதும் .
—
Download free ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “குற்றியலுலகம் epub” kutriyalulagam.epub – Downloaded 6113 times – 446.08 KB
கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “குற்றியலுலகம் A4 PDF” kutriyalulagam-A4.pdf – Downloaded 9601 times – 1.51 MB
செல்பேசிகளில் படிக்க
Download “குற்றியலுலகம் 6 Inch PDF” kutriyalulagam-6-Inch.pdf – Downloaded 5028 times – 1.55 MB
புத்தக எண் – 21
ஜனவரி 25 2014
Leave a Reply