குறிஞ்சிப்பாட்டு

பொதுக் குறிப்பு

குறிஞ்சி.

மலையும் மலைசார்ந்த நிலமும் குறிஞ்சி நிலம்
குளிர்காலமும், யாமப்பொழுதும் குறிஞ்சி நிலத்துக்கு உரியன என்று தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள் கூறுகின்றன

காதலர் புணர்ச்சி பற்றிக் கூறுவது குறிஞ்சித் திணைக்கு உரிய பொருள் என்றும் இலக்கணம் கூறுகிறது

குறிஞ்சி நிலத்தின் தெய்வம் முருகன். இவனைச் சேயோன் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது

இந்த நூலில் காதலர் வாழ்ந்த மலைநிலத்தில் பூத்திருந்த 96 வகையான பூக்கள் கூறப்பட்டுள்ளன. தலைவி தன் தோழிமாருடன் கூடி அவற்றை மழை பொழிந்து கழுவிய பாறைமீது குவித்து விளையாடியதாகப் பாடல் தெரிவிக்கிறது.

அந்தப் பூக்கள் படத்துடன் இந்த நூலில் காட்டப்பட்டுள்ளன

சிறப்புக் குறிப்பு

இந்தக் குறிஞ்சிப் பாட்டு
கபிலர் ஆரிய அரசன் பிரகத்தனைத் (தமிழ்ப்பண்பு) அறிவித்தற்குப் பாடியது – என்று கூறப்படுகிறது

காதலர் தாமே கூடிப் பின் மணந்துகொள்ளும் தமிழ்நெறியை ஆரிய அரசன் பிரகத்தன் உணராமல் ஏதோ பேசினான்.

அவனுக்குத் தமிழ்நெறி இத்தகையது என்று காட்டுவதற்காகக் கபிலர் இந்தக் குறிஞ்சிப்பாட்டைப் பாடினார்.

பண்பு கெடாமல் நிகழ்ந்த தற்செயல் இயல்புப் புணர்ச்சியை இப்பாடலில் காணலாம்.

குறிஞ்சிநிலத் தெய்வம் முருகன். அவனுக்கு விழாஎடுக்கும் காட்சியுடன் நூல் தொடங்குகிறது.

தோழியின் தாய் தலைவிக்குச் செவிலித்தாய்.

பெற்ற தாய் நற்றாய்.
நற்றாயையும், செவிலித்தாயையும் தாயெனக் கருதி (அன்னை) என்று விளித்தல் தமிழ்மரபு.

தோழி அன்னையை ‘அன்னாய்’ என விளித்துத் தலைவியின் நிலையைச் சொல்வதாக அமைந்துள்ளது இந்தப் பாடல்.

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “குறிஞ்சிப்பாட்டு epub” kurinji-pattu.epub – Downloaded 3942 times –

களில் படிக்க, அச்சடிக்க

Download “குறிஞ்சிப்பாட்டு A4 PDF” kurinji-pattu-A4.pdf – Downloaded 4941 times –

செல்பேசிகளில் படிக்க

Download “குறிஞ்சிப்பாட்டு 6 inch PDF” kurinji-pattu-6-inch.pdf – Downloaded 2071 times –

குறிஞ்சிப் பாட்டு
தமிழர் திருமண பண்பாட்டை உணர்த்தும் நூல்
கி. மு. மூன்றாம் நூற்றாண்டுப் பாடல்

களவுப் புணர்ச்சி
திருமணத்துக்கு முன் காதல் உறவு
கி. மு. மூன்றாம் நூற்றாண்டு

கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டு

விளக்கம்
முனைவர். செங்கைப் பொதுவன்
Dr.Sengai Podhuvan
M. A., M. Ed., Ph. D.

புத்தகம் குறித்த கூடுதல் தகவல்

உரிமை – Creative Commons Attribution-ShareAlike 4.0 International
You are free: to Share — to copy, distribute and transmit the work; to make commercial use of the work
with attributing this original work.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
இவ்வுரிமை நூலின் எழுத்துகளுக்கு மட்டுமே. படங்களுக்கு அல்ல.

பிற வடிவங்களில் படிக்க – Archive.org

புத்தக எண் – 338

ஜனவரி 20  2017

மேலும் சில இலக்கிய நூல்கள்

  • கல்கி முதல் அகிலன் வரை நாவலாசிரியர்கள்
  • இந்திய இலக்கியச் சிற்பிகள் – தமிழ்த் தாத்தா
  • மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்
  • குறள் விடு தூது

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.