
அறிஞர் அண்ணாவின் எழுத்தாற்றலுக்குச் சிகரம் வைத்தாற்போல் அமைந்த சமூக நாவல், ‘குமாஸ்தாவின் பெண்’. வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஒரு குமாஸ்தாவின் மகள் காந்தா. அவள் வாழ்க்கையின் ஆரம்பத்தில் காதலித்தவனாலும், சுற்றியிருந்த சமூகச் சூழலாலும் நிராகரிக்கப்பட்டு, வேதனையின் உச்சிக்கே செல்கிறாள்.
காலத்தின் கோலம் அவளை ஒரு ‘மிராசுதார் மோகனாங்கி’யாக மாற்றுகிறது. ஒருகாலத்தில் அவளை அலட்சியப்படுத்திய சமூகம், இன்று அவள் காலடியில் தவழ்கிறது. அதிகாரமும் பணமும் காந்தாவின் கைகளில் புரள, வாழ்க்கையின் நிதர்சனங்கள் அவளைப் பழிவாங்கத் தூண்டுகின்றன.
தனது ‘வேதாந்தத்தால்’ அன்று காந்தாவின் காதலை உதாசீனம் செய்த காதலன் சோமு, செல்வம் இழந்து, வாழ்க்கைச் சுவை குன்றி, மீண்டும் அவள் காலடியில் சரணடைய வரும்போது, காந்தாவின் மனதில் எழும் கேள்விகளும், பழிவாங்கும் உணர்வும், அவளது வாழ்வின் திருப்பங்களையும் அண்ணாவின் கூரிய சமூகப் பார்வையையும் இக்கதை விவரிக்கிறது.
ஒரு பெண்ணின் மனப் போராட்டங்களையும், சமூகக் கொடுமைகளையும், பணம் விளைவிக்கும் மாற்றங்களையும், இறுதியில் நிகழும் அதிர்ச்சியூட்டும் பழிவாங்கலையும் விவரிக்கும் இச்சிறு நாவல், வாசகர்களின் நெஞ்சில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். காந்தாவின் நாட்குறிப்பைப் புரட்டி, அவளது வாழ்வு தந்த பாடங்களைக் கற்றுக்கொள்ள வாருங்கள்.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “குமாஸ்தாவின் பெண் epub” Kumastavin_%20penn.epub – Downloaded 1423 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “குமாஸ்தாவின் பெண் A4 PDF” Kumastavin_penn_A4.pdf – Downloaded 2236 times –செல்பேசிகளில் படிக்க
Download “குமாஸ்தாவின் பெண் 6 inch PDF” Kumastavin_penn_6_inch.pdf – Downloaded 1499 times –நூல் : குமாஸ்தாவின் பெண்
ஆசிரியர் : அறிஞர் அண்ணா
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
அட்டைப்படம் : எம்.ரிஷான் ஷெரீப்
மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : Public Domain – CC0. கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 511





Leave a Reply