காளையார்கோயில் புராணம் (கதைச் சுருக்கம்) – நா. வள்ளி, நா.ரா.கி. காளைராசன்

நூலின் பெயர் : காளையார்கோயில் புராணம் (கதைச் சுருக்கம்)

மூல நூல் ஆசிரியர் : தஞ்சாவூர், சதாவதானம் பிர்ம்மஸ்ரீ சுப்பிரமணிய ஐயரவர்கள்

காளையார்கோயில் புராணம் (கதைச் சுருக்கம்) ஆசிரியர் : 1) முனைவர் நா. வள்ளி அவர்கள்,
(மேனாள் முதல்வர், இராமசாமி தமிழ்க்கல்லூரி), 7, லெட்சுமணன் செட்டியார் வீதி, காரைக்குடி 630 001,

2) திருப்பூவணம் காசிஸ்ரீ. முனைவர் நா.ரா.கி. காளைராசன் அவர்கள்,
28அ, குருநாதர்கோயில் தெரு,
கோட்டையூர் 630 106,
[email protected]

வெளியீடு : FreeTamilEbooks.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License.
கிரியேட்டிவ்காமன்ஸ். எல்லாரும்படிக்கலாம், பகிரலாம்.

நூலாசிரியர் உரை

காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர். நா. வள்ளி
நாள் ….11.2015
1899ஆம் ஆண்டு வெளியிடப்பெற்ற காளையார்கோயில் புராணம் புத்தகத்தின் ஒளிப்படநகல் ஒன்றை சென்னையைச் சேர்ந்த திரு.மனோகரன் அவர்களும், அவரது நண்பர் திரு.உத்திராடம் அவர்களும், 07.01.2014 அன்று சென்னையில் உள்ள ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் சந்நிதியில் வைத்து காளைராசனிடம் கொடுத்துள்ளனர். நூலைப் பெற்றுக் கொண்ட காளைராசன் அவர்கள் காளையார்கோயில் புராணப் பாடல்களைச் சீர் பிரித்து உரை எழுதி வெளியிட வேண்டும் என விருப்பம் கொண்டார். இவரது முனைவர் பட்ட ஆய்விற்கு நெறியாளராக இருந்தபடியால், எனது மாணவர் என்ற முறையில், அவர் என்னிடம் காளையார்கோயில் புராணத்திற்கு உரை எழுதிடும்படி வேண்டிக் கொண்டார். நான் சில படலங்களுக்கும், காளைராசன் சில படலங்களுக்கும் என உரை எழுதி முடித்தோம்.

காளையார்கோயில் புராணம் 110 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட காரணத்தினால் அதில் உள்ள சொற்களுக்கான பொருள்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டு கதைகளின் சீர்மை மாறாமல் கதைச் சுருக்கம் எழுதுவது ஒரு பெரிய சவாலாகவே விளங்கியது. என்னிடமிருக்கும் கலைச்சொல் அகராதிகள் மிகவும் பயனுடையனவாக அமைந்தன. மிகவும் பொறுமையாகக் காளையார்கோயில் கதைச் சுருக்கம் எழுதி முடிக்கப் பெற்றது. கி.காளைராசன் அவர்களே இவற்றைத் தட்டச்சு செய்து நூலாக்கம் செய்துள்ளார்.

இந்நூல் வெளிவரப் பெரிதும் துணைநின்ற இராமசாமி தமிழ்க் கல்லூரி மேனாள் முதல்வர் தெ.முருகசாமி அவர்களுக்கும், மூலநூல் சீர்பிரித்தலில் பிழைத்திருத்தம் செய்து கொடுத்து உதவிய தேவகோட்டை இலக்கியமேகம் அவர்களுக்கும், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி தமிழ் உதவிப் பேராசிரியர் சி.பரமேசுவரி அவர்களுக்கும், தேவகோட்டை பேராசிரியர் தேவநாவே அவர்களுக்கும், அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் க.பழனியப்பன் அவர்களுக்கும், தேவகோட்டை அருள்நிதி க.தில்லைநாதன் அவர்களுக்கும், திருச்சிராப்பள்ளி திரு.மு.ஜெயக்குமார் அவர்களுக்கும் நன்றி.
இந்நூலாக்கத்திற்காகக் காளைராசனது உழைப்பிற்கு ஒத்துழைப்பு நல்கிய அவரது மனைவி திருமதி.நாகலெட்சுமி, மகள் நித்தியா, திருப்பூவணம் முத்துப்பாண்டி கலையரசி தம்பதியர் மற்றும் அனைவருக்கும் நன்றி.

(நா. வள்ளி)

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “காளையார்கோயில் புராணம் (கதைச் சுருக்கம்) epub” kaalaiyar-koil-puranam.epub – Downloaded 2423 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “காளையார்கோயில் புராணம் (கதைச் சுருக்கம்) mobi” kaalaiyar-koil-puranam.mobi – Downloaded 1394 times –

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “காளையார்கோயில் புராணம் (கதைச் சுருக்கம்) A4 PDF” kaalaiyar-koil-puranam.pdf – Downloaded 3032 times –

செல்பேசிகளில் படிக்க

Download “காளையார்கோயில் புராணம் (கதைச் சுருக்கம்) 6 inch PDF” kaalaiyar-koil-puranam-6-inch.pdf – Downloaded 1678 times –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/kaalaiyar-koil-puranam

புத்தக எண் – 354

பிப்ரவரி 28 2018

மேலும் சில ஆன்மிக நூல்கள்

  • மதங்களின் பார்வையில் பெண்கள்
  • திருமூலர் அருளிய அட்டாங்கயோகம்
  • வடதிருமுல்லைவாயில் கொடியிடை நாயகி ஆலயம்
  • உரைநடையில் கம்பராமாயணம்

Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.