கொங்கு மண்ணின் சாமிகள் – இரா.முத்துசாமி

நூல் : கொங்கு மண்ணின் சாமிகள்
ஆசிரியர் : இரா.முத்துசாமி

மின்னூலாக்கம் : த . தனசேகர்

வெளியீடு : FreeTamilEbooks.com

உரிமை:
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0  கிரியேட்டிவ்காமன்ஸ். எல்லாரும்படிக்கலாம், பகிரலாம்.

முன்னுரை
‘கொங்கு மண்ணின் சாமிகள் ‘ என்ற இந்தப் படைப்பில் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் கொங்கு மண்ணின் சாமியாகக் கும்பிடும் அண்ணன்மார் என்கிற பெரிய அண்ணன் பொன்னர், சின்ன அண்ணன் சங்கர் என்ற அண்ணன் தம்பியின் சரித்திரத்தைச் சொல்லும் வீரப்பாடலான (Heroic Ballad) ‘அண்ணன்மார் கதை’ என்னும் ‘குன்னடையான் கதை’ பற்றி எழுதியிருக்கிறேன். இந்த நூல், சக்திக்கனல் அவர்களால் தொகுத்து, நர்மதா பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட “அண்ணன்மார் சுவாமி கதை. சக்திக்கனல். ஏழாம் பதிப்பு. 2001. சென்னை, நர்மதா பதிப்பகம்” என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளேன். கொங்கு நாட்டில் காலகாலமாய் மக்களிடையே செல்வாக்குப் பெற்று வழங்கி வரும் உன்னதமான கதையைத் தமிழ் மக்கள் அறிந்து கொள்வதில் என்ன பயன் என நம்மில் பலருக்குத் தோன்றலாம். வெகுசனத் தெய்வ வழிபாட்டையொட்டி மக்களிடையே பிரபலமாகி வரும் இந்தக் கதைப்பாடல் கொங்கு மண்ணின் கலைகளோடும் வரலாற்றோடும் பின்னிப்பிணைந்துள்ளது. இந்தக் கதைப்பாடல் பற்றியும், வீரப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள பெரியக்காண்டியம்மன் கோவில், அண்ணன்மார் சுவாமிகள் எனப்படும் பொன்னர்- சங்கர் கோவில், மந்திரம் காத்த மகாமுனி சிலை, காளை மாட்டுடன் இணைந்து நிற்கும் சாம்புவன் சிலை ஆகிய வழிபாட்டுத் தலங்களைப் பற்றியும் விவரித்துள்ளேன்.

நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலை, மாசிக் குன்றின் உச்சியில் துணைமை (கிராம) காவல் தெய்வமாக அருள்பாலிக்கும் ஸ்ரீ மாசி பெரியண்ணசாமி என்னும் மாசி பெரியசாமியை சோழிய வெள்ளாளர் மற்றும் கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகங்கள் குலதெய்வங்களாக ஏற்று வழிபட்டு வருகிறார்கள். கொல்லிமலை மாசி பெரியசாமி கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. வாழம்புல் என்ற ஒருவகைப் புல்லினால் அமைத்த சிறிய கூரைக் கட்டிடத்தில் இவருக்குக் கோவில் அமைந்துள்ளது. மாசி பெரியசாமி வேங்கை வாகனத்தின் மேல் அமர்ந்து கனகம்பீரமாக காட்சியளிக்கிறார். இக்கோவில் பற்றி ஒரு கட்டுரையையும் இந்நூலில் எழுதியுள்ளேன்.

கொங்கு வேளாளர்களின் கல்யாணங்களில் இடம்பெறும் சடங்குச்சீர்களின் போது மங்கலன் என்ற பெயர் பெற்ற நாவிதர் (Barber) மங்கல வாழ்த்து என்னும் பாட்டைப் பாடுவது மரபு. இந்த மங்கல வாழ்த்துப் பாடல் ‘கவிச்சக்கரவர்த்தி’ கம்பரால் பாடப்பட்டதாகக் கொங்கு வேளாளர்கள் நம்புகிறார்கள். இந்த மங்கல வாழ்த்துப் பாடல் வரிகள் எல்லோருக்கும் விளங்கும்படி எளிய கொங்குத் தமிழில் அமைந்துள்ளது. சிறு விளக்கவுரையுடன் ‘கொங்கு மங்கல வாழ்த்துப்பாடலை’ இணைத்துள்ளேன்.
இந்த நூல் என்னுடைய அகரம்.பிளாக்ஸ்பாட் வலைத்தளத்தில் (http://akharam.blogspot.in/) எழுதி வெளியிடப்பட்ட மூன்று கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதை இந்தத் தளத்தில் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி. உங்களுடைய அன்பான வரவேற்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

இரா.முத்துசாமி க்கான பட முடிவு

இரா.முத்துசாமி

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “கொங்கு மண்ணின் சாமிகள் epub” kongu_manin_samigal.epub – Downloaded 2327 times –

களில் படிக்க, அச்சடிக்க

Download “கொங்கு மண்ணின் சாமிகள் A4 PDF” kongu_manin_samigalA4.pdf – Downloaded 4167 times –

செல்பேசிகளில் படிக்க

Download “கொங்கு மண்ணின் சாமிகள் 6 inch PDF” kongu_manin_samigal6inch.pdf – Downloaded 2254 times –

பிற வடிவங்களில் படிக்க – Archive.org

புத்தக எண் – 352

பிப்ரவரி 26 2018

மேலும் சில இலக்கிய நூல்கள்

  • இலக்கிய இன்பம்
  • தமிழ் மின்னிதழ் – இதழ் – 1
  • அகழ்
  • நமக்கான தமிழிலக்கியக் கொள்கை

by

ஆசிரியர்கள்:

Comments

3 responses to “கொங்கு மண்ணின் சாமிகள் – இரா.முத்துசாமி”

  1. nagendra bharathi Avatar
    nagendra bharathi

    வாழ்த்துக்கள்

  2. இர.மோகன சுந்தரம் Avatar
    இர.மோகன சுந்தரம்

    இக்கதை கூற வேண்டி பெரியவர்கள் இடம் நிரைய கேட்டுள்ளேன் ஆனால் யாரும் தெளிவுற கூரவிலகூற …இப்புத்தகத்தை படிக்கும் வரை…நன்றி ஆசிரியர் முத்துசாமி ஐயா அவர்களே…

  3. செல்லமுத்து பெரியசாமி Avatar
    செல்லமுத்து பெரியசாமி

    கதை அருமையாக உள்ளது. வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.