இணைய தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம்

IT1

இணைய தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம்

ரவி நடராஜன்

வெளியீடு : FreeTamilEbooks.com

இணைய தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம்

உருவாக்கம்: ரவி நடராஜன்

மின்னஞ்சல்:  [email protected]

மேலட்டை உருவாக்கம்: லெனின் குருசாமி

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

சொல்வனம்’ இதழில் 2009 மற்றும் 2010 –ல் எழுதிய இணையம் சம்மந்தப்பட்ட கட்டுரை தொகுப்பு, இப்புத்தகம். இணையத்தைப் பற்றிச் சரியாக புரிந்து கொள்ளாமல், அதை பயன்படுத்துவர்கள் பலர். அனைவரும் தொழில்நுட்ப வல்லுனர்களாக இருக்க வேண்டியதில்லை என்பதே இணையத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். ஆயினும், பயன் படுத்தும் நுட்பங்களை அறிந்தால், தகுந்த வகையில் பயன்படுத்துவதோடு, இணையத்தில் ஏமாறாமல் இருப்பதும் சாத்தியம். தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இந்தியாவில்தான், இணைய மோசடிகளால், பலரும் பேராசையினால் தங்களுடைய பணத்தை இழக்கவும் செய்கிறார்கள். முதல் இரண்டு கட்டுரைகள், உங்களுடைய அந்தரங்கம் எவ்வளவு முக்கியமானது மற்றும் அதை எப்படி எல்லாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் கட்டுரைகள்.

அடுத்த மூன்று கட்டுரைகள் இணையம் எப்படி அச்சுத் தொழிலுக்குச் சவாலாகப் பல தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்துள்ளது என்பதை விவரிக்கும் கட்டுரைகள். உதாரணத்திற்கு, இக்கட்டுரைகளை வெளியிட்ட ‘சொல்வனம்’ பத்திரிகை இத்தகைய தொழில்நுட்பத்தால் உருவானது. மேலும் இன்று நீங்கள் இந்த மின்னூலைப் படிப்பதும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சியினால் என்றால் மிகையாகாது. பெட்டிக்கடையில் வாங்கினால்தான் புத்தகம் என்ற காலம் போய்விட்டது. இணையத்தில் படிக்க ஆசை இருப்பவர்களுக்கு அவர்களது சுவைக்கேற்ப பரிமாறப் பல தளங்கள் உள்ளன.

இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றி.

ரவி நடராஜன்

மேலும் சில நூல்கள்

  • துப்பறியலாம். வாங்க!
  • நீங்களும் ஜெயிக்கலாம்
  • மார்க்சிய அழகியல் – கட்டுரைகள் – கோவை ஞானி
  • எனக்கு மட்டுமே சொந்தம் – கட்டுரைகள் – நிர்மலா ராகவன்

Posted

in

,

by

ஆசிரியர்கள்:

Comments

2 responses to “இணைய தொழில்நுட்பங்கள் – ஒரு முன்னோட்டம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.