முன்னுரை
கவிதைகள் என்னை பள்ளிப்பருவத்தில் இருந்தே ஒரு பெண் போல ஈர்த்தவை.ஆனால் என் காதலோ கட்டுரைகள்,சிறுகதைகள் மீதானது.
முதன்முதலில் சரியாக மீசை அரும்பிய பருவம்.காதலில் நான்.காதலியாக அவள்.சொல்ல துணிவில்லை.அதனால் காகிதங்களிடம் காதல் சொன்னேன் அது சுமார் ஒரு 250 கவிதைகள் அடங்கிய தொகுப்பு.ஆனால் கட்டுரைகளின் பொறாமையால் அந்த முதல் கையெழுத்து கவிதை தொகுப்பு தொலைந்துபோனது அந்த முதல் காதலுடன்.
இப்படி எளிதாக இருக்கும் போது கட்டுரைகளை விட கவிதை அழகானதாகிறது.நான் கவிதை எழுதுகிறேன் என நினைக்கும் போது எனக்கு முன்னே இருக்கும் பல கோடி கவிஞர்களை நினைத்து பொறாமை அடைகிறேன்.தமிழ் பல பரிணாம வளர்ச்சியை பெற்றுள்ளது.இது தான் வடிவம்.இப்படி தான் இருக்க வேண்டும் என்பதெல்லாம் ஓடிப்போனது.
எனது பாணியில் கவிதைக்கு வடிவம் கிடையாது ஏதோவும் ஏதாவதுமாக எழுதிவிட்டேன்.நீங்கள் படிக்கும் போது ஏதாவது நினைவுகளை இந்த ஏதோ கவிதைகள் உருவாக்கினால் அது என் எழுத்துக்களின் வெற்றி.
இன்னும் எழுதுவேன் என்ற நம்பிக்கையுடன்
நேதாஜிதாசன்
suryavn97@yahoo.com
twitter.com/surya_vn
nethajidhasan.blogspot.in
முதல் மின்பதிப்பு: 2015
அட்டை வடிவமைப்பு:நேதாஜிதாசன்
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “ஏதோவும் ஏதாவதும் epub” ethovum-ethavathum-poems.epub – Downloaded 4197 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “ஏதோவும் ஏதாவதும் A4 PDF” ethovum-ethavathum-poems-A4.pdf – Downloaded 3003 times –செல்பேசிகளில் படிக்க
Download “ஏதோவும் ஏதாவதும் 6 inch PDF” ethovum-ethavathum-poems-6-inch.pdf – Downloaded 1840 times –இணையத்தில் படிக்க – http://edho.pressbooks.com
பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 230
நவம்பர் 22 2015
Leave a Reply