
உலகம் உருண்டோடும் வேகத்தில் முன்னோக்கியப் பயணம் பல கண்டுபிடிப்புகளைக் கொண்டு உருளுகிறது. உலகத்தில் ஒவ்வொரு உயிரும் தனக்கென ஒரு உயிர்க்கணையை கொண்டு தோன்றி வாழ்ந்து மறைந்துபோகிறது. அது தன் வாழ்நாளில் தன் உயிர்க்கணைகளுக்கிடையில் பெற்ற அனுபவங்களை மரபணுவின் ஊடாக அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துவிட்டுச் செல்கிறது.
ஆனால் மனிதன், மனிதப் பயன்பாட்டை முக்கிய கருதுகோளாய் கொண்டு அவ்வுயிர் கணைகளை வெட்டி எரிந்து கொண்டிருக்கிறான். பறவைகளும், விலங்குகளும் வாழ்விடம் இழக்கின்றது. ஒருகட்டத்தில் அது இருந்த சுவடுகளை மட்டும் விட்டுவிட்டு அந்த இனம் முற்றிலும் அழிந்துவிடுகிறது. மனிதன் பொருளாதாரம் என்கிற ஒற்றை புள்ளியில் நின்று கொண்டு எல்லாவற்றையும் ஓடும் மேகமாய் பார்க்கிறசூழலில் இருக்கிறான்.
உலகம் எவ்வாறு உயிர்க்கணைகள் கொண்டு உருளுகிறதோ அவ்வாறே தமிழும் அவ்வுயிர்க் கணைகளோடுப் பின்னிப்பிணைந்து இருக்கிறது மற்றும் அந்த உயிர்க்கணைகளின் செயல்பாடுகளைச் சொற்களாய் கொண்டு நிற்கிறது என்பதை நின்று நிதானித்து ஏன் எதற்கென்று எண்ணிப்பார்க்காமல் தமிழர்களாகிய நாமும் அப்படித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
தாய்மொழிக் கல்வியின் வழியாகத்தான் நடைமுறையில் உள்ள அறிவியல் செயல்பாடுகளை எளிதில் அறிய முடியும் என்பதை உணராமல் இருக்கிறோம். இதைத்தான் யுனெஸ்கோ அமைப்பு தாய்மொழிக்கல்வியின் அவசியத்தை உணர்த்தும் அளவிற்கு ஆய்வு அறிக்கைகள் வெளியிடுகிறது. இதை உணர்த்த வேண்டியது தமிழரின் கடமையாக எண்ணி நான் படித்த, கேட்ட மற்றும் அறிந்த ஒரு சில சொற்களை விளக்க முயற்சி செய்துள்ளேன்.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “வேர்களை இழக்காதீர் epub” vergalai_izhakathir.epub – Downloaded 2274 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “வேர்களை இழக்காதீர் A4 PDF” vergalai_izhakathirA4.pdf – Downloaded 2061 times –செல்பேசிகளில் படிக்க
Download “வேர்களை இழக்காதீர் 6 inch PDF” vergalai_izhakathir6inch.pdf – Downloaded 1256 times –ஆசிரியர் : பெ. கோபாலன்
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
மின்னூலாக்கம் : த. தனசேகர்
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை:
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 371
ஏப்ரல் 10 2018
Leave a Reply