தாடிக்காரனா? ஐயோ! (மர்ம நாவல்) – நிர்மலா ராகவன்

தாடிக்காரனா, ஐயோ! (மர்ம நாவல்)

ஆசிரியர் : நிர்மலா ராகவன்

மின்னூலாக்கம் : த . தனசேகர்

மின்னஞ்சல் : [email protected]

வெளியீடு : FreeTamilEbooks.com

உரிமை:
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International  License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

முன்னுரை

மலேசிய சூரியன் பத்திரிகை நடத்திய கருத்தரங்கு ஒன்றில் நான் உரையாற்றியபோது, `கற்பழிப்பு’ என்ற பொருளை அலசியிருந்தேன். ஒரு பெண்ணின் மனம் படும் பாட்டையும், ஒருவன் எதனாலெல்லாம் காமுகன் ஆகிறான் என்பதையும் நான் விளக்க, எனது உரை முடிந்ததும், ஒரு முதியவர் எழுந்து கைதட்ட ஆரம்பிக்க, அரங்கமே எழுந்து நின்றது மறக்க முடியாத நிகழ்ச்சி.
`என்னங்க, அப்படிப் பேசிட்டீங்க! தொண்டை அடைச்சுப்போச்சு எனக்கு!’ என்று ஒரு இளைஞர் உரிமையாக கோபித்துக்கொண்டார். பேச்சின் நடுவில், நானே ஒரு சமயம் மேலே பேச இயலாமல், கண்ணீருடன் திணறினேன். பல நொடிகள் மௌனம் — நாங்கள் எல்லாருமே பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் எங்களைப் பொருத்துக்கொண்டு.
அதன்பின், பத்திரிகை ஆசிரியர் அந்தப் பொருளில் ஒரு தொடர்கதை எழுதும்படி கேட்க, நான் முதலில் மறுத்தேன். அவர் வற்புறுத்தியபின், `நான் பெண்களின் உரிமைக்காக வாதாடுபவள், எழுதுபவள்!’ என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, `எழுதுகிறேன், ஆனால், தமிழ்ப்படங்களில் வருவதுபோல, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நானும் எழுதினால் கேவலம். அப்படி எழுதமாட்டேன்!’ என்ற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டேன். இந்த நாவல் அப்பத்திரிகையில் தொடராக வெளியானது.

வதைக்கு ஆளாகும் பெண்களுக்காக அரசாங்க சார்பற்ற பலர் அடைக்கலம் அளிக்கிறார்கள். கணவன்மார்களிடம் வன்முறைக்கு ஆளாகும் பெண்கள், வீட்டைவிட்டு ஓடிவந்த பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுமிகள் இவர்களுக்கான இல்லங்களுக்குப் போய், பலதரப்பட்ட பெண்களுடன் கலந்து பேசியிருக்கிறேன். `அதேபோல், நம் கதாநாயகியை ஒத்த பெண்களுக்கு?’ என்று யோசிக்க, கதை பிறந்தது. எதிர்நீச்சல் போடுவதாலேயே பலம் பெற்ற பெண்களும் இருக்கிறார்கள்.

பொதுவாக, பெண்களுக்கு ஆதரவாக இருக்க ஆண்களால்தான் முடியும். தந்தை, அண்ணன், கணவன், சில சமயம், தைரியமான மகள் — இவர்களுடைய பக்கபலம் இருந்தால் என்ன இடர் வந்தாலும், ஒரு பெண் துணிச்சலுடன் வாழ்ந்துகாட்ட முடியும்.

அன்புடன்,
நிர்மலா ராகவன்

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “தாடிக்காரனா? ஐயோ! epub” dhadikarana_iyyo%21-.epub – Downloaded 2553 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “தாடிக்காரனா? ஐயோ! mobi” dhadikarana_iyyo%21-.mobi – Downloaded 1240 times –

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “தாடிக்காரனா? ஐயோ! A4 pdf” dhadikarana_iyyo%21-A4.pdf – Downloaded 2401 times –

செல்பேசிகளில் படிக்க

Download “தாடிக்காரனா? ஐயோ! 6 inch PDF” dhadikarana_iyyo%21-6inch.pdf – Downloaded 1344 times –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/Dhadikarana_iyyo

புத்தக எண் – 344

பிப்ரவரி 10 2018

மேலும் சில நாவல்கள்

  • என் வானின் நிலவே – குறுநாவல் – லாவண்யா ஸ்ரீராம்
  • பார்வதி பி.ஏ. – நாவல் – அறிஞர் அண்ணா
  • ஆத்மாவின் ராகங்கள் – நாவல் – நா. பார்த்தசாரதி
  • கொழும்பு வழியே ஒரு பயணம் – நாவல் – வித்யாசாகர்

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.