ஏற்காடு இளங்கோ
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
உருவாக்கம்: ஏற்காடு இளங்கோ
யுனுகோட் மாற்றம் – மு.சிவலிங்கம்
மேலட்டை உருவாக்கம்: ஜெகதீஸ்வரன் நடராஜன்
மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
என்னுரை
கடல் பயணம் மேற்கொண்டு புறப்பட்ட இடத்திற்கே கப்பல் வந்து சேர்ந்ததன் மூலம் பூமி கோள வடிவமானது என்பது 16ஆம் நூற்றாண்டில் நிரூபிக்கப்பட்டது. பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு என்று கூறினாலும் அங்குச் சென்று வந்தவர்கள் யாரும் இல்லை. பூமியில் உள்ள மிகமிக உயரமான பகுதிக்கோ, மிக ஆழமான பகுதிக்கோ 19ஆம் நூற்றாண்டுவரை யாரும் சென்று வந்ததில்லை என்றாலும்,பூமியின் வடிவத்தையும் கண்களால் பார்த்ததும் கிடையாது.
அறிவியலில் புதிய புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. போக்குவரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன. நவீன தொழில் நுட்பங்களும் வளர்ந்தன. இதன் விளைவாக இன்று மனிதன் காலடி படாத, இடம் என்று ஏதுமில்லை. பூமியின் வடிவத்தையும் கண்ணால் கண்டுவிட்டான். உலகின் எல்லைகளைத் தொட்டுவிட்டான். இந்தப் பயணம் யாவும் ஆபத்தும், சாகசமும் நிறைந்தவை. பயணத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் மரணத்தின் வாசல் வரை சென்று வந்தவர்கள்தான். இத்தகைய பயணத்தில் ஈடுபட்டு முதன்முதலாக வெற்றி பெற்றவர்களைப் பற்றி விரிவான தகவல்களுடன் எழுதப்பட்டுள்ளது இந்நூல்.
இப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்த என் மனைவி திருமிகு. இ. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. செ. நமசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்து கொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் எனது நன்றி. இந்தப் புத்தகத்தை மின்னூலாக வெளியிட்டுள்ள FreeTamilEbooks.com குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன்
ஏற்காடு இளங்கோ
Download free ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “பூமியின் எல்லையைத் தொட்டவர்கள் epub” boomiyin-ellaiyai-thottavargal.epub – Downloaded 11768 times – 847.91 KB
கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “பூமியின் எல்லையைத் தொட்டவர்கள் A4 pdf” boomiyin-ellaiyai-thottavargal-A4.pdf – Downloaded 37445 times – 4.04 MB
செல்பேசிகளில் படிக்க
Download “பூமியின் எல்லையைத் தொட்டவர்கள் 6 inch PDF” boomiyin-ellaiyai-thottavargal-6-inch.pdf – Downloaded 26322 times – 4.04 MB
கூகுள் பிளே புக்ஸ் – இல் படிக்க
புத்தக எண் – 100
ஜூலை 26 2014
Leave a Reply