அதே நிலா – சமூக நாவல் – நிர்மலா ராகவன்

அதே நிலா (சரித்திரப்  பின்னணியுடன் ஒரு சமூக )
நிர்மலா ராகவன், மலேசியா

முன்னுரை    

வணக்கம்.
ஆஸ்ட்ரோ தொலைகாட்சி நிலையமும், மலேசிய எழுத்தாளர் சங்கமும் இணைந்து நடத்திய நாவல் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்றது இந்நாவல்.

மலேசிய நாட்டின் வடக்கிலிருக்கும் கெடா மாநிலத்தில் உள்ள  புஜாங் பள்ளத்தாக்கைப்பற்றி முதன்முதலில் — சுமார் முப்பது  ஆண்டுகளுக்கு முன்னர் — கெடாவில் வாழ்ந்த சீன நண்பரிடமிருந்து அறிந்தேன்.
காரை ஒரு குறுகிய தெருவில் நிறுத்திவிட்டு, வெகுதூரம் நடந்து போனபோது, பொட்டைக்காடாக இருந்தது அவ்விடம். பினாங்கு, சுங்கை பட்டாணி போன்ற அருகிலிருக்கும் இடங்களில் பிறந்து வளர்ந்த தமிழர்கள்கூட இந்த இடத்தைப்பற்றி எதுவுமே அறிந்திருக்கவில்லை என்பது ஆச்சரியத்தை விளைவித்தது. எங்கும் இந்து சமயக் குறிப்பீடுகளாக கல் சிற்பங்கள், சிவலிங்கம், ‘யோனி’ என்று குறிப்பிடப்பட்டு, ஆட்டுக்கல்போல் ஏதோ ஒன்று.  ‘தமிழர்கள் இந்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கால் பதித்து இருக்கிறார்களே!’ என்ற பெருமிதம் எழுந்தது.

இரண்டு  ஆண்டுகளுக்கு முன், அங்குள்ள அருங்கலையகத்தின் வளாகத்தில்  பத்து பஹாட்  சண்டி (கோயில்) இருந்த இடத்தில் நின்று பாடுகையில், யாருடைய உணர்ச்சிகளின் தாக்கமோ என்னருகே பாய்ந்ததுபோல் உணர்ந்தேன். பாடவே முடியாது, குரலடைத்தது.
அந்த நபர் மிக மிக வயது முதிர்ந்த ஒரு மாது, ஆடல் கலையில் வல்லவர், சொல்லவொணா சோகத்தில் இவ்வுலகைவிட்டுப் பிரிந்துபோயும், எல்லாத் தொடர்பையும் முறித்துக்கொள்ள முடியாது, அரூபமாக இங்கேயே தங்கிவிட்டிருக்கிறார் என்று ஏதேதோ எனக்குள் தோன்றின. அந்த அமானுஷ்யமான அனுபவத்தில் ஒரு பெரிய கதை பொதிந்து கிடப்பதாக உணர்ந்தேன்.

அதற்குப்பின், மலேசியாவின் தெற்குப்பகுதியில், ஜோகூர் மாநிலத்தில் உள்ள காட்டுக்குள் ஒரு பழமையான, பெரிய இந்துக்கோயில் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி வந்தது. இரண்டையும் இணைத்த முயற்சி இது. கதை தமிழகத்திலும், பண்டைய மலாயா, இன்றைய மலேஷியாவிலும் நடக்கிறது.

நன்றி.
நிர்மலா ராகவன்

nirurag@gmail.com
மின்னூல் வெளியீடு : freetamilebooks.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

அட்டைப்படம் & மின்னூலாக்கம் – லெனின் குருசாமி –

This book was produced using pandoc

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “அதே நிலா – epub” athe-nila-novel.epub – Downloaded 2306 times –

களில் படிக்க, அச்சடிக்க

Download “அதே நிலா – A4 PDF” athe-nila-novel-a4.pdf – Downloaded 2749 times –

செல்பேசிகளில் படிக்க

Download “அதே நிலா – 6 inch PDF” athe-nila-novel-6inch.pdf – Downloaded 1294 times –

பிற வடிவங்களில் படிக்க – Archive.org

புத்தக எண் – 293

ஏப்ரல் 20 2017

மேலும் சில நாவல்கள்

  • கபாடபுரம்
  • தருணம்
  • தசாவதாரம்
  • அதே நிலா – சமூக நாவல் – நிர்மலா ராகவன்

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.