
“அருள் பொழியும் நிழல் பாதைகள்” ஜேம்ஸ் ஆலனின் “BYWAYS OF BLESSEDNESS” நூலின் எளிய மற்றும் சிறப்பான தமிழ் மொழிபெயர்ப்பாகும். இது ஒவ்வொரு மனிதனும் தன்னையே சீர்படுத்தி, நிறைவான வாழ்வைப் பெற வழிகாட்டும் ஒரு சுய முன்னேற்ற நூல்.
மனித வாழ்வின் இன்பமும் துன்பமும் நம் உள்ளத்திலிருந்து உதிக்கும் எண்ணங்களையும் செயல்களையும் பொறுத்தே அமைகின்றன என்பதை இந்நூல் ஆழமாக விளக்குகிறது. சரியான தொடக்கங்களின் முக்கியத்துவம், தினசரி கடமைகளை செம்மையாகச் செய்வது, வாழ்வியல் சிக்கல்களை எதிர்கொண்டு மீள்வது, உள்ளத்தில் நிகழும் மறைவான தியாகங்கள், பல்லுயிர்களிடத்தில் இரக்கம் கொள்வது, மன்னிக்கும் தன்மை, பிறரிடம் தீமையைக் காணாமல் இருப்பது, தனிமையை நாடுவது மற்றும் தன்னம்பிக்கையுடன் வாழ்வது போன்ற அரிய வாழ்வியல் கோட்பாடுகளை ஆசிரியர் அழகாக எடுத்துரைக்கிறார்.
சுயநலம், கோபம், ஆணவம், பொறாமை போன்ற எதிர்மறை குணங்களைக் களைந்து, அன்பு, சாந்தம், இரக்கம், தூய்மை போன்ற உயர் குணங்களை வளர்ப்பதன் மூலம் நிலையான மனநிம்மதியையும் பேரானந்தத்தையும் அடைய முடியும் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது. வாழ்வின் ஒவ்வொரு நொடியும் புத்துணர்வுடன், மகிழ்ச்சியுடன் வாழவும், ஆன்மீக பலத்தைப் பெருக்கவும் தேவையான வழிகாட்டுதல்களை இது வழங்குகிறது.
வாழ்க்கைப்பயணத்தில் களைப்புற்ற மனங்களுக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும், வலிமையையும் அளித்து, மகிழ்ச்சியும் ஆனந்தமும் நிறைந்த ஒளிமயமான வாழ்விற்கு இட்டுச் செல்லும் நிழல் பாதைகளை இந்நூல் அடையாளம் காட்டுகிறது.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “அருள் பொழியும் நிழல் பாதைகள் epub” arul-pozhiyum-nizhal-pathaigal.epub – Downloaded 3465 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “அருள் பொழியும் நிழல் பாதைகள் A4 PDF” arul-pozhiyum-nizhal-pathaigal-A4.pdf – Downloaded 4674 times –செல்பேசிகளில் படிக்க
Download “அருள் பொழியும் நிழல் பாதைகள் 6 inch PDF” arul-pozhiyum-nizhal-pathaigal-6-inch.pdf – Downloaded 3224 times –அருள் பொழியும் நிழல் பாதைகள்
ஜேம்ஸ் ஆலன்
(தமிழில் சே.அருணாசலம்)
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
அட்டைப்படம் – லெனின் குருசாமி
மின்னூலாக்கம் – சே.அருணாசலம்
BYWAYS OF BLESSEDNESS
JAMES ALLEN
உரிமை: Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 296
ஏப்ரல் 21 2017





Leave a Reply