மாற்று சக்தி முயற்சியா, சக்தி பேணலா?

கேள்வியே சற்று பொருத்தமில்லாதது. இன்றைய யதார்த்தம், இரண்டும் தேவை என்பதே. 2012 –ல் ‘சொல்வனம்’ பத்திரிக்கையில் AlternateEnergyசூழலியல் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த மின்னூல். இன்றும், அக்கட்டுரைகள் பொருத்தமாக இருப்பதற்கு காரணம், பெரிய தொலை நோக்கு எதுவுமில்லை. மாறாக, எந்த நாடும் ஒரு தொலை நோக்கின்றி செயல்படுவதே காரணம்.

சக்தி முயற்சிகள் என்பது மிகவும் விரிவான ஒரு துறை. ஒரு கட்டுரையில், எல்லாவற்றையும் எழுதுவது என்பது இயலாதது. ஆனால், முக்கியமான விஷயம், பல ஆண்டுகள், பல வழிகளில், முயன்றால்தான் இப்பிரச்சனையை நம்மால் தீர்க்க முடியும். அதுவரை, சக்தி சேமிப்பு என்பது ஒன்றுதான் நம் கையில்.பெட்ரோல் என்பதைச் சற்றுப் பொதுவாக, ஒரு சக்திப் பிரச்சினையாய் (energy needs) அணுகினால் பல தீர்வுகள் கிடைக்க வழி உண்டு. பெரிய ஆராய்ச்சிகள் செய்ய அமெரிக்காவிடம் இன்று பணம் இல்லை. உலெகெங்கும் பலவித முயற்சிகள் பலவித அணுகுமுறைகளை அந்தந்த நாட்டின் தேவைக்கு ஏற்ப உருவாக்க வழி செய்யலாம். மிக முக்கியமாக, ஒவ்வொரு நாடும் தகுந்த சக்திக் கொள்கை (energy policy) மற்றும் ஒருங்கிணைப்பில் (energy development coordination) ஈடுபடுவது அவசியம்

சக்தி பேணுதலின் தொலை நோக்கு என்னவென்றால், மிக அறிவுபூர்வமான சிந்தனையால், தயாரிப்பாளரும், நுகர்வோரும் பயனுற வேண்டும். ஆனால், அதற்கான பாதை மிகவும் கடினமானது. பல நூறு ஆண்டுகளாக நாம் சிந்தித்த முறைகளை முற்றிலும் மாற்ற வேண்டும். அதற்காக, நுகர்வோர் ஏராளமான விலை கொடுக்கவும் தயாரக இல்லை. அறிவுபூர்வமாக இப்பாதையில் பயணிப்போர் சில ஆண்டுகளுக்குப் பின் பயனுறுவது உறுதி. இந்தப் பயணத்திற்கு, தகுந்த சக பிரயாணிகள் உதவியாக இருந்தால் வெற்றி அடைய முடியும். சில நிறுவனங்கள் இன்று அவ்வாறு பயணித்து வெற்றியும் கண்டு வருகின்றன.

இக்கட்டுரைகளை வெளியிட்ட ’சொல்வனம்’ஆசிரியர் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றி.

உருவாக்கம்: ரவி நடராஜன்

மின்னஞ்சல்:  [email protected]

வெளியீடு: http://FreeTamilEbooks.com

வலைத்தளம் : http://alternateenergy.pressbooks.com/

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னஞ்சல்: [email protected]

மின்னூலாக்கம் : Lenin Gurusamy

மின்னஞ்சல் : 

மின்னூல் வெளியீடு: சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல் : [email protected]

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

Download ebooks

ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “மாற்று சக்தி முயற்சியா, சக்தி பேணலா?” alternateenergy.epub – Downloaded 11309 times – 1.48 MB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “மாற்று சக்தி முயற்சியா, சக்தி பேணலா?” alternateenergy.mobi – Downloaded 4112 times – 2.63 MB

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “மாற்று சக்தி முயற்சியா, சக்தி பேணலா?” AlternateEnergy_A4.pdf – Downloaded 8301 times – 768.59 KB

செல்பேசிகளில் படிக்க

Download “மாற்று சக்தி முயற்சியா, சக்தி பேணலா? 6 inch PDF” AlternateEnergy_6inch.pdf – Downloaded 3663 times – 901.62 KB

புத்தக எண் – 134

ஜனவரி 07 2015

மேலும் சில அறிவியல் நூல்கள்

  • எளிய தமிழில் CAD/CAM/CAE – அறிவியல் – இரா.அசோகன்
  • பூமியின் எல்லையைத் தொட்டவர்கள்
  • விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்
  • இந்தியப் பெருங்கடல் – அறிவியல் – பேரா. அ.கி.மூர்த்தி

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

2 responses to “மாற்று சக்தி முயற்சியா, சக்தி பேணலா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.