மின்னூல்கள் பதிவிறக்க அறிக்கை

இரு ஆண்டுகளாக மின்னூல்களின் பதிவிறக்க எண்ணிக்கையை மொத்தமாக பட்டியலிடுமாறு நூலாசிரியர்களும் வாசகர்களும் கேட்டிருந்தனர்.

தானியக்கமாக இந்தப் பட்டியலை உருவாக்க பலரிடமும் கேட்டிருந்தேன். சில நாட்களுக்கு முன் என் மனைவி நித்யா, ( [email protected] ) பைத்தான் மொழியில் இதற்கான நிரலை எழுதினார்.

நிரல், அனைத்து மின்னூல்களின் பதிவிறக்க விவரங்களை வகை வாரியாகவும் மொத்த எண்ணிக்கையையும் தருகிறது. அட்டவணையின் ஏதேனும் ஒரு தலைப்பை சொடுக்கி, ஏறுவரிசையில் அல்லது இறங்கு வரிசையில் பட்டியலிடலாம்.

இங்கே காண்க – https://freetamilebooks.com/htmlbooks/download-report.html

இந்தப் பட்டியல் தினமும் ஒரு முறை மேம்படுத்தப் படுகிறது.
இதற்கான நிரலும் கட்டற்ற உரிமையில் இங்கே உள்ளது
https://github.com/nithyadurai87/fte-ebooks-download-counter
இந்தப் பட்டியலை கேட்ட நூலாசிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் நிரல் எழுதி உதவிய நித்யாவிற்கும் நன்றிகள்.
FreeTamilEbooks.com திட்டத்தை இன்னும் சிறப்பாக செயல்படுத்த இது போன்ற பயனுள்ள யோசனைகளை பகிர வேண்டுகிறேன்.
— த.சீனிவாசன்

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

One response to “மின்னூல்கள் பதிவிறக்க அறிக்கை”

  1. thauzhavan Avatar

    விக்கிமூலத்திலும் இந்த வசதியை ஏந்ப்டுத்த முடியுமா? இந்தியாவிலேயே தமிழ் நூல்கள் தான் அதிகம் பதிவிறக்கம் ஆகின்றன. மிகவும் குறைந்த நூல்களே இருக்கின்றன. கீழ்கண்ட பக்கத்தில் தற்போதுள்ள மின்னூல்களைக் காணலாம்.

    https://ta.wikisource.org/s/430w
    எத்தகைய நூல்கள் பதிவிறக்கம் அதிகம் ஆகின்றன என்பது தெரிந்தால், அம்மின்னூல்களுக்கு முன்னுரிமைத் தரலாம். இருவரே இப்பணியில் ஈடுபடுவாதல், இந்த கணக்கெடுப்பு மிகவும் தேவையாக உள்ளது. ஆவண செய்வீர். வணக்கம்.