புத்தகங்கள் மொத்தமாய்…

புத்தகப் பிரியரா நீங்கள்..? உங்களுக்கான பதிவுதான் இது….. இந்த விஞ்ஞான உலகில் புத்தகம் படிப்பவர்களின் எண்ணிக்கை  மிகவும் குறைவாக இருப்பது கண்டு வருத்தம் அளிக்கிறது…  எப்பொழுது டி.வி வந்ததோ அப்பொழுதிருந்து மக்களுக்கு புத்தகம் வாசிக்கும்பழக்கம் பாதியாக குறைந்திருந்ததுபிறகு செல்போன், இன்டெர்நெட், பேஸ்புக் வந்ததில் இருந்து மக்களின் புத்தகம்வாசிக்கும் சதவீதத்தின் மதிப்பு சரிந்து போய் இருப்பது இப்பொழுது தெரிகிறது….

புத்தகம் படிப்பதின் அவசியத்தை நான் நன்கு உணர்ந்து வைத்திருக்கின்றேன்….நம் மன உளைச்சலை போக்கும் சக்தி ஒரு புத்தகத்திற்கு உண்டு…. ஒரு புத்தகம்பத்து சைக்கியட்ரிஸ்ட்களுக்குச் சமமானது…..

நமது உள்ளத்தை செம்மை படுத்தக் கூடியது…. மனதை ஒருநிலைப் படுத்தஉதவுவது…. தன்னம்பிக்கையை விதப்பது…  எல்லாம் சரிதான் இப்ப நீ என்னதான் சொல்ல வர்றேன்னு நினைக்கிறது எனக்கு கேக்குது… அதாகப் பட்டது என்னவென்றால்….

இந்த காலத்தில் கைப்பேசி இல்லாதவர்கள் என்று சொல்பவர்களை விரல் விட்டு எண்ணிவிட இயலும்… அந்த அளவிற்கு ஸ்மார்ட் போனின் உபயோகம் அதிகரித்து விட்டது…. இத்தகைய காலத்தில் புத்தகம் படிப்பவர்களும் உள்ளனர் என்று சொன்னால் அது மிகையாகாது.. நான் உட்பட…. நம்மை போன்ற புத்தகப் பிரியர்களுக்காகவே நடத்தப்படும் இணையதளம் freetamilebooks.com இந்த தளத்தில் 300க்கும் மேற்பட்ட புத்தகங்களை உங்களது கைபேசியிலோ அல்லது கணினியிலோ பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ள இயலும்… அனைத்துப் புத்தகங்களும் மிகவும் பயனுள்ள புத்தகங்கள்…. அத்துனை புத்தகங்களையும் ஒன்று ஒன்றாக தறவிறக்கம் செய்வது நமது நேரத்தை வீணடிக்கும்…. எனவே ஒரு  க்ளிக்கில் அனைத்து புத்தகங்களையும் தறவிறக்கும் வகையில் நான் ஒரு நிரலை பைத்தான் மொழியில் எழுதி உள்ளேன்….  தேவையானவர்கள் அதை பயன்படுத்தி அனைத்து புத்தகங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்…..  இதை அனைவராலும் பயன்படுத்த முடியாது சிறிதளவு கணினி அறிவு இருந்தால்தான் தரவிறக்கம் செய்ய இயலும்…. கூடிய விரைவில் அனைவராலும் பயன்படுத்தக் கூடிய வகையில…. பயனர் இடை முகப்பு கொண்ட மென்பொருளாக மெறுகேற்றப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்….

https://github.com/abuvanth/freetamilebook-downloader

-அபு.

[email protected]


Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

One response to “புத்தகங்கள் மொத்தமாய்…”

  1. thauzhavan Avatar

    உயரிய பணி. மிக்க நன்றி. தொடரட்டும் உங்களின் எண்ண வளம். வணக்கம்.