தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கிய நூல்களுக்குப் பொதுக்கள உரிம அறிவிப்பு

மூலம் – https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#.E0.AE.A4.E0.AE.AE.E0.AE.BF.E0.AE.B4.E0.AF.8D.E0.AE.A8.E0.AE.BE.E0.AE.9F.E0.AF.81_.E0.AE.85.E0.AE.B0.E0.AE.9A.E0.AF.81_.E0.AE.A8.E0.AE.BE.E0.AE.9F.E0.AF.8D.E0.AE.9F.E0.AF.81.E0.AE.9F.E0.AF.88.E0.AE.AE.E0.AF.88.E0.AE.AF.E0.AE.BE.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AE.BF.E0.AE.AF_.E0.AE.A8.E0.AF.82.E0.AE.B2.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.81.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AF.81.E0.AE.AA.E0.AF.8D_.E0.AE.AA.E0.AF.8A.E0.AE.A4.E0.AF.81.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3_.E0.AE.89.E0.AE.B0.E0.AE.BF.E0.AE.AE_.E0.AE.85.E0.AE.B1.E0.AE.BF.E0.AE.B5.E0.AE.BF.E0.AE.AA.E0.AF.8D.E0.AE.AA.E0.AF.81

தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கிய நூல்களுக்குப் பொதுக்கள உரிம அறிவிப்பினை தமிழ் இணையக் கல்விக்கழகம் வெளியிட்டிருக்கிறது. த. இ. க. உடனான கூட்டு முயற்சியின் முக்கிய விளைவுகளில் ஒன்றாக இதனைக் கருதலாம். இதன் மூலம் ஏறத்தாழ 4000+ நூல்களை விக்கிமூலத்தில் பதிவேற்றிப் பேண முடியும். இம்முயற்சிக்கு உறுதுணையாக இருந்த தமிழ்ப்பரிதிக்கும் தகவல் உழவனுக்கும் நன்றி. எனக்குத் தெரிந்து, வேறு எந்த ஒரு நாட்டிலும் நூல்களை நாட்டுடைமையாக்கல் என்ற இத்திட்டம் இல்லை. ஆனால், நாம் 1950களிலேயே இதனை முன்னெடுத்துள்ளோம். எனக்குத் தெரிந்து, வேறு எந்த ஒரு (இந்திய மாநில) அரசும் இவ்வாறான ஒரு திட்டத்துக்குப் பொதுக்கள அறிவிப்பு வெளியிட்டதும் இல்லை. இம்முயற்சியை வாழ்த்திப் பாராட்டுவதன் மூலம், இது போன்ற இன்னும் பல முன்னோடி முனைவுகளைத் தமிழ் விக்கிப்பீடியர் சமூகம் மேற்கொள்ள முடியும். தமிழ் இணையக் கல்விக் கழகத்துக்கு நமது நன்றி உரித்தாகுக. அறிவிப்பு பின்வருமாறு:

தமிழ் இணையக் கல்விக்கழகம்,

சென்னை,

திசம்பர் 18, 2015

தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்கல் என்பது தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய முன்னேற்றத்துக்கும் பாடுபட்ட சான்றோர்களின் நூல்களின் பதிப்புரிமையை முறைப்படி பெற்று பொது மக்கள் பயன்பாட்டுக்கு வழங்குவதைக் குறிக்கும்.

இந்நூல்களை முழுமையான பொது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கும் பரப்புவதற்கும் இவ்வாக்கங்கள் யாவும் கட்டற்ற ஆக்க உரிமங்களின் கீழ் கிடைப்பது இன்றியமையாதது ஆகும்.

எனவே, தமிழ்நாடு அரசு இது வரை நாட்டுடைமை ஆக்கியுள்ள அனைத்து நூல்களும் இனி நாட்டுடைமை ஆக்கப் போகும் அனைத்து நூல்களும், அவை இந்தியப் பதிப்புரிமைச் சட்டம், 1957 மற்றும் இந்தியப் பதிப்புரிமை விதிகள், 1958 ஆகியவற்றின் படி பதிப்புரிமை காலாவதி ஆகாதிருக்கும் நிலையில், பொதுக்கள உரிமத்தின் கீழ் ( CC0 1.0 Universal (CC0 1.0) Public Domain Dedication விவரங்களுக்கு https://creativecommons.org/publicdomain/zero/1.0/ பார்க்கவும் ) வெளியிடப்படுகின்றன. இந்நூல்களின் முழுமையான பட்டியலை http://tamilvu.org/library/nationalized/html/books-list.htm என்ற வலைமுகவரியில் காணலாம்.

இரவி

https://ta.wikipedia.org/wiki/படிமம்:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration-Tamil-Version.jpg

https://commons.wikimedia.org/wiki/File:Tamil-Nadu-Nationalized-Books-Public-Domain-Declaration.jpg


Posted

in

by

ஆசிரியர்கள்: