தமிழ் இணைய இணையர் விருது

உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் சார்பில் 18 வது தமிழ் இணைய மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செப் 20-22, 2019 ல் நடைபெற்றது.

மாநாட்டை அமைச்சர்கள் மாபா. பாண்டியராஜன், கே.பி.அன்பழகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

முதல் நாள் விழாவில், தமிழ் மென்பொருள் உருவாக்குநர்களான மறைந்த ஆண்டோபீட்டர், மறைந்த தகடூர் கோபி ஆகியோருக்கு ‘தமிழ் கணிமை முன்னேர் விருது’ வழங்கப்பட்டது.

அதேபோல், எனக்கும் (து. நித்யா) என் இணையர் த.சீனிவாசன்-க்கும் ‘தமிழ் இணைய இணையர் விருது’ வழங்கப்பட்டது.

விருது வழங்கிய அமைச்சர்களுக்கும், உத்தமம் அமைப்பிற்கும் எங்கள் நன்றிகள்.

திருவிழாவில், உயரத்தில் உள்ள சாமியை காட்ட, பெற்றோர் குழந்தைகளை தோள் மீது ஏற்றி, சாமியைக் காட்டுவர். நாங்களும் இது போலவே உணர்கிறோம். இவ்விருதையும் மகிழ்ச்சியையும் தமிழ்க் கணிமைக்கும் கட்டற்ற மென்பொருள் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறோம்.

கட்டற்ற மென்பொருளை எமக்கு அறிமுகம் செய்த, சென்னை லினக்ஸ் பயனர் குழு (Indian Linux Users Group Chennai), தமிழ் விக்கிப்பீடியர்கள், FSFTN, PuduvaiGLUG, Villupuram GLUG, KanchiLUG, Open-Tamil பங்களிப்பாளர்கள், கணியம் பங்களிப்பாளர்கள், FreeTamilEbooks.com பங்களிப்பாளர்கள், எழுத்தாளர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது நன்றிகளை தெரிவிக்கிறோம்.

இன்னும் கூடுதலாக தமிழுக்கும் கட்டற்ற மென்பொருளுக்கும் பங்களிப்போம்.

நன்றி !

நிகழ்வின் காணொளி –


Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

3 responses to “தமிழ் இணைய இணையர் விருது”

  1. Sengai Podhuvan Avatar
    Sengai Podhuvan

    நல்லாரைக் காண்பதுவும் நன்றே

  2. admin Avatar
    admin

    வாழ்த்துகள் நித்யா, சீனி!

  3. ICM Fan Avatar
    ICM Fan

    Great and congrats.