கணியம் அறக்கட்டளை மே, ஜூன் 2019 மாத அறிக்கை

Report in Tamil Report in English

கணியம் அறக்கட்டளை மே, ஜூன் 2019 மாத அறிக்கை

 

தொலை நோக்கு – Vision

தமிழ் மொழி மற்றும் இனக்குழுக்கள் சார்ந்த மெய்நிகர்வளங்கள், கருவிகள் மற்றும் அறிவுத்தொகுதிகள், அனைவருக்கும் கட்டற்ற அணுக்கத்தில் கிடைக்கும் சூழல்

பணி இலக்கு – Mission

அறிவியல் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒப்ப, தமிழ் மொழியின் பயன்பாடு வளர்வதை உறுதிப்படுத்துவதும், அனைத்து அறிவுத் தொகுதிகளும், வளங்களும் கட்டற்ற அணுக்கத்தில் அனைவருக்கும் கிடைக்கச்செய்தலும்.

நிகழ்ச்சிகள்

1000 மின்னூல்கள்

1000 மின்னூல்களை ஒருங்குறி வடிவில் வாங்குவதற்கான நன்கொடை வேண்டுகோள் இங்கே – http://www.kaniyam.com/call-for-donation-to-buy-1000-books-in-unicode-format/ ஒரு இனிய செய்தி கனடாவில் உள்ள டொரன்டோ பல்கலைக்கழகம் (UTSC) , மின்னூல்களுக்கான மொத்த தொகையையும் நன்கொடையாக அளித்துள்ளது. ஈடாக, அனைத்து நூல்களையும் குறுகிய காலத்தில், epub, mobi, PDF, HTML, txt, odt வடிவங்களில் மாற்றி,அட்டைப்படம் சேர்த்து, விரைவில் வெளியிட வேண்டும். இதற்கான முழுநேரப் பணியாளர்கள் தேர்ந்தெடுத்தல், மின்னூலாக்கப் பயிற்சிகள், ஆவணங்கள், காணொளிகள், கணியம் – டொரன்டோ பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், மின்னூல்களை பொதுக்கள உரிமையில் வெளியிடுவதற்கான அறிவிப்பு ஆவண உருவாக்கம் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இவற்றுக்கான பொது அறிவிப்பை வெளியிடுவோம். 3-4 முழுநேரப் பணியாளர்கள் நியமிக்க உள்ளதால், அவர்களுக்கான ஊதியம், இதர செலவுகளுக்கான நன்கொடைகளை வரவேற்கிறோம். இத்திட்டத்திற்கு தொடர்ந்து நன்கொடை அளித்து வரும் அனைவருக்கும் நன்றிகள்.

செயல்கள்

எண் செயல்கள் இந்த மாதம் மொத்தம் இம்மாதம் பங்களித்தோர்
1 FreeTamikEbooks.com வெளியீடுகள் 41 552 லெனின் குருசாமி, அன்வர், சீ. இராஜேஸ்வரி, G.சுமதி, ஜுல்பிஹார் அஹமது
2 கணியம் கட்டுரைகள் 40 806 து.நித்யா – இரா. அசோகன் – கலாராணி – ச.குப்பன் – மகாலட்சுமி
3 கணியம் காணொளிகள் 12 44 து.நித்யா – மகாலட்சுமி

விக்கிமூலம்

விக்கிமூலத்தில் கணியம் திட்டத்துக்கென ஒரு பக்கம் உருவாக்கப்பட்டது. அதில் திட்டத்தின் குறிக்கோள்கள், பங்களிப்போருக்கான வழிகாட்டுதல்கள் எழுதப்பட்டன. இது வரை 9 பேர் இணைந்துள்ளனர். ஒரு மின்னூல் முழுமையாக மெய்ப்பு பார்க்கப்பட்டு, சரி பார்க்கப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 30 மின்னூல்கள் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளன. விரைவில் அவை சரி பார்க்கப்படும். மின்னூல்களின் பட்டியல் இங்கே எழுதப்படுகிறது. காண்க https://ta.wikisource.org/wiki/விக்கிமூலம்:கணியம்_திட்டம்

கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியீடுகள்

  • பிலோ இருதயநாத் நூல்களை சேகரித்து அவற்றை கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட பணிகள் நடைபெற்று வருகின்றன. காண்க
  • பயணம் பதிப்பகம் நூல்களை கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட பணிகள் நடைபெற்று வருகின்றன. காண்க
  • புலவர் ஞானசம்பந்தம் புத்தகங்கள் கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் வெளியிட பணிகள் நடைபெற்று வருகின்றன. காண்கhttps://connect.fshm.in/notice/9j1b50tbPK5K14a9ce
  • மக்கள் பாடகி செல்வி ரோஜா ஆதித்யா தன்னுடைய மக்கள் பாட்டு you tube Channel-யை youtube standerd licence-ல் இருந்து creative commons CC-BY உரிமத்தை மாற்றம் செய்துள்ளார் அவருக்கு கணியம் அறக்கட்டளை சார்பில் வாழ்த்துகள். காண்க

கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் பலரும் தமது படைப்புகளை வெளியிடக் கோரி, உதவி வரும் அன்வர், கலீல் ஜாகீர் இருவருக்கும் நன்றி

மென்பொருட்கள்

  1. சங்க இலக்கியம் – ஆன்டிராய்டு குறுஞ்செயலி வெளியீட்டைத் தொடர்ந்து, இணைய தளமாகவும் வெளியிட உள்ளோம். தளத்தை அனிதா உருவாக்கி வருகிறார். விரைவில் வெளியிடுவோம். விவரங்கள் இங்கே
  2. இயந்திரக் கற்றல் மூலம் கட்டற்ற மென்பொருளாக தமிழ் எழுத்துணரி உருவாக்கம் தொடங்கப்பட்டுள்ளது. விவரங்கள் இங்கே
  3. தானியக்கமாக அட்டைப்படங்களை உருவாக்கம் செய்ய மென்பொருள் உருவாக்கப்பட்டு வருகிறது. விவரங்கள் இங்கே

பழைய நூல் Scan செய்தல்

1888 ல் வெளியான ‘பதார்த்த குண சிந்தாமணி’ நூல் வாரண்ட் பாலா அவர்கள் மூலம் கிடைக்கப் பெற்றோம். greendms.in கல்யாண் அவர்களிடம் நூலை scan செய்து தந்துள்ளார். விரைவில் PDF ஆக வெளியிடுவோம். விவரங்கள் இங்கே

பெயர்ச்சொற்களைத் தொகுத்தல்

தமிழின் அனைத்து பெயர்ச்சொற்களையும் தொகுக்கும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். விவரங்கள் இங்கே இந்த விரிதாளில் https://docs.google.com/spreadsheets/d/1FqiFLstsTo6DXsPKPKzp7iPKR49Ml2k81UPR6Nq6inQ/edit?usp=sharing மொத்தம் 83695 பெயர்ச்சொற்கள் சேர்க்கப் பட்டுள்ளன. அயராது இப்பணிக்கு பங்களிக்கும் திவ்யா அவர்களுக்கு நன்றி.

OpenStreetMap.org சொற்களை தமிழாக்கம் செய்தல்

OpenStreetMap.org ல் சென்னையில் உள்ள இடங்களை தமிழாக்கம் செய்யும் திட்டம் இது. இதன் செயல்களை இங்கே காணலாம். பங்களிப்போர் – அனிதா, அருணாசலம்.

Scan, OCR, Proofread

எழுத்தாளர்கள் தம் படைப்புகளை கிரியேட்டிவ் காமன்சு உரிமையில் தரும்போது, பலரும் அச்சு நூலாகவோ அல்லது PDF ஆகவே தருகின்றனர். அவற்றை, Scan, OCR, Proofread செய்து மின்னூலாக வெளியிடும் பணிகளைத் தொடங்கியுள்ளோம். தாரா அவர்கள் முழுநேரப் பணியாளராக இணைந்துள்ளார். பங்களிப்போர் – அன்வர் (நூல்களைப் பெறுதல்), லெனின் குருசாமி (Scan), அன்வர் (OCR), தாரா (Proofread) இதுவரை 1600 பக்கங்கள் இதுவரை மெய்ப்பு பார்க்கப் பட்டுள்ளன. திட்டத்தின் செயல்பாடுகளை இங்கே காணலாம்.

புதிய திட்டங்கள்

பல்வேறு புதிய திட்டங்களுக்கான உரையாடல்களை இங்கே பதிந்து வருகிறோம். https://github.com/KaniyamFoundation/ProjectIdeas/issues அவற்றுல் சில.

 

இம்மாத நன்கொடையாளர்கள்

எண் பெயர் தொகை
1 பெயரிலி 500
2 ராஜீவ் 1,000
3 கை.சங்கர் 10,000
4 சுப. இரத்தினகிரி 1,000
5 பெயரிலி 2,000
6 பெயரிலி 2,000
7 விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் பயனர் குழு 20,000
8 பெயரிலி 2,000
9 பனகுடி சங்கர குமார் 1,000
10 பெயரிலி 1,000
11 திவ்யா 1,000

மொத்தம் – ரூ 41,500 இணைய வளங்கள் நன்கொடைகள்

  • நூலகம் அறக்கட்டளை – சர்வர் (ரூ 350/மாதம்)
  • E2E Networks – சர்வர் ( ரூ 730/மாதம்)

சென்ற மாத இருப்பு – ரூ 1,04,050

 

செலவுகள்

  1. FTE செயலி வெளியீட்டு விழா, விழுப்புரம் – ரூ 17,700
  2. பவித்ரா – ரூ 4,555 – விக்கி மூலம் மெய்ப்பு ஊக்கத் தொகை
  3. முன்னேற்றப் பதிப்ப நூல்கள் வாங்கியதற்காக – ரூ 800
  4. பதார்த்த குண சிந்தாமணி Scan – ரூ 1,500

மொத்த செலவுகள் – ரூ 24,555 மொத்தம் கையிருப்பு – ரூ 1,04,050 + ரூ 41,500 – ரூ 24,555 = ரூ 1,20,995 இந்த இணைப்பில் அனைத்து வரவு, செலவு விவரங்கள் பகிரப்படுகின்றன. https://docs.google.com/spreadsheets/d/1zBXZzjYP_WKfm4y3EpTYw5yOTOeA-sSp8mcNjjNAUe0/edit?usp=sharing

 

வங்கிக் கணக்கு விவரங்கள்

Kaniyam Foundation
Account Number : 606 1010 100 502 79
Union Bank Of India
West Tambaram, Chennai
IFSC - UBIN0560618
  • உங்கள் நன்கொடைகளை இந்தக் கணக்குக்கு அனுப்பி, கணியம் அறக்கட்டளை செயல்களை ஆதரிக்க வேண்டுகிறோம்.
  • நன்கொடைகளை அனுப்பியபின், உங்கள் பெயர்,நன்கொடை விவரங்களை [email protected] க்கு அனுப்ப வேண்டுகிறோம்.

மேலும் விவரங்களுக்கு எழுதுக – [email protected]


Posted

in

by

ஆசிரியர்கள்: