நிகழ்வுக் குறிப்புகள் – FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா – 12/05/2019

FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி

FTE ஆன்ட்ராய்டு செயலியானது freetamilebooks.com. எனும் இணைய தளத்திலிருந்து மின்நூல்கள் வடிவில் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து நமது கைபேசி வழியே எளிதாக படிக்கும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு செயலாகும். இது அமேசான் கிண்டில் போன்ற கருவிகளில் படிக்கும் ஒரு அனுபவத்தை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது முற்றிலும் இலவசமான செயலி மற்றும் இலவசமான புத்தகங்கள் அடங்கியது.

App Linkhttps://play.google.com/store/apps/details?id=com.jskaleel.fte&hl=en_US

FreeTamilEbooks – இணையதளம்

FTE இணையதளத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்நூல்கள் A4 PDF, A6 PDF, .mobi, .epub ஆகிய வடிவங்களில் யாவரும் எளிதில் படிக்கும் வகையில் அமையப்பெற்ற ஒரு இணையதளம் ஆகும். கணியம் அறக்கட்டளை, கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்கள், நூலாசிரியர்கள், பங்களிப்பாளர்கள் மூலம் கடந்த ஐந்து வருடத்திற்கு மேலாக சிறந்த முறையில் செய்து கொண்டு வருகிறது. இதில் உள்ள அனைத்து புத்தகங்களும் கிரியேட்டிவ் காமன்ஸ்(CC) உரிமத்தின் கீழ் வெளியிடப்படுகிறது. இதன்மூலம் யாவரும் இலவசமாக பதிவிறக்கம் செய்து படித்து பகிரலாம் என்பதாகும்.

கணியம் அறக்கட்டளைhttp://www.kaniyam.com/foundation/

விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம்https://villupuramglug.wordpress.com/

விழா அழைப்பிதழ்

நாள் – மே 12, 2019
நேரம் – காலை 9.30 முதல் மதியம் 1.00 வரை

இடம் – தேவி பாலா கூடம், விழுப்புரம்

FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழா

FTE ஆன்டிராய்டு செயலி வெளியீட்டு விழாவினை த. சீனிவாசன்(கணியம் அறக்கட்டளை) அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்கள் அவர் பேசுகையில் இந்த FreeTamilEbooks-ன் தேவை மற்றும் எவ்வாறு இதனை செய்து கொண்டிருக்கிறோம் யார் யார் பங்களிப்புகள் இதில் உள்ளன, எவ்வாறு இவ்வளவு முடிந்தது என்பதை பற்றி கூறினார். அதனைத் தொடர்ந்து உ. கார்க்கி(விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம்) அவர்கள் வரவேற்புரை கூறி தொடங்கி வைத்தார். உ. கார்க்கி அவர்கள் கணியம் அறக்கட்டளை மற்றும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் பற்றி கூறினார். பிறகு FreeTamilEbooks செயலியினை முனைவர் து. ரவிக்குமார் (எழுத்தாளர் & விழுப்புரம் எம். பி) மற்றும் திரு. இரா. ராமமூர்த்தி(வழக்கறிஞர் & முன்னாள் எம்.எல்.ஏ) அவர்கள் முன்னிலையில் செயலி வெளியிடப்பட்டது.

கலீல் ஜாகீர்(செயலி வடிவமைப்பாளர்) அவர்கள் இந்த செயலினை பற்றி விளக்கி அது எவ்வாறு செயல்படுகிறது அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும் மேலும் அவரின் கடந்த கால விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் மற்றும் கணியம் அறக்கட்டளை உடனான அனுபவத்தினை பகிர்ந்து, அவரின் ஆர்வத்தின் மூலம் உருவான இந்த FTE செயலியை பற்றி விரிவாக எடுத்துக் கூறி விளக்கினார். பிறகு வாழ்த்துரை கூறிய கோ. செங்குட்டுவன் (எழுத்தாளர்) அவர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து சிறப்பித்தார் பிறகு அவர் FTE செயலியில் தன்னுடைய தனிப்பட்ட நிறைகுறைகளை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வாழ்த்துரை கூறிய திரு ரவி கார்த்திகேயன்(மருதம் அறக்கட்டளை) தனது அனுபவத்தினையும், கருத்துக்களையும் FTE வடிவமைப்பாளர்கள் மற்றும் அதற்காக செயல்பட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்து தெரிவித்து விடை பெற்றார்.

சிறப்புரையாற்ற வந்த திரு ராமமூர்த்தி (வழக்கறிஞர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ) அவர்கள் தனது யதார்த்தமான நகைச்சுவையான பேச்சினை வெளிப்படுத்தினார். மேலும் புத்தகங்களின் தேவையையும் அதன் அருமையை பற்றியும் விளக்கிக் கூறினார்.

முனைவர் து ரவிக்குமார் (எழுத்தாளர் மற்றும் விழுப்புரம் எம். பி) அவர்கள் இந்த FTE செயலினை பற்றி சிறப்பித்துப் பேசி வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் இந்த இணையதள மாய உலகத்தில் நாம் எவ்வாறு பயணிக்கிறோம் என்பது பற்றியும் விளக்கினார். இணையதள உலகில் ஒவ்வொரு மனிதனும் ஒரு தரவாகவே கருதப்படுகிறான் என்பது பற்றியும் அதனால் மனித குலத்திற்கு ஏற்படும் விளைவுகள் பற்றியும் மனித உள்ளத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் பற்றியும் பற்றிக் கூறி விளக்கினார்.

இறுதியாக நன்றியுரை கூற வந்த திரு சதீஷ் குமார் அவர்கள் கட்டற்ற மென்பொருள் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் பற்றியும் கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன அதன் தேவை எவ்வாறு இவ்வுலகில் தேவைப்படுகிறது என்பதைப் பற்றியும் சிறப்பாக விளக்கினார். மேலும் விழாவினை நல்ல முறையில் சிறப்பித்து வைத்த அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

விழாவிற்கு வந்து சிறப்பித்து செயலாற்றிய விருந்தினர்கள் அனைவருக்கும் கணியம் அறக்கட்டளை மற்றும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குடும்பம் சார்பாக நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

காணொளிகள்FTE செயலி வெளியீட்டு விழா

FTE தமிழ் செயலி வெளியீட்டு விழா | கோ.செங்குட்டுவன் | இரா.இராமமூர்த்தி | இரவிகார்த்திகேயன்

முனைவர் து ரவிக்குமார் | FTE தமிழ் செயலி வெளியீட்டு விழா | து.இரவிக்குமார்

FreeTamilEbooks ஆன்டிராய்டு செயலி உருவாக்கிய கலீல் ஜாகீர் அவர்களின் பேட்டி

செய்தித்தாள்களில் – FTE செயலி வெளியீட்டு விழா பற்றி

புகைப்படங்கள் – FTE செயலி வெளியீட்டு விழா

More images – photos.app.goo.gl/7kgC7KpHsUvGuK467

நன்றி

  • விழாவினை சிறப்பித்த விருந்தினர்கள் மற்றும் எழுத்தாளர்கள்
  • விழாவிற்கு வருகை தந்த விழுப்புரம் பகுதி மக்கள்
  • கணியம் அறக்கட்டளை ஆர்வலர்கள் மற்றும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் ஆர்வலர்கள்
  • FTE App Developer – Mr. Khaleel
  • Free Tamil Ebooks Creation – Kaniyam Foundation
  • Event Organize – VillupuramGLUG and Kaniyam Foundation
  • Invitation & Banner design – Mr. Malik
  • Photos – Mr. Shrinivasan & VGLUG members
  • செய்தித்தாள்கள் மற்றும் Youtube Channels – Shruti TV & Comrade Talkies

 

செலவு விவரங்கள்

அழைப்பிதழ் – ரூ.500
நோட்டீஸ் – ரூ.3000
நினைவு பரிசு – ரூ.5000
நோட்டீஸ் விநியோகித்தல் – ரூ.1500
பேனர் – ரூ.500
11.05.19 இரவு உணவு (Volunteers) – ரூ.900
12.05.19 காலை உணவு (Volunteers) – ரூ.400
பெட்ரோல், இதர செலவுகள் – ரூ.400
அரங்கு வாடகை – ரூ. 4000
காமிரா – ரூ. 1500

மொத்தம் – ரூ.17,700

 

——

மணிமாறன் – [email protected]


Posted

in

by

ஆசிரியர்கள்: