
அறிஞர் அண்ணாவின் புரட்சிகரமான நாடகப் படைப்புகளில் ஒன்று “நீதிதேவன் மயக்கம்”. காலம் கடந்தும் சிந்திக்கத் தூண்டும் இப் படைப்பு, தொன்றுதொட்டுப் புகழப்படும் காவியக் கதாபாத்திரங்களை, புதிய கண்ணோட்டத்தில் அணுகி, நீதி, தர்மம், இரக்கம் போன்ற அறப் பண்புகளின் உண்மை நிலையை மறுபரிசீலனை செய்கிறது.
இராவணனின் மீதான “இரக்கமற்ற அரக்கன்” என்ற குற்றச்சாட்டை மறுவிசாரணை செய்யும் களமாக இந்நாடகம் விரிகிறது. கம்பராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட இராவணன், தன் மீதான பழியைத் துடைக்க, தனது வாதத்திறமையால் கம்பர், இராமன், விசுவாமித்திரர், பரசுராமன், துரோணர், கோட்புலி நாயனார் போன்ற பெருமைக்குரியவர்களை நீதி மன்றத்தில் கேள்வி கேட்கிறான். அவரவர் கடமை, இலட்சியம், சூழ்நிலை காரணமாக அவர்கள் இரக்கமின்றி நடந்துகொண்ட தருணங்களைச் சுட்டிக்காட்டி, ‘அரக்கன்’ யார் என்ற கேள்விக்குப் புதிய பரிமாணத்தை அளிக்கிறான்.
நீதிதேவனே இராவணனின் ஆணித்தரமான வாதங்களால் நிலை குலைந்து, மயக்கமடையும் காட்சி, தர்மத்தின் அடிப்படைகளையே நாடகம் கேள்விக்குள்ளாக்குவதைச் சித்திரிக்கிறது. பாரம்பரியக் கதைகளின் ஆழமான விளக்கங்களையும், சமூகப் பார்வைகளையும் புரட்டிப்போடும் இப் படைப்பு, படிப்பவர் மனதிலும் ஒரு “மயக்கத்தை” உருவாக்கி, உண்மை எது எனச் சிந்திக்கத் தூண்டும். புதுமையான வர்க்க வாதங்களை முன்வைத்த அண்ணாவின் கூரிய அறிவுக்குச் சான்றாய் இந்நாடகம் மின்னூலாக உங்கள் கைகளில் தவழ்கிறது.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “நீதிதேவன் மயக்கம் epub” NethithevanMayakkam.epub – Downloaded 13341 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “நீதிதேவன் மயக்கம் A4 PDF” NethithevanMayakkam_A4.pdf – Downloaded 4021 times –செல்பேசிகளில் படிக்க
Download “நீதிதேவன் மயக்கம் 6 inch PDF” NethithevanMayakkam_6_inch.pdf – Downloaded 1301 times –நூல் : நீதிதேவன் மயக்கம்
ஆசிரியர் : அறிஞர் அண்ணா
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
அட்டைப்படம் : க சாந்திபிரியா
மின்னூலாக்கம் : சீ.ராஜேஸ்வரி
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : Public Domain – CC0. கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம். பகிரலாம். மேம்படுத்தலாம். விற்கலாம்.
பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 529

Leave a Reply