
“தமிழ் இன்பம்” என்னும் தலைப்பே இந்நூலின் சுவையை எடுத்துரைக்கின்றது. செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை எனப் போற்றப்படும் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் கைவண்ணத்தில் உருவான இக்கட்டுரைத் தொகுப்பு, தமிழே இன்பம், இன்பமே தமிழ் என்ற ஆழ்ந்த உண்மையை வாசகர்களுக்கு உணர்த்துகின்றது.
அளந்து, தெளிந்து, குளிர்ந்த அருவிபோல் பாயும் இவரது உரைநடை, எந்தப் பொருளை எடுத்தாலும் மனத்திரையில் சொல்லோவியமாக நடமாடச் செய்யும் வல்லமை கொண்டது. இலக்கிய உலகின் அரிய சொல்லணிகளாய் மிளிரும் இக்கட்டுரைகள், தமிழ் வளர்ச்சிக்கும், ஆழமான பொருளாராய்ச்சிக்கும் துணை நிற்கின்றன.
புறநானூறு, சிலப்பதிகாரம், திருக்குறள், கம்பராமாயணம், பெரியபுராணம் போன்ற சங்க இலக்கியம் முதல் பிற்காலப் பெருநூல்கள் வரை பல்வேறு தமிழ் நூல்களின் சுவையை இந்நூல் இனிமையாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. ‘மேடைப் பேச்சு’, ‘இயற்கை இன்பம்’, ‘காவிய இன்பம்’, ‘அறிவும் திருவும்’, ‘மொழியும் நெறியும்’, ‘இருமையில் ஒருமை’ எனப் பல்வகைத் தலைப்புகளில் அமைந்த கட்டுரைகள், தமிழரின் பண்பாடு, வரலாறு, வாழ்வியல் அறங்கள் எனப் பல பரிமாணங்களை எடுத்துரைக்கின்றன.
கண்ணகிக் கூத்து, சேரனும் கீரனும், கர்ணனும் கும்பகர்ணனும் போன்ற கட்டுரைகள் படிக்கப் படிக்கத் தெவிட்டாத இன்பத்தைத் தருகின்றன. மாணவர்களும் தமிழ் ஆர்வலர்களும் தமிழை ஆழமாகப் புரிந்துகொள்ளவும், அழகிய தமிழில் பேசவும் எழுதவும் வழிகாட்டும் இந்நூல், தமிழ் இன்பம் நுகர ஒரு பொக்கிஷம். இத்தேன் துளிகளைப் பருகி, தமிழின் மாண்பில் திளைப்போம்.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “தமிழ் இன்பம் epub” ThamizhInbam.epub – Downloaded 2000 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “தமிழ் இன்பம் A4 PDF” ThamizhInbam_A4.pdf – Downloaded 2965 times –செல்பேசிகளில் படிக்க
Download “தமிழ் இன்பம் 6 inch PDF” ThamizhInbam_6_inch.pdf – Downloaded 1881 times –நூல் : தமிழ் இன்பம்
ஆசிரியர் : ரா.பி.சேதுப்பிள்ளை
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
அட்டைப்படம் : த. சீனிவாசன்
மின்னூலாக்கம் : சீ. ராஜேஸ்வரி
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : Public Domain – CC0. கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம். பகிரலாம். மேம்படுத்தலாம். விற்கலாம்.
பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 462





Leave a Reply