
வணக்கம். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நான் ஆங்கில வழி கல்வியை பெற்றாலும், எனது தமிழ் ஆசிரியர்களால் உந்தப்பட்டோ, அல்லது என் தாய் மொழி தமிழ் என்பதாலோ தமிழில் எழுதும் என் ஆசைத் தொடர, கதைகள் மற்றும் கவிதைகள் எழுத முயற்சி செய்வதுண்டு. அந்த வகையில் ‘உணரி’ என்னுடைய ஒரு முயற்சியாகும். ‘நைலான் கயிறு’ என்ற சுஜாதாவின் நாவலைப் படித்ததினால் உந்தப்பட்டு இந்த நாவலினை எழுதியுள்ளேன். அந்த நாவலின் தனித்துவம் என்னவெனில், அந்தக் கதையினை சுஜாதா, இரண்டு பாகங்களாக ஒவ்வொரு சாப்டரிலும் சொல்லி வைத்திருப்பார். இரண்டு பாகங்களும் கடைசியில் ஒன்றை ஒன்று சந்தித்து கதைக்கான முடிச்சிகளை அவிழ்த்து, கதையை ஒன்று சேர்த்து முடித்து வைக்கும். அதைத் தழுவிய இந்த நாவல் ‘உணரி’யில், சாய்வெழுத்தில் வருவது ஒரு பகுதி, நேர் எழுத்தில் வருவது மற்றொரு பகுதி. இரண்டும் ஒன்று சேரும் இடத்தில் தான் கதை முற்றுகிறது. உங்களுடைய அரிய நேரத்தில் ஒரு அரை மணி நேரம் செலவிட்டு இதைப் படிக்கவிருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். எனது முயற்சி திருவினையாக, உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளவும்.
கதையை எழுதிமுடிக்க ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும். உறவினருக்கும் எனது நன்றிகள். இந்தக் கதையை வெளியிட உதவி புரிந்த நண்பர் ப்ரதீப்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
ர.திவ்யா ஹரிஹரன்
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “உணரி epub” unari.epub – Downloaded 1835 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “உணரி A4 PDF” unari-a4.pdf – Downloaded 2046 times –செல்பேசிகளில் படிக்க
Download “உணரி 6 inch PDF” unari-6inch.pdf – Downloaded 1249 times –புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
மின்னூல் வெளியீடு : FreeTamileBooks.com
உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 323
நவம்பர் 3 2017





Leave a Reply