ராஜராஜ சோழனும் விஞ்ஞானி ராஜாமணியும்
ஆசிரியர் :
யோகி (விஜயகுமார் ஜெயராமன்),
vijayacumar21@gmail.com
மின்னூல் வெளியீடு :
https://freetamilebooks.com
அட்டைப்படம்,மின்னூலாக்கம் :
பிரசன்னா,
உரிமை :
Creative Commons Attribution-NonCommercial-
ShareAlike 4.0 International License.
உரிமை :
கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம்,பகிரலாம்
சோழர்களைப் பற்றி அறிந்து கொள்ள பல வழிகள் இப்போது உள்ளது. உதாரணங்கள்: நீலகண்ட சாஸ்திரி அவர்கள் சோழர்களைப் பற்றி முழுமையாக எழுதிய புத்தகம், விக்கிபீடியா மற்றும் பல வரலாற்றுப்புத்தகங்கள். ஆனாலும், தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சோழ வம்சத்தைப் பற்றியும் அந்த வம்சத்தில் அரசாண்ட மாமன்னன் ராஜராஜ சோழனைப் பற்றியும் அதிகம் அறிந்து கொண்டது அமரர் கல்கி அவர்களின் “பொன்னியின் செல்வன்” என்ற வரலாற்றுப் புதினம் மூலமாகத் தான் இருக்கும். இந்த நூற்றாண்டில் இந்த வரலாற்றுப் புதினம் அளவுக்கு வேறு எந்த புத்தகமும் தமிழர்களை ஈர்க்கவில்லை.
மாமன்னன் ராஜராஜ சோழன் தென்னிந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளை ஒரே குடையின் கீழ் அரசாண்ட பேரரசன். 1000 ஆண்டுகளுக்கு முன்பே மிகச் சிறந்த ஆட்சி நிர்வாக முறையை அமல்படுத்தியவன். “குடவோலை” என்ற சிறப்பான தேர்தல் முறையையும் கடைப்பிடித்தவன்.
விஞ்ஞானி ராஜாமணி கண்டுபிடித்த கால இயந்திரம் மூலமாக மாமன்னன் ராஜராஜ சோழன் நிகழ்காலத்துக்கு வருகிறார். 1000 ஆண்டுகளுக்கு பின் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு வியக்கிறார். அதே நேரத்தில், மக்களாட்சியின் ஆணிவேரான நமது தேர்தல் முறையில் நடக்கும் கேலிக் கூத்துகளைப் பார்த்து நொந்து கொண்டு தன் காலத்துக்கே திரும்புகிறார்.
இது முழுக்க முழுக்க ஒரு கற்பனைக் கதை. இக்கதையில் இடம்பெறும் சம்பவங்கள் மற்றும் பெயர்கள் யாரையும் அல்லது எவரையும் குறிப்பனவில்லை.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “ராஜராஜ சோழனும் விஞ்ஞானி ராஜாமணியும் epub” RajaRajan%20Rajamani%20-%20Vijayakumar%20Jayaramana.epub – Downloaded 8842 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “ராஜராஜ சோழனும் விஞ்ஞானி ராஜாமணியும் A4 PDF” RajaRajan_Rajamani_A4.pdf – Downloaded 6815 times –செல்பேசிகளில் படிக்க
Download “ராஜராஜ சோழனும் விஞ்ஞானி ராஜாமணியும் 6 inch PDF” RajaRajan_Rajamani_6inch.pdf – Downloaded 3000 times –





Leave a Reply