காதலிசை – கவிதைகள் – ராகவேந்திரன் பாலகிருஷ்ணன்

காதலிசை ! cover
ராகவேந்திரன் பாலகிருஷ்ணன்
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை –  https://creativecommons.org/licenses/by-nc-nd/4.0/
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
ஆசிரியர் – ராகவேந்திரன் பாலகிருஷ்ணன் – writer.raga@gmail.com
அட்டைப்படம் – மனோஜ்குமார் –  socrates1857@gmail.com

கணினி பழுதுநீக்கும் துறையைச் சார்ந்தவன். பால்ய பருவமுதல்  தமிழின் மேல் கொண்ட அதீத காதல் தான் எனக்குக் கவிதைகளாகவும், கடிதங்களாகவும் கொட்டியது.

நான் என் வருங்கால காதலியுடன் எப்படி எப்படி எல்லாம் பேச வேண்டும் என்று நினைத்தேனோ அவையெல்லாம் இன்று கவிதைகளாய் புதைந்து கிடக்கிறது.

டீக்கடையில் பஜ்ஜியை சுவைத்து விட்டு, எண்ணெய் கசிந்தக் காகிதத்தை கூடப் படித்து விட்டு தூக்கி எரியும் அளவிற்கு படிப்பதில் ஆர்வம் கொண்டவன். முகநூலில் அவ்வப்போது கிறுக்கியது அனைத்தையும் இந்நூலில் சில இடங்களில் சேர்த்துள்ளேன். என்னை எழுத்தாளனாய் மாற்றியது என் முகநூல் பக்கமே.

மது, மாது போதையாம். யார் சொன்னார் ? ஒரு நல்லப் புத்தகத்தில் கவனத்தைச் செலுத்திப் பாருங்கள் எவ்வளவு போதை என்று நீங்களே வியப்பீர்கள். கவிஞர் கண்ணதாசன்  எழுத்துக்களைப் பார்த்து பார்த்துப் திகைத்தவன். சுஜாதாவை என் மானசீக குருவாகக் கொண்டவன்.

ஒருவனுக்கு மனதில் வெளியில் சொல்லமுடியாத சில விஷயங்கள் இருக்கின்றன. இவரிடம் சொன்னால் அதுத் தப்பாகி விடுமோ? அவரிடம் இதைச் சொல்லலாமா? என்று பல விஷயங்களை நாம் நமது மனதில் பூட்டுப் போட்டு பூட்டிக் கொண்டிருக்கிறோம்.

அதனால் நமக்கு என்னப் பயன் ? ரத்தக்கொதிப்பு வந்தது தான் மிச்சம். சொல்ல முடியாத சந்தோஷங்களையும், வெளியில் சொல்ல முடியாத துக்கங்களையும் ஒரு காகிதத்தில் எழுதிப் பாருங்கள். அதுத் துண்டுக் காகிதமானாலும் சரி.  கவிதை வடிவிலோ அல்லது உரைநடை வடிவிலோ எழுதுங்கள். உங்கள் சந்தோஷங்கள் இரட்டிப்பாகும்.துக்கங்கள் பாதியாய் குறையும். அந்த மாதிரி என் சந்தோஷங்களும், என் துக்கங்களுமே இந்த படைப்பிற்கு அச்சாரம்.

நன்றி !

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “காதலிசை epub” kadhalisai.epub – Downloaded 2621 times –

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “காதலிசை A4 PDF” kadhalisai-A4.pdf – Downloaded 2518 times –

செல்பேசிகளில் படிக்க

Download “காதலிசை 6 inch PDF” kadhalisai-6-inch.pdf – Downloaded 1301 times –

பிற வடிவங்களில் படிக்க – Archive.org

புத்தக எண் – 263

செப்டம்பர் 5 2016

மேலும் சில கவிதைகள்

  • தேவதை சரணாலயம்
  • தேவதைகளின் பொழுது போக்கு கவிதை எழுதுவது!
  • வலிப்போக்கனின் சமூகச் சிதறல்கள்

Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.